சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், துறை சார்ந்த அதிகாரிகள், நிதித் துறை அமைச்சர், நிதித் துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கோவில் சொத்துக்களை மீட்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாகவும்,
கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
கோவில் திருவிழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளின் போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும்,
கோவில்களில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இதேபோல், கோவில்களில் கட்டண தரிசனத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும், நீண்ட நாட்களாக குடமுழுக்கு செய்யப்படாமல் இருக்கும் கோவில்களை கண்டறிந்து குடமுழுக்கு நடத்துவது தொடர்பாகவும்,கோவில் சொத்துக்கள் மூலம் கோவிலுக்கான வருமானத்தை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
