Close Menu
    What's Hot

    மாலுமிகள் மரணம்!. ஜி7 மாநாட்டில் ஒலித்த பிரதமர் மோடியின் குரல்!.

    மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!. இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மின்கட்டண உயர்வு திட்டத்தை கைவிடுக – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    அரசியல்

    மின்கட்டண உயர்வு திட்டத்தை கைவிடுக – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 eb
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மின்கட்டண உயர்வு திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

    எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, தமிழ்நாட்டில் விரைவில் மின்கட்டணத்தை உயர்த்த தவெக அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மின் கட்டண உயர்வு இருக்கும்” என்ற அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த மின்கட்டண உயர்வால் சாமானிய பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் வணிகர்களும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    முந்தைய அதிமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட ஒன்றிய பாஜக அரசின் ‘உதய்’ மின் திட்டத்தின்படி ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின்கட்டண உயர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பது விதியாக உள்ளது. கடந்த திமுக அரசு, இந்த விதியால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, வீட்டு மின் பயன்பாட்டுக்கான கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொண்டு, தொழில் மற்றும் வணிக ரீதியான மின்கட்டணத்தை மட்டுமே உயர்த்தியது. தற்போதுள்ள தவெக அரசு, கடந்த அரசு பின்பற்றிய அந்த வழிமுறையை பின்பற்றுமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    அதேசமயம் தற்போது மாநிலம் முழுவதும் நிலவி வரும் மின் தட்டுப்பாடு, மின்வெட்டு மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் ஏற்கனவே பெரும் நஷ்டத்தையும் சிரமங்களையும் சந்தித்து வருகின்றன. இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி கடுமையாக முடங்கியுள்ளதோடு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலில், புதிய மின்கட்டண உயர்வு என்பது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல, வணிகர்களின் தலையில் விழும் இடியாக அமைந்து விடக்கூடாது.

    தொழில் மற்றும் வணிக ரீதியான மின்கட்டணம் உயர்த்தப்பட்டால், உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரிக்கும். இந்த உற்பத்திச் செலவு அதிகரிப்பு என்பது இறுதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வாகவே உருவெடுக்கும். இது நேரடியாக ஏழை, எளிய நடுத்தர மக்களைப் பாதிப்பதோடு, மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தையும் கடுமையாக முடக்கும் பேராபத்தாக முடியும்.

    ஆகவே, தவெக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் மற்றும் சிறு தொழில்துறையினரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Electricity Tariff Hike SDPI SDPI Party
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!
    Next Article பேருந்து கட்டணம் உயருமா? போக்குவரத்துத் துறை விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு

    June 17, 2026

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!. இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

    June 17, 2026

    வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு மூலம் மட்டுமே..! மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாலுமிகள் மரணம்!. ஜி7 மாநாட்டில் ஒலித்த பிரதமர் மோடியின் குரல்!.

    மு.க. ஸ்டாலின் புகைப்படம்: கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் மோதலால் பரபரப்பு

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!. இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு!

    வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு மூலம் மட்டுமே..! மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!

    200 சர்வதேசப் போட்டிகள், 6 உலகக் கோப்பைகள்!. மெஸ்ஸியின் வியக்கவைக்கும் சாதனைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.