Close Menu
    What's Hot

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!
    அரசியல்

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    deccanherald 2025 01 17 bz7fthpt Amit Shah
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய ஜனாதிபதியின் ‘கலர்ஸ்’ (President’s Colours) விருதை வழங்குவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்த மாதம் முதல் வாரத்தில் புதுச்சேரி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, அர்ப்பணிப்புமிக்க சேவை மற்றும் தன்னலமற்ற தியாகத்தைப் பாராட்டும் வகையில், இந்திய ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய கவுரவமான ஜனாதிபதியின் ‘கலர்ஸ்’ விருது புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்பட உள்ளது. இந்த விருது, பாதுகாப்புப் படையினருக்கான மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இந்த விருதை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலை 25-ஆம் தேதி புதுச்சேரி வர திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் டெல்லியில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

    தற்போது ஆகஸ்ட் முதல் வாரத்தில் அவர் புதுச்சேரி வருவார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதுச்சேரி போலீஸ் மைதானத்தில் பிரமாண்ட அணிவகுப்பு மற்றும் விருது வழங்கும் விழாவுக்கான பணிகள் வேகமடைந்துள்ளன. பொதுப்பணித்துறையினர் மைதானத்தின் முகப்பு, பார்வையாளர் அரங்கம் மற்றும் அணிவகுப்புப் பாதைகளை சீரமைத்து அழகுபடுத்தி வருகின்றனர். மேலும், இந்திய ஒற்றுமையின் அடையாளமான சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவப்படம் மற்றும் புதுச்சேரியின் அதிகாரப்பூர்வ முத்திரையும் மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

    மத்திய அமைச்சரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. விழாவிற்குப் பிறகு புதுச்சேரி காவல்துறையினர் தங்களது சீருடையின் இடது கைப்பகுதியில் ஜனாதிபதியின் ‘கலர்ஸ்’ விருதைக் குறிக்கும் பிரத்யேக சின்னத்தை அணியும் சிறப்பையும் பெற உள்ளனர்.

     

     

    amitshah PoliceHonour PresidentsColours Puducherry
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!
    Next Article இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு
    Editor web2
    • Website

    Related Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    July 29, 2026

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    July 29, 2026

    பழனி மட நில வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.