Close Menu
    What's Hot

    இலங்கை சிறையில் வெடித்த கைதிகள் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு.. போலீசார் குவிப்பு!

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!
    Featured

    பக்தர்களை வற்புறுத்தக் கூடாது: பூஜைப் பொருட்கள் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகள்!

    Editor web2By Editor web2June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Temple shop
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருக்கோயில்களில் பக்தர்களுக்கு நியாயமான விலையில் தரமான பூஜைப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பூஜைப் பொருட்கள் விற்பனையில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், பக்தர்கள் சிரமமின்றி வழிபாடு செய்யவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருக்கோயில்கள் மற்றும் கோயில் வளாகங்களில் செயல்படும் அனைத்து பூஜைப் பொருள் விற்பனைக் கடைகளும் தங்களது பொருட்களுக்கான நியாய விலைப்பட்டியலை கடையின் முன்பாக கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக பணம் வசூலிக்கக் கூடாது என்றும் அறநிலையத்துறை வலியுறுத்தியுள்ளது.

    மேலும், தரமான பூச்சரம், பூமாலைகள், தேங்காய், பழங்கள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், விபூதி, ஊதுபத்தி, சாம்பிராணி, எண்ணெய், நெய் உள்ளிட்ட அனைத்து பூஜைப் பொருட்களும் இறைவனுக்கு சமர்ப்பிக்கத் தகுந்த தரத்தில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன அல்லது தரம் குறைந்த பொருட்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கேட்காத பொருட்களை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வழங்கக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மஞ்சள் துணிப்பைகள், மூங்கில் கூடைகள் மற்றும் வலுவான காகிதப் பைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது.

    DevoteeRights HRCE PujaItems TempleAdministration
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெய்திகளைப் படியுங்கள்; முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
    Next Article மின்கட்டண உயர்வு திட்டத்தை கைவிடுக – எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    Editor web2
    • Website

    Related Posts

    இலங்கை சிறையில் வெடித்த கைதிகள் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு.. போலீசார் குவிப்பு!

    August 8, 2026

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    August 8, 2026

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இலங்கை சிறையில் வெடித்த கைதிகள் வன்முறை: 3 பேர் உயிரிழப்பு.. போலீசார் குவிப்பு!

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    “திமுகவை யாராலும் முடக்க முடியாது; முதல்வர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்”!. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ!

    தவெக அரசின் மடைமாற்று அரசியல் நாடகத்துக்கு துணைபோக மாட்டோம்!. அதிமுக!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.