Close Menu
    What's Hot

    ” ‘முழு நேரலை’… அத்தனையும் உருட்டுதானா?” – பேரவை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கேள்வி

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?
    Featured

    முதலமைச்சரை சந்தித்தார் வைகோ – திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக ஆயத்தம்?

    Editor TN TalksBy Editor TN TalksJune 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 vaiko
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்தார்.

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் திமுக கூட்டணியில் இருந்த  கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. கட்சித் தலைவர் ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றார்.

    இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டது. இதில்  3 இடங்களில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு இடத்தில் தனிச் சின்னத்திலும் போட்டியிட்டது. இதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 2 இடங்களில் வெற்றி பெற்றது.

    தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகள் ஆதரவளித்த நிலையில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது.

    இதையடுத்து முதல்வரான பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

    தொடர்ந்து வைகோவும் அவரது மகனும் எம்.பி.யுமான துரை வைகோவும் தவெகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டமானது என துரை வைகோவும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

    தவெக தனக்கு ஆதரவளித்த கட்சிக்கு அமைச்சரவையிலும் இடமளித்ததைத் தொடர்ந்து தங்களுக்கான வாய்ப்பு நழுவிப் போனதாகவே வைகோ கருதியதாகக் கூறப்பட்டது.

    இதனால் திமுக கூட்டணியில் வைகோ தொடர்வாரா எனக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ஜூலை 27 ஆம் தேதி மதிமுக பொதுக்குழுவில் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என வைகோ தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேற்று (ஜூன் 16) அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சென்று சந்தித்துப் பேசினார். இதன் எதிரொலியாக இன்று முதல்வர் விஜய்யை வைகோ சந்தித்துப் பேசுவார் எனக் கூறப்பட்டது. அதன்படி இன்று பிற்பகலில் தலைமைச் செயலகம் வந்த வைகோ, முதலமைச்சர் விஜய்யை சந்தித்துப் பேசினார்.

    இதனால் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறலாம் எனவும், மதிமுகவுக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    Chief Minister Vijay DMK Alliance MDMK Vaiko
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலாக் அப் டெத்?. 101 நாட்களுக்கு பின் ஆகாஷ் டெலிசன் உடல் தகனம்!. கதறிய பெற்றோர்கள்!
    Next Article தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!
    Editor TN Talks

    Related Posts

    ” ‘முழு நேரலை’… அத்தனையும் உருட்டுதானா?” – பேரவை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கேள்வி

    June 19, 2026

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    June 19, 2026

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” ‘முழு நேரலை’… அத்தனையும் உருட்டுதானா?” – பேரவை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அதிமுக கேள்வி

    மீண்டும் சிக்கலில் நடிகர் அல்லு அர்ஜுன்..!! ‘புஷ்பா 2’ கூட்ட நெரிசல் மரண வழக்கில் நீதிமன்றம் சம்மன்..!!

    பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!. ஏற்காடு அருகே சோகம்!

    ஜூன் 21, 22ம் தேதி வண்டலூர் பூங்கா போறீங்களா..!! அப்போ முதல்ல இத தெரிஞ்சிக்கோங்க..!!

    இளைஞர்களின் நலன் காக்க ரூ.2400 கோடி நிதி ஒதுக்கீடு..!! மோடி அரசுக்கு நயினார் நன்றி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.