தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி நடந்துள்ளதாக ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. முன்னதாக சட்டப்பேரவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், அவருக்குப் பின்னர் வந்த ஆளுநர் அர்லேகருக்கும் காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது.
ஆளுநரை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்று சட்டப்பேரவைக்குள் அழைத்து சென்றார்.
பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் ஆங்கில அறிக்கையை ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.
தடைகள் மற்றும் பணபலத்தை தாண்டி தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றுள்ளது.
விஜயால் மட்டுமே தமிழ்நாட்டை ஆளமுடியும் என மக்கள் எண்ணினர்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ஏற்பட்டுள்ளது
வரலாற்று சிறப்புமிக்க புரட்சியை தனி ஆளாக விஜய் செய்துள்ளா விஜய்
1977இல் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய புரட்சியைப் போன்றே 2026இல் விஜய் ஏற்படுத்தி உள்ளார்.
தவெகவை ஆரம்பித்த 2 வருடத்திலேயே மக்களின் நம்பிக்கையை விஜய் பெற்றுள்ளார்
முதன்முறையாக தவெக அரசு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளித்துள்ளது.
கொள்கை தலைவர்கள் பெயர்களை உச்சரிப்பதில் தவறு நேர்ந்திருந்தால் பிழை பொறுக்க வேண்டும்
எனக் கூறிய ஆளுநர் தொடர்ந்து அரசின் செயல்திட்டங்கள் குறித்து வாசித்தார்.
