Close Menu
    What's Hot

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டது…. ஆதாரங்களுடன் தவெக அறிக்கை
    Featured

    திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டது…. ஆதாரங்களுடன் தவெக அறிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    016 cm vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டிருப்பதாக சில ஆதாரங்களைச் தமிழக வெற்றிக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

    இது தொடர்பான தவெக ஐடிவிங்கின் எக்ஸ்தளப் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது….

    கடந்த 24.9.2024ஆம் தேதி, சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 166ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் 04.10.2023ஆம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 85ஆவது பட்டமளிப்பு விழா 14.10.2024ஆம் தேதி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39ஆவது பட்டமளிப்பு விழாக்களில் எல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகத்தான் பாடப்பட்டது. இந்த விழாக்களில் உயர்கல்வித் துறை அமைச்சர்களாக இருந்த க.பொன்மொழி, கோ..வி.செழியன் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் மரபை மீறிய விழாக்களை மண், மொழி, மானம் காக்கும் கொள்கைவழி நின்று சிறப்பித்துள்ளதாக விமர்சித்துள்ளது.

    025 tvk it

    மேலும், கடந்த தி.மு.க. ஆட்சியில் 2-8-2021 அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் பங்கேற்ற , தமிழகச் சட்டப் பேரவையில் நடைபெற்ற கலைஞர் கருணாநிதி அவர்களின் புகைப்படம் திறக்கப்பட்ட நிகழ்விலும்,  தமிழகச் சட்டப் பேரவையின் நூற்றாண்டு விழாவிலும், முதலில் தேசிய கீதமும் இரண்டாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டதாகவும் கூறியுள்ளது.

    025 tvk it A

    அதே வேளை தவெக ஆட்சியில், 18.06.2026ஆம் தேதி தமிழகச் சட்டமன்றத்தில் நடைபெற்ற ஆளுநர் உரை நிகழ்ச்சியிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டு, தமிழகச் சட்டப்பேரவையின் மரபும் மாண்பும் காப்பாற்றப்பட்டதாகவும்,

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விழாவையே, தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாததை ஏற்க முடியாது என்று கூறிப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் விரும்பும் முதல்வர் ஜோசவ் விஜய் அவர்களின் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில்தான் இதுபோன்ற தமிழ் காக்கும் முயற்சி தொடர்கிறது என்பதை மக்கள் அறிவர். வழக்கம்போல இதில், திமுக கண்ணை மூடிக்கொண்டு கதறவே செய்யும்.

    தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாகவும், தமிழகச் சட்டமன்றத்தின் மரபைச்  சீர்குலைத்தும், தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவத்தைச் சிறுமைப்படுத்தியும் மக்கள் விரோத ஆட்சி நடத்திய தி.மு.க.வின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மக்கள் ஆதரவில் அமையப்பெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான த.வெ.க. ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் பேணிக் காக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    DMK Official Statement Tamil Nadu Politics Tamil Thai Vazhthu TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகிரிக்கெட் மைதானம் அருகே திடீர் காட்டுத்தீ!. தீயை அணைக்க களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள்! 
    Next Article ஆக.1 முதல் தட்கல் டிக்கெட்டுக்கு டோக்கன் முறை.. பயணிகள் நெரிசலை குறைக்க ரயில்வே அதிரடி!
    Editor TN Talks

    Related Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    July 29, 2026

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    July 29, 2026

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    இயற்கை விவசாயத்துக்கு புத்துயிர்: புதுக்கோட்டையில் களைகட்டிய விவசாயிகள் மாநாடு

    விருது விழா: புதுச்சேரி வருகிறார் அமித்ஷா… ஏற்பாடுகள் தீவிரம்!

    காமன்வெல்த் போட்டி;  தங்கமே இலக்கு… அரையிறுதிக்கு முன்னேறிய சாக்‌ஷி சவுத்ரி உறுதி!

    மாணவர்களுக்கு ஆபத்தா? மோடி அரசு விட்டு வைக்காது- அமித்ஷா உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.