Author: Editor TN Talks

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கருமாண்டபதி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளியின் சமையலறை பகுதியில் ஏற்பட்ட தீயால் பரபரப்பு நிலவியது. இப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 26 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஒரே ஆசிரியர் பணியாற்றி வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் மாணவர்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பத்திரமாக மீட்டார். இதனால் எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்து தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் அவ்வப்போது பள்ளிகள் மற்றும் கிராமங்களில் தீயணைப்பு மற்றும் பேரிடர் பாதுகாப்பு…

Read More

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி நடந்துள்ளதாக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார். 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், அவருக்குப் பின்னர் வந்த ஆளுநர் அர்லேகருக்கும் காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. ஆளுநரை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்று சட்டப்பேரவைக்குள் அழைத்து சென்றார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் ஆங்கில அறிக்கையை ஆளுநர் அர்லேகர் வாசித்தார். தடைகள் மற்றும் பணபலத்தை தாண்டி தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. விஜயால் மட்டுமே தமிழ்நாட்டை ஆளமுடியும் என மக்கள் எண்ணினர். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது வரலாற்று சிறப்புமிக்க புரட்சியை தனி ஆளாக விஜய் செய்துள்ளா விஜய் 1977இல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய புரட்சியைப் போன்றே 2026இல் விஜய் ஏற்படுத்தி உள்ளார். தவெகவை ஆரம்பித்த…

Read More

சட்டப்பேரவைக்கு வருகை தந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டையில் வாயைத் திறங்க CM என்னும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான 17-வது சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. முதல்நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உரை நிகழ்த்த உள்ளார். சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏக்கள் வருகை புரிந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். அந்த கருப்பு பேட்ஜில் வாயைத் திறங்க CM என அச்சிடப்பட்டுள்ளது. மேலும் தவெக ஆட்சிக்கு எதிரான பதாகைகளையும் தங்கள் கைகளில் ஏந்தியபடி ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அந்தப் பதாகைகளில் திரையில் நாயகன், தரையில் வில்லன்,  கதறல் கேட்குதா CM?, தூய சக்தி அல்ல துயர சக்தி, REELS இங்கே REAL எங்கே?, மாற்றம் அல்ல ஏமாற்றம் ஆகிய வாசகங்கள்…

Read More

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டதை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் நீடித்த அமைதிக்கான வழியைத் திறப்பதுடன், உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற இரவு விருந்தின்போது அதிபர் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக மக்ரோன் குறிப்பிட்டார். அவர் தனது பதிவில், “இன்று இரவு வெர்சாய்ஸில் அதிபர் டிரம்ப், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தம் நீடித்த அமைதிக்கான பாதையை உருவாக்குகிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வழிவகுக்கிறது. இது சரியான திசையில் எடுக்கப்பட்ட முக்கியமான முன்னேற்றமாகும். இதன் மூலம் விரைவில் எரிசக்தி விலைகள் குறையவும் வாய்ப்பு உருவாகும்” என்று தெரிவித்தார். இதனிடையே, வெள்ளை மாளிகையும் (White…

Read More

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா (74) மற்றும் ஷஃபாலி வர்மா (55) ஆகியோரின் சிறப்பான தொடக்கத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. இது மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். பின்னர் 210 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 17.3 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிருதி – ஷஃபாலி அதிரடி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நெதர்லாந்து தனது முடிவுக்காக விரைவிலேயே வருத்தப்பட்டது. இந்திய தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆரம்பம் முதலே…

Read More

கால்பந்து ஜாம்பவானான கிறிஸ்டினோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணியும், டி.ஆர். காங்கோ அணியும் இந்திய நேரப்படி நேற்றிரவு 10.30 மணிக்கு மோதின. ரொனால்டோ இருப்பதால், நிச்சயம் எளிதாக இந்தப் போட்டியை வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் காங்கோ அணி வீரர்கள் களத்தில் சீறிப்பாய்ந்தனர். போர்ச்சுகல் அணியின் ஜோவா நோவஷ் ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் கோல் அடித்ததால், அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய காங்கோ அணியின் யோனே வைஸா 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. முன்னிலைக்காக இரு அணிகளும் இரண்டாம் பாதியில் மும்முரமாக விளையாடினர். காங்கோ அணியின் கோல் கீப்பர் Lionel Mpasi நேற்றைய ஆட்டத்தில் முக்கிய பங்காற்றினார். பெனால்டி பாக்ஸை முழுமையாகக் கட்டுப்படுத்தி, போர்ச்சுகல் அணியின் கோல் அடிக்கும் வாய்ப்புகளைத் தடுத்து தனது அணியைக் காப்பாற்றினார். நேற்றைய ஆட்டத்தின் கதாநாயகர்களே Defensive Unit…

Read More

பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டன் கிலியன் எம்பாப்பே, உலகக் கோப்பை 2026 தொடரின் முதல் போட்டியிலேயே பல்வேறு சாதனைகளை முறியடித்து அசத்தியுள்ளார். அவரது இரட்டை கோல் உதவியுடன் பிரான்ஸ் அணி, செனகலை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிகரமாக தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்கியது. 2002 உலகக் கோப்பையில் செனகலிடம் 0-1 என்ற கணக்கில் சந்தித்த அதிர்ச்சி தோல்விக்குப் பழிதீர்த்த பிரான்ஸ், 2018 உலக சாம்பியன் மற்றும் 2022 ரன்னர்-அப் என்ற பெருமைக்கு ஏற்ப வலுவான தொடக்கத்தை பதிவு செய்தது. எம்பாப்பேவின் சாதனை மழை இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்த எம்பாப்பே, உலகக் கோப்பை போட்டிகளில் தனது மொத்த கோல் எண்ணிக்கையை 14 ஆக உயர்த்தினார். இதன் மூலம் 13 கோல்கள் அடித்திருந்த பிரான்ஸ் முன்னாள் நட்சத்திரம் ஜஸ்ட் ஃபோன்டைனின் சாதனையை முறியடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் வீரர் என்ற பெருமையை…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 17-ஆவது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், விசிக கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த மே மாதம் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினார். இந்த வாக்கெடுப்புக்கு பின்னர் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒத்தி வைத்தார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல்நாளான இன்று மரபுப்படி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர…

Read More

ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது. குரூப் L பிரிவில் டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹாரி கேன் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். போட்டியின் 11-வது நிமிடத்தில் நோனி மடுவேகே மீது லூகா மோட்ரிச் பெனால்டி பகுதியில் விதிமீறல் செய்ததால் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. முதலில் ஹாரி கேன் அடித்த பெனால்டியை குரோஷிய கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிச் தடுத்தார். ஆனால் VAR பரிசோதனையில் கோல்கீப்பர் முன்கூட்டியே கோல் கோட்டைக் கடந்திருந்தது தெரியவந்ததால் மீண்டும் பெனால்டி வழங்கப்பட்டது. இரண்டாவது வாய்ப்பில் கேன் கோல் அடித்து இங்கிலாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதற்கு பதிலடி கொடுத்த குரோஷியா, 36-வது நிமிடத்தில் மார்டின் பட்டுரினா அடித்த கோலின் மூலம் ஆட்டத்தை 1-1…

Read More

டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான…

Read More