Author: Editor TN Talks

முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அதிரடி நடவடிக்கைகளால் இதுவரை இல்லாத அளவில் குறைந்த எண்ணிக்கையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். வழக்கமாக மாநகராட்சி மாதாந்திர மன்றக் கூட்டத்தின்போது 80 முதல் 160 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால் கடந்த மே மாதக் கூட்டத்தில் 37 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. ஆனால் இன்று நடைபெறும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 19 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட உள்ளது. மேயர் பிரியா பொறுப்பேற்ற பின் முதல்முறையாக குறைந்த அளவிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளதால்  இம்மாதமாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Read More

ஆடிப்பெருக்கை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகளும் விற்பனையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் மையப் பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் வாரச் சந்தை நடப்பது  வழக்கம். இன்று நடைபெற்ற வாரச்சந்தையில் தியாகதுருவம், திருக்கோவிலூர், ஆசனூர், மடப்பட்டு, சேந்தநாடு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இந்துக்களின் பண்டிகைகளில் ஒன்றான ஆடி 18 வருகின்ற திங்கட்கிழமை  கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகளின் விற்பனை களை கட்டியது. காலை ஐந்து மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில்  சேலம், ஈரோடு, வேலூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தைவிட கூடுதலாக ஆடுகளை வாங்கிச் சென்றனர். வெள்ளாடு, செம்மறி ஆடு என ரகத்திற்கு  ஏற்ப ஒவ்வொரு ஆடும் 8000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம்…

Read More

தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் நடத்திய  வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக தன்னிடம் சிலர் பேரம் பேசியதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. இளையராஜா, சென்னை  காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீசார், இந்த வழக்கு தொடர்பாக 14 பேரை  கைது செய்துள்ளனர். இவர்களில், கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மறு உத்தரவு வரும் வரை திருவல்லிக்கேணி போலீசார் முன்பு தினமும் காலை, மாலை என இருவேளை ஆஜராக வேண்டுமென்று என்ற நிபந்தனையுடன்,  இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Read More

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வர இருக்கும் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பான சட்டமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகளை இப்போதே தயார் செய்து வைத்துக்கொள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் சட்டமன்ற கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் சட்டமன்றத்தில் கவனமாக செயல்பட வேண்டும் என்று திமுக தலைவர் அறிவுறுத்தியதாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பாலானோர் சீனியர்களாக இருப்பதால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை முறையாக வழிநடத்த உதவுவது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டம் சுமார் 15 நிமிடங்களில் முடிவு பெற்றது.

Read More

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, மத்திய அரசையும் பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவின் கல்வி அமைச்சராக, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒருவரை பாஜக நியமித்துள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறுபவரைவிட அருவருப்பானவர் வேறு யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவர்தான் இன்று இந்தியாவின் கல்வி அமைச்சராக இருக்கிறார்” என்று குற்றம்சாட்டினார். மேலும், “பிரதமரின் இந்த முடிவு மிகவும் வியப்பாக உள்ளது. அவரது அமைச்சரவையில் பலர் இருக்கும்போது, அவர்களில் யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்திருக்கலாம். ஆனால், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக கூறப்படும் ஒருவரையே அவர் தேர்வு செய்துள்ளார். இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்து, மத்திய கல்வி அமைச்சர் குறித்து அவர் முன்வைத்த அரசியல் குற்றச்சாட்டாகும். இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு அல்லது…

Read More

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 7-வது நாளில், பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா, 2026 குறித்து மக்களவையில் விவாதம் தொடங்கியது. இதனிடையே, மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், இந்த மசோதாவை அறிமுகப்படுத்தி பேசுகையில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் நடவடிக்கையாக இந்த சட்டத் திருத்தம் அமையும் என்று தெரிவித்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா,  இந்த மசோதா மீதான விவாதத்திற்கு முதலில் 6 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவை விருப்பப்பட்டால் கூடுதல் நேரமும் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு எதிர்க்கட்சிகள் மேலும் 2 மணி நேரம் கோரிய நிலையில், மொத்தம் 10 மணி நேரம் வரை விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையில், காங்கிரஸ்…

Read More

திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டிருப்பதாக சில ஆதாரங்களைச் தமிழக வெற்றிக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான தவெக ஐடிவிங்கின் எக்ஸ்தளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது…. கடந்த 24.9.2024ஆம் தேதி, சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 166ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 04.10.2023ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 85ஆவது பட்டமளிப்பு விழா 14.10.2024ஆம் தேதி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39ஆவது பட்டமளிப்பு விழாக்களில் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகத்தான் பாடப்பட்டது. இந்த விழாக்களில் உயர்கல்வித் துறை அமைச்சர்களாக இருந்த க.பொன்மொழி, கோ..வி.செழியன் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் மரபை மீறிய விழாக்களை மண், மொழி, மானம் காக்கும் கொள்கைவழி நின்று சிறப்பித்துள்ளதாக விமர்சித்துள்ளது. மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியில் 2-8-2021 அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்ற , தமிழகச் சட்டப் பேரவையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் திறக்கப்பட்ட நிகழ்விலும்,  தமிழகச் சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவிலும், முதலில்…

Read More

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் நிகழ்ச்சியில் பங்கெடுக்காமல் புறக்கணித்துள்ளனர். இந்த நிலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம் அளிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இதுதொடர்பாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எக்ஸ்தளப் பக்கத்தில் அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இனிமேல் அரசின் சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் – அது பல்கலைக்கழக நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ஒரு புதிய சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தீரன் திருமுருகன்  மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், வலைப்பேச்சு மீடியாவைச் சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்டோர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து மிகவும் தரக்குறைவாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் தரக்குறைவான பதிவுகள் செய்து சீமான்  நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், இது அரசியல் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அவதூறு பிரசாரம். இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்படவில்லை. எனவே, கடந்த ஜூலை.3-ஆம் தேதி அளித்த புகாரை பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தர வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சீமான் மீது தொடர்ந்து அவதூறான கருத்துக்களை இந்த யூ டியூப்பர்  திட்டமிட்டு பதிவு…

Read More

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியையும், இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாட்டையும் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கண்டித்துள்ளார். தமிழ்நாட்டின் உயிர்நாடியான காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டின் உரிமைகளையும், நலன்களையும் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பது ஏற்க முடியாத செயலாகும் எனக் கூறியுள்ள செல்வப்பெருந்தகை, காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை நடைமுறையில் இருக்கும் நிலையில், அவற்றின் நோக்கத்தையே பாதிக்கும் வகையில் புதிய அணை கட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டப்பூர்வமாகவும், நீதியுடனும், கூட்டாட்சி தத்துவத்துடனும் பொருந்தாதது எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேற்கொள்ளப்படும் எந்தவொரு திட்டமும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும் எனக் கூறியுள்ள செல்வப்பெருந்தகை, அதேவேளையில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் ஒன்றிய அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல்,…

Read More