Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!
    Uncategorized

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    Editor web3By Editor web3June 17, 2026Updated:June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay candidate change
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு, அக்கட்சியில் மிக முக்கியமான பொறுப்பான மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிப்பதில் அக்கட்சியின் நிர்வாகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இது கட்சியின் தலைமைக்கு ஒரு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

    கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே உழைத்து வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு பக்கம் முக்கியத்துவம் தேவைப்படும் நிலையில், மறுபக்கம் புதிதாகப் பொறுப்பேற்ற அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்று தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    சட்டமன்றத் தேர்தலின் போது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இல்லாத பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்று, தற்போது பதவியில் உள்ளனர். அவர்கள், தற்போதுள்ள அதிகாரத்துடன் மாவட்டச் செயலாளர் பொறுப்பும் கிடைத்தால் கட்சியை இன்னும் வலுப்படுத்த முடியும்” எனத் தலைமைக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள், கட்சியில் சேரும்போதே தங்களுக்குத் தகுந்த முக்கியப் பொறுப்புகளை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே நுழைகின்றனர்.

    ஆரம்பம் முதலே களத்தில் உழைத்து வரும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், தங்களை ஓரம் கட்டிவிட்டு புதியவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அதிருப்தியில் உள்ளனர்.

    இந்த மூன்று தரப்புக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில், யாரை நியமிப்பது, யாரைத் தவிர்ப்பது என்பதில் தலைமைத் தரப்பு பெரும் குழப்பத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதல் குறித்து அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பதவிகளைத் தீர்மானிப்பதில் நிலவும் இந்த இழுபறி, வரும் காலங்களில் கட்சியின் உட்கட்டமைப்பில் எந்த மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதுதான் தற்போதைய அரசியல் வட்டாரத்தின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    District Secretary post Pressure Thalapathy Vijay TVK TVK vijay tvk
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?
    Next Article முதலமைச்சர், எதிர்கட்சித் தலைவர் மீதான வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    Editor web3
    • Website

    Related Posts

    வாடி வாடி கைபடாத சிடி ; தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம்

    June 21, 2026

    புதிய அரசியல் அலை..!! தவெகவில் இணைந்த 2500 பேருக்கு உரிய அங்கீகாரம்..!! ஆதவ் அர்ஜுனா உறுதி..!!

    June 20, 2026

    பள்ளி வகுப்பறைக்குள் ரீல்ஸ்..!! இதை முதல்வர் விஜய்யே ஏத்துக்க மாட்டார்..!! அண்ணாமலை கண்டனம்..!!

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.