Author: Editor TN Talks
தமிழக சட்டமன்ற தேர்தலில், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதால், அவரது சொத்து விவரங்கள் முழுமையானவையா? உண்மையானவையா என விசாரிக்க, வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என பெரம்பூர் தொகுதி வாக்காளரான, வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி…
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. கட்சித் தலைவர் ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றார். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டது. இதில் 3 இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு இடத்தில் தனிச் சின்னத்திலும் போட்டியிட்டது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 இடங்களில் வெற்றி பெற்றது. தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது. இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். தொடர்ந்து வைகோவும் அவரது மகனும் எம்.பி.யுமான துரை வைகோவும் தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர்.…
தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக வெற்றிக்கழக அரசின் இயலாமையை மூடிமறைக்கும் விதமாகவே நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை உள்ளது. தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து தப்பிப்பதற்காகவே நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 20016 முதல் 2021 வரையிலான 15 ஆண்டுகளை எடுத்துக்கொண்டு 2021-ல் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், திமுகவின் 5 ஆண்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு தமிழக வெற்றிக்கழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? வெள்ளை அறிக்கையில் முந்தைய ஆட்சிகள் பற்றி இல்லாதது யாரை காப்பாற்றுவதற்கான முயற்சி? தீர்ந்து போன சக்தி என அதிமுகவை கூறிய தவெகவுக்கு ஏன் இப்படி ஒரு நிலைப்பாடு? எதிர்காலத்தில் தேவைப்படுவார்கள் என்பதுதான் இதற்கு காரணமா/ தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து என்ன சொல்லி தப்பித்து கொள்வது என்பது தான் வெள்ளை…
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தத் தொடரில் ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் ஆகியோருக்குப் பிறகு, வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் இந்திய அணிக்காக அறிமுகமாகும் மூன்றாவது புதிய வீரராக உள்ளார். முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி மழையால் 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்தப் போட்டியில் குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் 195 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, அதிரடியும் நிதானமும் கலந்த பேட்டிங்கின் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. இதன்மூலம் 1-0…
தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து திமுகதான் பதில் அளிக்க வேண்டும் என செய்தியாளரின் கேள்விக்கு திருமா பதில் அளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தொடபான கேள்விக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் கருத்து சொல்வதற்கு தனக்கு ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். தவெகவின் ஒரு மாத கால ஆட்சி தொடர்பான கேள்விக்கு, 6மாதம் பொறுத்திருப்போம், ஆட்சி குறித்து விமர்சனங்களை வைப்போம் என நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் எடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரே மாதத்தில் ஆட்சி நிர்வாகம் குறித்து எந்த மதிப்பீட்டையும் சொல்ல இயலாது. இப்போது அவர்களுக்கு கற்றுக் கொள்ளக்கூடிய காலம் எனவே, ஒரு மாத கால ஆட்சி பற்றி மதிப்பீடு சொல்ல இயலாது எனக் கூறினார். அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் ராஜினாமா குறித்த கேள்விக்கு, அதிமுகவில் என்ன…
மின்கட்டண உயர்வு திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணத்தை உயர்த்த தவெக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மின் கட்டண உயர்வு இருக்கும்” என்ற அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த மின்கட்டண உயர்வால் சாமானிய பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் வணிகர்களும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். முந்தைய அதிமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட ஒன்றிய பாஜக அரசின் ‘உதய்’ மின் திட்டத்தின்படி ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின்கட்டண உயர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாக உள்ளது. கடந்த திமுக அரசு, இந்த விதியால் சாமானிய மக்களுக்கு…
முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தன்னைப் பற்றியும் ஆட்சி பற்றியும் வரும் செய்திகளைப் படித்து உண்மையை உணரவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக எம்.பி கலாநிதி வீராசாமி இல்லத் திருமண விழா சென்னை வானகரத்தில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை வாழ்த்திப் பேசினார். ஆற்றலுக்கும் கொள்கை பிடிப்புக்கும் இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய ஆற்காட்டார் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளேன். இன்றளவும் இந்த இயக்கத்திற்கு விசுவாசமாக துணையாக ஆலோசகராக எங்களைப் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக அண்ணன் ஆற்காட்டார் விளங்கிக் கொண்டிருக்கிறார். துவக்க காலத்தில் மின் துறையில் ஊழியராக பணியாற்றி அதன் பிறகு மின்சார துறை அமைச்சராக மாறினார். திமுக வளர்ச்சிக்கு தலைமைக் கழகம் என்ன பணியிட்டாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடிய செயல் வீரராக ஆற்காட்டாரின் மகன் கலாநிதி வீரராசாமி உள்ளார். மக்கள்…
நடிகை கௌதமியின் சொத்துகளை மோசடி செய்த வழக்கில் கைதான அழகப்பன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌதமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவரிடம் தனது சொத்துக்களை நிர்வகிக்க பொது அதிகாரம் கொடுத்திருந்தார். அதைத் தவறாக பயன்படுத்தி அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், உள்ளிட்ட சிலர் ஒன்று சேர்ந்து சுமார் 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகை கௌதமி குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் நடிகை கௌதமி தனது சொத்துகள் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக சென்னை உட்பட பல்வேறு மாவட்ட காவல் துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள 46 ஏக்கர் நிலத்தை விற்க அழகப்பனிடம் ஒப்படைத்ததாகவும், ஆனால் அழகப்பன் மற்றும்…
வீ த லீடர் இயக்கத்தை தொடங்கியது ஏன்? அரசியலுக்கு வந்தது ஏன் என்பது குறித்து அண்ணாமலை யூடியூப் லைவில் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது;- வீ த லீடர் இயக்கத்தில் தற்போது 18 இலட்சம் பேர் இணைந்துள்ளனர். யாரையும் நான் இயக்கத்தில் சேரும்படி அழைக்கவில்லை. பாஜகவினர் யாரையும் என்னுடன் வந்து இணையும்படி நான் அழைக்கவில்லை. இளைஞர்கள் அவர்களாகவே வந்து சேர வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தேன். இந்த இயக்கத்தில் இணைந்துள்ள ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ள அதே வேளையில் லட்சக்கணக்கானோர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர். ஓடிபி அடிப்படையில் உறுப்பினர்களை இணைக்கும் இயக்கம் வீ த லீடர்ஸ். கரூரில் உள்ள தனது வீடு, தான் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கை, ஆடு, மாடுகள் என தனது சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். கிராமத்தில் வாழும்போது நான் பட்ட கஷ்டத்தை மற்றவர்கள் யாரும் படக்கூடாது…
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், நடப்பு சாம்பியனான நியூசிலாந்தை கடைசி ஓவர் வரை நீண்ட பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. இதன்மூலம் மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக நியூசிலாந்தை இலங்கை வென்று வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் இசபெல்லா கேஸ் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தார். இருப்பினும் கேப்டன் அமேலியா கெர் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தனர். பின்னர் அமேலியா கெர் மற்றும் சோபி டிவைன் இணைந்து 43 ரன்கள் கூட்டணி அமைத்தனர். 10 மற்றும் 11-வது ஓவர்களில் இருவரும் அதிரடியாக விளையாடி 23 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் இலங்கை பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மற்றும் துல்லியமான களத்தடுப்பின் மூலம் நியூசிலாந்தை கட்டுப்படுத்தினர். காவிஷா தில்ஹாரி பந்துவீச்சில் அமேலியா கெர் (45 ரன்கள்) அடித்த பந்தை காவ்யா கவிந்தி அற்புதமாக ஓடி வந்து…