Author: Editor TN Talks
சென்னையில் நடைபெற்ற தோழர் நல்லகண்ணுவின் மார்பளவு சிலை திறப்பு விழா மற்றும் அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரபண்டியனும் கலந்து கொண்டார். ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் மரியாதை செய்து கொண்டனர். நிகழ்வில் சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் பேசியதாவது… நல்லகண்ணுக்கு ஒரு நிகழ்வு என்றால் அங்கு கம்யூனிஸ்ட் எப்படி இல்லாமல் இருக்கும். அரசியலில் எற்ற இறக்கம், நிலைப்பாடு மாறுபடலாம். திமுக- வை ஜனநாயக பேரியக்கமாக தான் பார்க்கிறோம். சமரசமற்ற போர்க்களத்தை ஆர்.எஸ்.எஸ் மீது செலுத்தி நாங்கள் வீழ்த்த துடிக்கிறோம். திமுகவிற்கும், கம்யூனிஸ்டுக்கும் நீண்ட கொள்கை உறவு உள்ளது. அண்ணா, பெரியார், கலைஞர், ஸ்டாலினை எப்படி கடந்து செல்ல முடியும். தந்தை பெரியாரையும், டாக்டர் கலைஞரையும் மறக்கவே முடியாது. கம்யூனிஸ்டு இயக்க வரலாறு இவர்கள் இருவரையும் எப்போதும் மறக்க மாட்டோம். உலகமே இடது சிந்தனையால் இயங்குகிறது.…
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் ஒருங்கிணைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தோழர் நல்லகண்ணு அவர்களின் மார்பளவு திருவுருவ சிலை திறப்பு மற்றும் “அம்மாச்சி – கற்பனையின் முதல் ஆசிரியர்” புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர். நிகழ்வில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது… தோழர் நல்லகண்ணுக்கு முதன்முதலாக திறக்கப்பட்டுள்ள சிலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி. திணைநிலவாசிகள் அமைப்பை சேர்ந்தவர் எழுதிய நூலை வெளியிட்டுள்ளோம். நல்லகண்ணுக்கு சிலை வைத்ததன் மூலம் இந்த சமூகம் யாரை கொண்டாட வேண்டும் என இந்த நிகழ்ச்சி மூலம் அமைப்பினர் வெளிப்படுத்தியுள்ளனர் மக்களுக்கான களப்போராளிகளை கொண்டாடுவதை விட இன்று இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் போராளிகளையே…
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இமர்ஷன் டீப் அல்ட்ரா வயலெட் (Immersion DUV) லித்தோகிராபி இயந்திரங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய சீனா தொடங்கியுள்ளது. இது மேம்பட்ட செமிகண்டக்டர் (சிப்) உற்பத்திக்கு மிகவும் முக்கியமான தொழில்நுட்பமாகும். ஷாங்காய் ஐஷெங்னா எலக்ட்ரானிக் டெக்னாலஜி குழுமம் என்ற அரசு ஆதரவு நிறுவனமே இந்த உற்பத்தியை முன்னெடுத்து வருவதாகவும், சீனாவின் முன்னணி லித்தோகிராபி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தொழில்நுட்பக் குழுக்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த முன்னேற்றம், அதிபர் ஷி ஜின்பிங் முன்னெடுத்து வரும் செமிகண்டக்டர் தன்னிறைவு திட்டத்திற்கு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், உலகின் முன்னணி லித்தோகிராபி இயந்திர உற்பத்தியாளரான நெதர்லாந்தின் ASML நிறுவனத்திற்கு உடனடி வர்த்தக அச்சுறுத்தலாக இது அமையாது என்றும் கூறப்படுகிறது. தொழில்நுட்ப செய்தி வெளியீடான The Information வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டில் சுமார் 5 DUV இயந்திரங்களும், 2027ஆம் ஆண்டில் 20 இயந்திரங்களையும் சீனா தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்த DUV இயந்திரங்கள்,…
தற்போது முடிந்த தேர்தலில் தவெகவுக்கு செல்லத்தான் அதிமுக எம்எல்ஏ-க்களை சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன் புதுவையில் தங்க வைத்ததாகவும். ஆனால் பழியை பொதுச்செயலாளர் பழனிச்சாமி மீது போட்டதாகவும் விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கும் சி.வி. சண்முகம் தரப்புக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நடைபெறும் நிலையில் இரு தரப்பும் மாறி மாறி ஒருவரையொருவர் கடுமையாக சொற்களால் தாக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, விழுப்புரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட பசுபதி அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது… சி.வி.சண்முகம் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சென்ற நிலையில் , தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களை ஏவி கட்சிக்கு எதிராக செயல்படுகிறார். சி.வி.சண்முகத்துக்கு தற்போது இவ்வளவு சொத்து எப்படி வந்தது? காஜா வைத்து பிழைப்பு நடத்திய…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதிய சாலைத்திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தலை AI உதவியுடன் விரைவுபடுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) ‘ கும்டா ‘ முடிவு செய்துள்ளது. சாலைத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை வேகமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Web GIS தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் புதிய டிஜிட்டல் தளத்தை உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) டெண்டர் வெளியிட்டுள்ளது புதிய சாலை அமைக்க வேண்டுமென்றால், எந்தெந்த நிலங்கள் பாதிக்கப்படும், எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும், அதன் மதிப்பு என்ன என்பதைக் கண்டறிய அதிகாரிகள் தற்போது GIS உட்பட (( geographic information system – நில வரைபடத்துடன் , நில உரிமையாளர்கள் , நிலத்தின் தன்மை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும் ஆவணம் )) பல வரைபடங்கள் மற்றும் ஆவணங்களை தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக, அனைத்து…
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இயங்கி வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளிப்பது வழக்கம். குறிப்பாக, பட்டா தொடர்பான பிரச்சனைகள், பத்திரப்பதிவு, நில அபகரிப்பு புகார்கள் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று நிலப் பிரச்சனை காரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் குழந்தையுடன் அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். கடந்த சில நாட்களாகவே தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் நபர்கள், தீக்குளிக்க முயற்சி செய்யும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில்,…
தமிழ்நாட்டின் நலனுக்கு ஒன்று சேர்ந்து குரல் எழுப்பவேண்டும் என தமிழ்நாட்டு எம்.பிக்கள் ஒரு மனதாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நீட்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி நாடாளுமன்றத்தில் சிஜேபி இயக்கத்தினரும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பிக்கள் ராகுல்காந்தி தலைமையில் பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பிக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் திமுக எம்.பிக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் அவர்கள் தனியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழ்நாட்டு நலனில் அக்கறை காட்டாமல் எம்.பிக்கள் பிரிந்து நின்றதாகக் கருத்துகள் கூறப்பட்டன. கர்நாடகத்தில் பாஜக எம்.பி கூட காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக செயல்படும் நிலையில் தமிழக எம்.பிக்கள் கட்சி ரீதியாக பிரிந்து நிற்பதாகப் பேசப்பட்டது. இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களை நாடாளுமன்றத்தில் உறுதியாகப் பாதுகாப்பது தொடர்பாக,…
ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலுள்ள தி.மு.க. மேகதாது பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முற்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். மேகதாது அணை தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ்பூஷன் பேசியது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும், பா.ஜ.க. அமைச்சர் கர்நாடக அரசுக்கு ஆதரவாக பேசியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தனது எக்ஸ்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு பாஜக அரசு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளதாக விமர்சித்துள்ள அவர் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு சட்டரீதியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிற சூழலில் த.வெ.க.வும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழகத்தின் நலன்களை தாரை வார்த்ததாக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி எனவும், ஆட்சியை இழந்ததை சகித்துக் கொள்ள முடியாத…
அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும். மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்பக்கத்தில் கூறியிருப்பதாவது…. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 4048 மதுக்கடைகளில் நகரப்பகுதிகளில் உள்ள சுமார் 2500 மதுக்கடைகளை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு அரசின் இலக்காக இருக்க வேண்டும். அரசே மது விற்பனை செய்கிறது என்பது மானக்கேடானது. இந்த இழுக்கை போக்குவதற்கான தீர்வு அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதுதானே தவிர மதுக்கடைகளை தனியாரிடம் தாரை வார்ப்பது அல்ல. தமிழ்நாட்டில் தனியார் மதுக்கடைகள் செயல்பட்டு வந்ததை மாற்றி 2002-03 -ம் ஆண்டில்…
தமிழ்நாடு அரசின் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்க தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்கும் வகையில் வரும் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்ற தவெக அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அத்துடன், மதுவிலக்கு மற்றும் கலால் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் தனியார்மயக்கப்படும் நிலையில், முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மதுபானக்கடைகளை தனியார்மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்பு வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுபானக்கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது டாஸ்மாக் மதுக்கடைகள் தனியார் மயமாக்கப்பட உள்ளது.