Author: Editor TN Talks

விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணியளவில் தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எனக் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு, தேர்தலுக்குப் பின்னர் 75 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே முழுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், சொன்னதைச் செய்ய நேரம் கேட்ட முதலமைச்சர், இன்னும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாவது விவசாயிகளிடம் சொல்லியிருக்க வேண்டும் எனச் சாடியுள்ளார். மேகதாது விவகாரத்தில் த.வெ.க. அரசின் செயல்படாத நிலையில் இருப்பதாக விமர்சித்துள்ள மு.க.ஸ்டாலின்,  தவெக அரசைப் பொறுத்தவரையில், எந்தத் தகவல்களிலும்…

Read More

குதிரை பேர வழக்கு தொடர்பாக திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் செந்தில்பாலாஜி கையெழுத்திட வராததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தவெக எம்.எல்.ஏவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் காலையும் மாலையும் கையெழுத்திட்டு வருகிறார். இன்று டாஸ்மாக் வழக்கில் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அவர் வழக்கமாக கையெழுத்திடவேண்டிய நேரத்துக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்துக்கு அவர் வராததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி  வராதது குறித்து காவல்துறையிடம் எந்த வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த பரபரப்புக்கிடையே செந்தில்பாலாஜி விடுதி அறையில் இல்லை எனவும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Read More

ஓசூரில் அரசு நிலங்களில் காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த எஸ்.ஜி.நாயஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஓசூர் சிங்காரவேலு முதலியார் தெருவில் 14 நில உரிமையாளர்களுக்கு சொந்தமான நிலங்களில் தனது குடும்பம் உள்ளிட்ட 50 குடும்பங்கள் வாசிப்பதாகவும், இந்த பகுதியை நேதாஜி சாலையுடன் இணைக்கும் பொது சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். எனவே, பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், என்.மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராமமூர்த்தி, தங்கள் தெருவிலேயே வசிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வும்,  தற்போதைய எம்.பி.-யுமான கே.கோபிநாத் ஆக்கிரமித்து, இரும்பு கேட் போட்டுள்ளதுடன், கடைகளையும் கட்டியுள்ளார்; பதவி செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, வருவாய் மற்றும் நகராட்சித் துறை அதிகார துஷ்பிரயோகம் செய்து, புறம்போக்கு நிலங்களுக்குப் பட்டா பெற்றுள்ளதாகவும்…

Read More

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று காங்கிரஸ், இடது சாரிகள், ஐயூ எம்.எல்.ஏ கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்றது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துள்ளனர். தொடர்ந்து அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் தவெக-வில் ஓ.பன்னீர்செல்வம் இணையப் போவதாக செய்தி பரவி வருகிறது. அதிமுகவின் முக்கிய முகமாகவும் தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் நிலவும் உள்கட்சி குழப்பத்தால் வெளியேற்றப்பட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இந்தநிலையில்  தனது…

Read More

தமிழகத்தில் எல் நினோவின் தாக்கத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து அங்கு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க சிறப்புக் குழு அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், அண்ணா பல்கலைக்கழக கால நிலை மாற்றத்துறை தலைவர் காமினி, சென்னை ஐஐடி நீர் மேலாண்மைத்துறை  பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், தமிழ்நாடு கால நிலை மாற்ற நிர்வாக குழு உறுப்பினர் அறிவுடை நம்பி அப்பாதுரை, தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவன ஆலோசகர் ரமேஷ் ராமசந்திரன், வானிலை ஆய்வாளர் பிரதீப் உள்ளிட்ட 7 நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் எல் நினோவால் ஏற்படும் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தை கண்காணித்து பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமையிடம் ஆலோசனை வழங்குதல், எந்தவொரு பேரிடரையும் உரிய நேரத்தில் எதிர்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல்,…

Read More

திருப்பத்தூரில் ஒப்பந்ததாரர்கள் முறையாக ஊதியம் வழங்காததால், குப்பை அள்ளும் பணியினை, நகராட்சி நிர்வாகமே டுத்து நடத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை நகராட்சிகளில், 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் உள்பட ஒப்பந்தப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். திமுக மாவட்ட துணைச் செயலளர் மோகன் என்பவர் நகராட்சியில் குப்பை அள்ளுதல் உள்ளிட்டப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிக்கு பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மோகன் 5 மாதமாக சம்பளத்தை வழங்கவில்லை எனவும் பலமுறை கேட்டும் அவர் செவி சாய்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மைப் பணியாளர்கல் இன்று, நகராட்சி கமிஷனர் சாந்தியை முற்றுகையிட்டு தங்களுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். அப்போது எங்களுக்கு ஐந்து மாத காலமாக சம்பளமே வரல, குப்பை வாருபவர்கள் தானே என எங்கள் மதிக்க மாட்டேங்குறாங்க,…

Read More

சேலத்தில் மாணவ  மாணவிகளை கல்லூரிகளில் சேர்த்து விடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளரை போலீசார் சிறைப்பிடித்துள்ளனர். சேலம் மாநகர் மூன்று ரோடு சுந்தரம் காலனி பகுதியை சேர்ந்த விஜயகுமார்  என்பவர் ஏர்னெஸ்ட் வழிகாட்டுதல்  உயர்கல்வி மையம் என்பதை நடத்தி வருகிறார். இந்த மையத்தில் பதிவு செய்யும் மாணவ மாணவிகளை நல்ல கல்லூரிகளில் சேர்த்து விடுவதாக கூறி வருகிறார். அதற்காக மாணவ மாணவிகள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அதற்காக அவர்கள் தேர்ச்சி பெற்ற உண்மையான சான்றிதழ்களை கொடுக்க வேண்டும் எனச் சொல்வதாக தெரிகிறது. இதனை நம்பி சேலம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பதிவு செய்து தங்களது சான்றிதழ்களை வழங்கி உள்ளனர். இதில் அந்த மாணவிகளுக்கு நல்ல கல்லூரிகள் மற்றும் தான் கேட்ட குரூப் கிடைக்காத பட்சத்தில் அந்த சான்றிதழை பெறும் பொழுது அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்று…

Read More

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் முறைகேடு வழக்கில் செந்தில்பாலாஜி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. முன் ஜாமீன் தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதி  ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குறிப்பிட்டு எந்த குற்றச்சாட்டும் இல்லை; பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் அதிகாரிகள் செய்த குற்றத்துக்கு செந்தில் பாலாஜிக்கு சம்பந்தமில்லை எனவும்  செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. காவல் துறை தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தில், ரூ.100 கோடி வரை முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால்  விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. புலன் விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும்  கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், முறைகேடு நடந்துள்ளதற்கும், அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதற்கும் ஆதாரங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம்…

Read More

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் மூலம் பயணிகள் பயனடைந்து வரும் நிலையில், தற்போது உருவாக்கப்பட்டு வரும் வழித்தடங்களுக்கான பணிகளை விரைந்து முடித்து செயலுக்கு கொண்டு வர மெட்ரோ பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. அதே போல், “பூவிருந்தவல்லி  – வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்க மத்திய அரசு  காலம் தாழ்த்தும் நிலையில் தமிழக அரசு ஏன் இன்னும் அழுத்தம் கொடுக்கவில்லை எனக் கேள்வியும் எழுந்துள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்க உள்ள புதிய மெட்ரோ ரயில் சேவையுடன் சேர்த்து  பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தையும் ஒரே நேரத்தில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறப்பட்டாலும், மாநில அரசு ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என பயணிகள் அங்கலாய்க்கின்றனர். அதே நேரம்,  நேற்று மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, “கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை 3வது முறையாக மத்திய அரசு நிராகரித்தது…

Read More

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருக்கும் அசாருதீனின் கோவை உக்கடத்தில் உள்ள  வீட்டில் அமலாக்கத் துறை  அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக  கைது செய்யப்பட்ட கோவையை சேர்ந்த அசாருதீன் கேரளா சிறையில் இருக்கிறார்.  உக்கடம் அன்பு நகர் மூன்றாவது வீதியிலுள்ள அவரது வீட்டில்,  அமலாக்கத் துறை (ED) அதிகாரிகள் இன்று தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பாதுகாப்புடன் நடைபெற்று வரும் இந்த சோதனையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் பணமோசடி (Money Laundering) தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் மின்னணு சாதனங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பின்னணி: கடந்த 2019-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின தொடர் குண்டுவெடிப்பின் மூளையாகக் கருதப்படும் ஜஹ்ரான் ஹாஷிமுடன் சமூக வலைதள தொடர்பில் இருந்ததாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) தீவிரவாத சித்தாந்தத்தை பரப்பியதாகவும்…

Read More