Close Menu
    What's Hot

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..!! சாலை மறியலில் குதித்த திராவிட மாணவர் கழகத்தினர்..!! திடீர் பரபரப்பு..!!

    நீட் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் கோரிய மனு..!! வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

    17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்..!! தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடர்..!! ஆளுநர் சொன்ன முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன..??
    Featured

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடர்..!! ஆளுநர் சொன்ன முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன..??

    editor5By editor5June 18, 2026Updated:June 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 4 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

    தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 18) கோலாகலமாக தொடங்கியது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டசபைக் கூட்டமாக இது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த மாதம் 13-ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான கூட்டணி அரசு தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, முழு பட்ஜெட் தாக்கல் செய்யும் நோக்கில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 5-ம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையின் வரைவு, புதிய அறிவிப்புகள், அரசின் உடனடி முன்னுரிமைத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

    இந்நிலையில் முதல் சட்டசபை கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் சட்டசபை தொடங்கும். அந்த வகையில், சட்டசபைக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோட்டை பிரதான கட்டிடத்தின் 2-வது நுழைவு வாயில் அருகே போலீஸ் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, மற்றும் தேசிய கீதத்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அதன் பின்னர் ஆளுநர் அர்லேகர் முதல் உரையை தொடங்கினார்.

    சட்டமன்றத்தில் பேசிய அவர், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிந்த பின்னர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் சமூகநீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னரும் காவிரி நீரை பெற தொடர்ந்து போராட வேண்டியுள்ளது; மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் சட்ட நடவடிக்கை தொடரும்; நதிநீர் இணைப்புக்கு தமிழக அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்; தமிழக அரசு தொடர்ந்து போராடி காவிரி நீரை பெற நடவடிக்கை எடுக்கும் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசு இரு மொழிக் கொள்கையை பின்பற்றும் என்பதில் உறுதியாக இருக்கிறது; மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதி சுமார் ரூ.3000 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்றும் மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும் மத்திய அரசு மாநிலத்திற்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அர்லேகர் வலியுறுத்தினார்.

    கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நீர் நிலைகளில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க எந்த அரசு அனுமதி அளிக்கும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்; சென்னை நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏற்க வேண்டும்; தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புதிய தொழில்கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்; தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்றார்.

    அதுமட்டுமின்றி AI மூலம் அரசுத்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்; கல்வித்துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்; சமத்துவம், சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு செயல்படும்; இந்து சமய அறநிலையத்துறையின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படும் என்ற அர்லேகர் தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளையை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

     

    cmvijay Governor Governor Arlekar tngovernment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ; ஆளுநர் அர்லேகர் புகழாரம்
    Next Article ஓய்வூதியதாரர்களுக்கு 30% வரை இடைக்கால நிவாரணம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!
    editor5

    Related Posts

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..!! சாலை மறியலில் குதித்த திராவிட மாணவர் கழகத்தினர்..!! திடீர் பரபரப்பு..!!

    June 18, 2026

    நீட் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் கோரிய மனு..!! வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

    June 18, 2026

    17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்..!! தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு..!!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..!! சாலை மறியலில் குதித்த திராவிட மாணவர் கழகத்தினர்..!! திடீர் பரபரப்பு..!!

    நீட் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் கோரிய மனு..!! வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

    17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்..!! தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி தேசிய கீதத்துடன் நிறைவு..!!

    ஓய்வூதியதாரர்களுக்கு 30% வரை இடைக்கால நிவாரணம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடர்..!! ஆளுநர் சொன்ன முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.