Author: Editor TN Talks
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ராமாயணா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. தமிழ் டிரெய்லரை 6 மணி நேரத்துக்குள் 3 லட்சத்து 69 ஆயிரம் பார் பார்த்துள்ளனர். ராமனாக ரன்வீர் கபூர், சீதையாக சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள இந்த ராமாயணா திரைப்படம் தீபாவளி அன்று முதல் பாகும் வெளியாகும் நிலையில் அதன் டிரெய்லர் இன்று வெளியாகி வைபை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்குகிறார். இவர் முன்னதாக தங்கல், சிச்சோரே ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில், இராவணனாக கேஜிஎப் புகழ் யாஸ், அனுமனாக சன்னி தியோல், கைகேயியாக லாரா தத்தா, சூர்ப்பணகையாக ரகுல் பிரீத் சிங் , மண்டோதரி: காஜல் அகர்வால் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையில் இரண்டு பாகங்களாக ராமயாணா உருவாகிறது. முதல் பாகம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2026-இல்…
காமன்வெல்த் விளையாட்டு 2026-ல் மகளிர் 51 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சாக்ஷி சவுத்ரி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். தற்போது தனது இலக்கு அந்த பதக்கத்தின் நிறத்தை தங்கமாக மாற்றுவதுதான் என்று அவர் உறுதியுடன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், வட அயர்லாந்தைச் சேர்ந்த கெய்ட்லின் ஃப்ரையர்ஸ்-ஐ சாக்ஷி 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். ஆட்டம் முழுவதும் சிறப்பான நகர்வு, துல்லியமான குத்துகள் மற்றும் கட்டுப்பாட்டான ஆட்டத்தால் ஆதிக்கம் செலுத்திய சாக்ஷி, மூன்று சுற்றுகளையும் 5-0 என்ற கணக்கில் வென்றார். இந்த வெற்றியின் மூலம் சாக்ஷி காமன்வெல்த் விளையாட்டில் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அரையிறுதியில் அவர் கனடாவின் ஆம்பர்-ஜேன் வால்-ஐ எதிர்கொள்கிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தங்கப் பதக்கப் போட்டிக்குத் தகுதி பெறுவார். வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி, “பதக்கத்தை உறுதி செய்தது முக்கியமான மைல்கல். இதனால் அழுத்தம்…
மாணவர்களின் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்க முயற்சிக்கும் யாரையும் மோடி அரசு ஒருபோதும் விட்டுவைக்காது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் அனைத்து மாணவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இன்று மக்களவையில் பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த மசோதா, இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் நோக்கில், பொதுத் தேர்வுகளின் புனிதத்தன்மையை குலைக்க முயற்சிப்பவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் வலுவான சட்ட ஏற்பாடுகளை கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்க முயற்சிக்கும் யாரையும் மோடி அரசு ஒருபோதும் விட்டுவைக்காது எனவும், தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முழு கடுமையையும் சந்திப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும் எனவும் உறுதி தெரிவித்துள்ளார்.
நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு, கடந்த 2023 ஆம் ஆண்டு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரும் கல்வி நிறுவனங்கள், எந்த பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளதோ, அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சேபம் இல்லா சான்று பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்குள் ஆட்சேபம் இல்லா சான்றை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேபம் இல்லை என கருதி, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரி கல்வி நிறுவனம் அளித்த விண்ணப்பித்தை நடைமுறைபடுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், யுஜிசி விதிகள் மாநில அரசின் கவுன்சிலிங் நடைமுறை, இட ஒதுக்கீடு நடைமுறை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பாதிப்பை என்பதால், இந்த விதிகளை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை…
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளி மாணவர்களுக்குப் புரதச்சத்து எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நல்நோக்கத்தோடு, மதிய உணவில் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து பாராட்டுக்குரியதுதான். மாணவர்களின் ஊட்டச்சத்தின் மீது அரசு காட்டும் இந்த அக்கறை வரவேற்புக்குரியது என்றாலும், இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் ஆபத்துகளையும் நாம் அலட்சியப்படுத்திவிட முடியாது. இன்றைய சூழலில், பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளிலேயே பல நேரங்களில் கெட்டுப்போன முட்டைகள் மாணவர்களுக்குச் சென்றடைவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முட்டைக்கே இந்த நிலை என்றால், கோழி இறைச்சியைப் பராமரிப்பதும், சுகாதாரமாகச் சமைத்து வழங்குவதும் பெரும் சவாலாக இருக்கும். அதற்குப் பதிலாக, வீடுகளில் பயன்படுத்துவது போல தரமான அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகள், சுண்டல்…
தமிழக வெற்றிக் கழக மாவட்ட துணைச் செயலாளர் சுடலை, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிரட்டி வருவதாக, முன்னாள் தவெக பெண் நிர்வாகி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆழ்வார் திருநகரி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி கமலா. தவெக ஒன்றிய துணைச் செயலாளராக இருந்த இசக்கி கமலா, தவெக நிர்வாகிகள் தன்னை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பாலா உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த இசக்கி கமலா, பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வரும் தவெகவை சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் வாத்து சுடலை மீது புகார் அளித்தார். சுடலையிடம் தான்…
சிறுபான்மை நிறுவனங்களின் சொத்துகளை அபகரிக்க சூழ்ச்சி செய்யும் ஒன்றிய அரசின், வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத்திற்கு (FCRA 2026 ) எதிராக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியாவின் நாடாளுமன்றத்தில் 2026 மார்ச் 25 அன்று அறிமுகப்படுத்திய FCRA 2026 ஒழுங்காற்றுச் சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தின் புதுப்பித்தல் மறுக்கப்பட்டாலோ, உரிய காலத்தில் விண்ணப்பிக்கத் தவறினாலோ நிறுவனப் பதிவு ரத்தாகிவிடும். பதிவு ரத்து செய்யப்பட்டால் அந்த நிறுவனத்தின் சொத்துகளும் அதன் கணக்கில் உள்ள பணமும் அரசு வசமாகும். அது மட்டுமன்றி அந்தச் சொத்துகளை அதிலிருந்து வரும் பணம் அரசின் பொதுக்கணக்கிற்கு மாற்றப்பட்டுவிடும். கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி இல்லங்கள், மசூதிகள், கோயில்கள் ஆகியன அரசு கட்டுப்பாட்டிற்குள் செல்லும். மாநில அரசுக்கு, இதில் தலையீடு செய்ய வாய்ப்பு இல்லை சிறுபான்மை அமைப்புகள் நடத்தக்கூடிய நிறுவனங்களிடமிருந்தும், பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாளிகள், சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும்,…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார், அப்போது அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள் பகுதி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் நீர் செல்லும் இடங்களை பார்வையிட்டார். அணையின் மேற்புறத்தில் சென்ற அமைச்சர் கீர்த்தனா, மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அணையில் செல்லும் ரசாயன நீர் குறித்தும் கழிவுகள் குறித்தும் கேட்டறிந்தார், அப்போது அதிகாரிகள் கர்நாடக பகுதியிலிருந்து வரும் நீர் அளவு மற்றும் அங்குள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் குறித்தும் ஓசூர் பகுதியில் கெலவரப்பள்ளி அணை பாசன நிலங்கள் மற்றும் சாகுபடி பயிர்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இந்த ஆய்வின் போது அமைச்சரிடம், ஓசூர் பகுதி விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அணைக்கு கழிவு நீர் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அமைச்சர் கீர்த்தனா அவர்கள் விவசாயிகளின் நியமான இந்த கோரிக்கை…
கேரள மாநிலம் இடுக்கிப் பகுதியில் ட்ரோன் மூலம் எடை மையங்களுகு பச்சைத் தேயிலையை தோட்டங்களில் இருந்து எடுத்து செல்லும் சோதனை முயற்சி வெற்றி அடைந்துள்ளது. RPSG குழும நிறுவனமான ஹாரிசன்ஸ் மலையாளம் லிமிடெட் (HML), கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள லோ ஹார்ட் எஸ்டேட்டில், புதிதாக அறுவடை செய்யப்பட்ட பச்சைத் தேயிலையை, தேயிலைத் தோட்டங்களிலிருந்து எடை மையங்களுக்கும் தொழிற்சாலைக்கும் “ட்ரோன்கள்” மூலம் கொண்டுசெல்லும் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. “ட்ரோபோவொர்க்ஸ்” உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி, கள தளவாடங்களை மேம்படுத்துதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல், மனிதக் கையாளுதலைக் குறைத்தல் மற்றும் வயலிலிருந்து தொழிற்சாலைக்கு பச்சைத் தேயிலையை விரைவாகக் கொண்டுசெல்வதை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. 10 கிலோ முதல் 20 கிலோ எடையுள்ள தேயிலை மூட்டைகளை கொண்டு செல்லும் ஆரம்பகட்ட சோதனைகள் ஊக்கமளிக்கும் முடிவுகளைத் தந்துள்ளன. இது, தேயிலைத் தோட்டங்களில் பொருட்களின் போக்குவரத்தை மாற்றியமைப்பதில் பேலோட் ட்ரோன்களின்…
சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான 24 மணி நேர தமிழ் நகைச்சுவை தொலைக்காட்சி சேனல் ஆதித்யா டிவி ஆகும். இது நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படக் காமெடி காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் ஆதித்யா டிவி சேனலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரை இழிவுபடுத்தும் வகையில் ஆதித்யா டி.வியில் சித்தரிக்கப்பட்டதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில்… விடுதலைப் போராட்ட வீரர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் வ.உ.சிதம்பரனார். இதனால் அவர் “கப்பலோட்டிய தமிழன்” என்ற பெயரைப் பெற்றார். சிறையில் செக்கிழுத்தது உட்பட பல அடக்குமுறைகளைச் சந்தித்தவர். எனவே, தமிழக மக்களால் “செக்கிழுத்த செம்மல்” என்று போற்றப்படுபவர். ஆதித்யா டி.வி சேனல் நகைச்சவை நிகழ்ச்சி என்ற பெயரில் வ. உ. சி. போன்ற விடுதலைப் போராட்ட…