Author: Editor TN Talks
சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்புத்துறையினரால் நல்வாய்ப்பாக மீட்கப்பட்டதாக மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைமையகத்தின் தரைத்தளத்தில், இன்று காலை 11 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் பெயிண்டிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் தரைத்தளம் முற்றிலும் எரிந்து சேதமாகியுள்ளது. இந்த விபத்து நடந்த நேரத்தில் தானும் அலுவலக ஊழியர்களும் தலைமையகத்தில் இருந்ததாகவும், அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்க முயற்சி செய்தும் இயலாததால், தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். தரைத்தளம் வழியாகக் கீழே இறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால், நெல்லை முபாரக்கும், தலைமையக ஊழியர்களும் பாதுகாப்பாக கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளனர். இதனைத் தொடந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினரும் கட்சி நிர்வாகிகளும் இணைந்து போராடி தீயை கட்டுக்குள்…
சென்னை அடையாறில் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரை கன்னத்தில் தாக்கிய வழக்கில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி மகள் கயல்விழியிடம், சாஸ்திரி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் வாடகை அடிப்படையில் எஸ்பிஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த கட்டிடத்தில் உள்ள லிஃப்ட் பழுது காரணமாக செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதால் எஸ்பிஐ வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங் இது குறித்து கயல்விழியின் உதவியாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் கட்டிடத்தில் உரிமையாளரான கயல்விழி தற்போது வரை லிஃப்ட் பழுதை சரி செய்யாததால் வங்கி மேலாளர் நேரடியாக கயல்வழியிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கயல்விழி கடந்த 20 ஆம் தேதி நேராக வங்கி…
கருணை வேலைவாய்ப்பு தொடர்பானவ் விதிமுறைகளை முதலமைச்சர் மீறியிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது…. கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது. விதிமுறைகளை மீறி அரசு வேலை வழங்க முடியாது என்பதையே நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 1992-ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகத் திருவிழாவில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வருகையையொட்டி ஏற்பட்ட கூட்டநெரிசலில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர்; 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. கருணை அடிப்படையிலான அரசு வேலை என்பது பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்காக உருவாக்கப்பட்ட ஒரு விதிமுறை சார்ந்த திட்டமாகும். அதற்கென தகுதி, முன்னுரிமை மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலை உள்ளிட்ட பல நிபந்தனைகள் உள்ளன. விதிமுறைகளைப் பின்பற்றாமல், தனிப்பட்ட அரசாணை மூலம் அரசு…
தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. தவெக அதிகாரப்பூர்வ ஐ.டி.விங்கின் எக்ஸ்தளப் பதிவில், தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற முழக்கம், நம் தமிழ்நாட்டு மண்ணின் உயிர் முழக்கம். எங்கள் தமிழ் மண்ணில் தமிழை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதை ஒருநாளும் ஏற்க மாட்டோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பாடலுக்கு மரியாதை தரப்படும் என்று அறிவித்துவிட்டு, இப்போது அப்படியே மடைமாற்றி, தமிழகத்தின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது எனக் கூறப்பட்டுள்ளது. நம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காகத்தான், தமிழக அரசின் சார்பில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்தோம். தமிழக மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாத ஆளுநர் அவர்களைக் கண்டிக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு, மாநில உரிமையைப் பறிக்கும் செயல். இதைத் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பதை கண்டனத்துடன்…
அமெரிக்காவில் நடைபெறவுள்ள யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில், செர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவோக் ஜோகோவிக் மற்றும் உலகின் நம்பர்-1 மகளிர் வீராங்கனை அர்ன்யா சபலென்கா ஜோடியாக களமிறங்க உள்ளனர். கடந்த ஆண்டு போட்டி வடிவம் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் போட்டியில் ஆண்கள் உலகின் நம்பர்-1 வீரர் ஜான்னிக் சின்னர், (Jannik Sinner) மற்றும் உலகின் 2-வது நிலை வீரர் கார்லஸ் அல்காரஸ் (Carlos Alcaraz) ஆகியோர் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நடைமுறைகளின்படி, தொடக்கச் சுற்றுகளில் குறுகிய புள்ளி கணக்கு முறை அமல்படுத்தப்பட்டதுடன், ஒற்றையர் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இரண்டு நாட்களில் கலப்பு இரட்டையர் போட்டிகளை நடத்தும் புதிய அட்டவணையும் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் முன்னணி வீரர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலியின் சாரா இரானி (Sara…
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், துறை சார்ந்த அதிகாரிகள், நிதித் துறை அமைச்சர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கோவில் சொத்துக்களை மீட்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாகவும், கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. கோவில் திருவிழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளின் போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும், கோவில்களில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல், கோவில்களில் கட்டண தரிசனத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும், நீண்ட நாட்களாக குடமுழுக்கு செய்யப்படாமல் இருக்கும் கோவில்களை கண்டறிந்து குடமுழுக்கு நடத்துவது தொடர்பாகவும்,கோவில் சொத்துக்கள் மூலம் கோவிலுக்கான வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதால், தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்கும்படி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அன்புமணி, கர்நாடக அரசுக்கு ஆதரவான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த நிலைப்பாட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக் கூடாது என்பது தான் நடைமுறையாகும் எனக் கூறியுள்ள அன்புமணி. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான…
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் நடந்து சென்றவர் மீது கார் வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் நகராமனாது கர்நாடக கேரள மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பரபரப்பான சாலையாக உள்ளது. இங்குள்ள சிக்னலில் இருந்து பிரியும் சந்திப்பு சாலைகளில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த நிலையில் நேற்று அங்குள்ள பெட்ரோல் பங்கில் இருந்து நடந்து சென்ற நபர் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அங்குள்ள ஆட்டோ மீது விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவர் மீதுமோதிய காரும் அருகில் இருந்த மற்றொரு கடைக்குள் நுழைந்து வ்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்தும் வண்டி ஓட்டி மற்றும் பாதிக்கப்பட்டவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த பதைபதைக்க வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.…
டெல்லியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் “மிகப்பெரிய வெற்றி” பெற்றுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கர்நாடக முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கூட்டம் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களிடமும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரவேற்பைப் பெற்றதாகவும், எதிர்க்கட்சி தலைவர்கள்கூட இந்த முயற்சியை பாராட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்களான பிரகலாத் வெங்கடேசு ஜோஷி, கே. சோபா,, வீரண்ணா சோமண்ணா ஆகியோர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும், முன்னாள் முதலமைச்சர்களான பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி ஆகியோர், “இவ்வளவு அதிகமான எம்.பி.க்கள் ஒரே கூட்டத்தில் பங்கேற்பதை இதுவரை பார்த்ததில்லை; இது ஒரு புதிய முயற்சி” என்று பாராட்டியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டம், “ஒற்றுமையில்தான் வலிமை உள்ளது” என்ற செய்தியை வெளிப்படுத்தியதாகவும், அரசியல் வேறுபாடுகளை…
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மாநிலங்களவையில் மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் இணை அமைச்சர் அளித்த பதிலை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், 2018 பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்தக் கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்கு கீழ்நிலை மாநிலங்களின் (Lower Riparian States) ஒப்புதல் அவசியம் என்று வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்ற அமைச்சரின் விளக்கம் ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதில் தற்போதுள்ள சட்ட நிலை மற்றும் கீழ்நிலை மாநிலங்களின் ஒப்புதல் தொடர்பான நிலைநிறுத்தப்பட்ட சட்டக் கோட்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக, கர்நாடகா – ஆந்திரப் பிரதேசம் இடையேயான அலமட்டி அணை வழக்கில் (State of Karnataka vs State of Andhra Pradesh) அரசியல் சாசன அமர்வு வழங்கிய உச்சநீதிமன்றத்…