Close Menu
    What's Hot

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Featured

    முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்ற தேர்தலில்,  சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு  தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், இரு தொகுதிகளிலும்  தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும்,   பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் சொத்து மதிப்பு எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதால்,  அவரது சொத்து விவரங்கள் முழுமையானவையா? உண்மையானவையா என விசாரிக்க, வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என பெரம்பூர் தொகுதி வாக்காளரான, வியாசர்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி  வாக்காளரான குமாரவேல் என்பவர்  வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், 2024 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறியிருந்த சொத்து விவரங்களுக்கும், சட்டமன்ற தேர்தல் வேட்புமனுவில் தெரிவித்த சொத்து விவரங்களுக்கும் இடையில்  முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி, மயிலாப்பூர்  தொகுதி வாக்காளர் கவுதம் சிவா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மூன்று வழக்குகளும், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், முதல்வர் விஜய் முதலில் தாக்கல் செய்த வேட்புமனுவை திருத்தம் செய்து புதிய மனுவை ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் குறிபிட்டிருந்த சொத்து மதிப்புகள் சரியாக உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும். ஏற்கனவே இதே கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

    அவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முதல்வர் விஜய், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், பா.ஜ. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஏதேனும் குறைகள் இருந்தால் தேர்தல் வழக்காக தாக்கல் செய்யலாம் எனவும் மனுதாரர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    Chief Minister Court Order High Court Opposition Leader
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!
    Next Article தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?
    Editor TN Talks

    Related Posts

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    June 17, 2026

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    June 17, 2026

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.