Close Menu
    What's Hot

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Featured

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பான வழக்கு… மத்திய அரசு, பல்கலை. மானியக் குழு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    019 court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு, கடந்த 2023 ஆம் ஆண்டு விதிமுறைகளை வகுத்துள்ளது.

    அதில், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரும் கல்வி நிறுவனங்கள், எந்த பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளதோ, அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சேபம் இல்லா சான்று பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    60 நாட்களுக்குள் ஆட்சேபம் இல்லா சான்றை வழங்காவிட்டால், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேபம் இல்லை என கருதி,  நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கோரி கல்வி நிறுவனம் அளித்த விண்ணப்பித்தை நடைமுறைபடுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிகளை எதிர்த்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், யுஜிசி விதிகள் மாநில அரசின் கவுன்சிலிங் நடைமுறை, இட ஒதுக்கீடு நடைமுறை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு பாதிப்பை என்பதால், இந்த விதிகளை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், பல்கலைக்கழக மானிய குழுவுக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

    Deemed University Education News Madras High Court UGC Union Government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியா?… வேண்டவே வேண்டாம்… எஸ்டிபிஐ வலியுறுத்துவது ஏன்?
    Next Article பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
    Editor TN Talks

    Related Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    July 29, 2026

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    July 29, 2026

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.