Author: Editor TN Talks

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து அணி, அயர்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு தேர்வு செய்த இங்கிலாந்து அணியில்,  சோபி எக்ல்ஸ்டோன் தலைமையிலான பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு, அயர்லாந்தை 118/9 என்ற கணக்கில் கட்டுப்படுத்தினர். தொடக்க வீராங்கனைகள் ஏமி ஹண்டர் மற்றும் அலானா டால்செல் முதல் 5 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். பின்னர் கேப்டன் கேபி லூயிஸும் விரைவில் வெளியேற, அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அயர்லாந்து அணியில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தும், லூயிஸ் லிட்டில் இறுதி ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்தும் அணியை 118/9 என்ற போராடக்கூடிய இலக்கிற்கு கொண்டு சென்றனர். பின்னர் 119 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. பவர்பிளே ஓவர்களிலேயே 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஐமி…

Read More

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று (ஜூன் 17) ராஜஸ்தானின் கோட்டாவில் “எக்கோ ஆஃப் ஸ்டூடன்ட்ஸ்” (Echo of Students) என்ற பெயரில் பிரம்மாண்ட மாணவர் பேரணியை நடத்துகிறார். நீட், யூஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு, அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் மற்றும் மாணவர்கள், வேலைவாய்ப்பு தேடுபவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவை இந்த பேரணியின் முக்கிய அம்சங்களாக உள்ளன. முன்னதாக நாட்டின் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இந்த பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள ராகுல் காந்தி, “இளைஞர்களின் எதிர்காலமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஆனால் அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார். எக்ஸ் தளத்தில் ராகுல்காந்தி வெளியிட்ட பதிவில், “வினாத்தாள் கசிவுகள், தேர்வு நிர்வாகக் குளறுபடிகள், ரத்து செய்யப்படும் ஆட்சேர்ப்புகள், உயர்ந்து வரும் கல்விக் கட்டணங்கள், தனியார்மயமாக்கல் மற்றும் ஊழல்கள் ஆகியவை கோடிக்கணக்கான…

Read More

தமிழ்நாட்டில் பகலில் வெப்பத்தின் தாக்கம் நிலவினாலும் அடுத்த 3 முதல் 4 நாட்கள் மாலை அல்லது இரவு இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொய்வடைந்த நிலையிலேயே நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு மற்றும் நிலவும் ஈரப்பதம் காரணமாக இன்று முதல் 20 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மாலை அல்லது இரவு அல்லது அதிகாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடகடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி போன்ற மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி போன்ற மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களான இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,…

Read More

யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத வகையில் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், இன்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கும் வகையில் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கிறது. ஆம்… 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 18ஆம் தேதி கூடுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் தவெக உறுப்பினர்கள் 106 பேர் உள்பட  மொத்தம் 145 பேர் சட்டசபைக்கு புதியவர்கள். சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏக்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கிற 2 நாள் பயிற்சி நிகழ்வினை ஜூன் 16ஆம் தேதி கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவருடன் பேரவைத் ஜே.சி.டி.பிரபாகர், அவை முன்னவர் செங்கோட்டையன், பேரவை துணைத் தலைவர் எம். ரவிசங்கர், அரசு தலைமை கொறடா ஆர். சபரிநாதன் ஆகியோர் கலந்து கொண்டபோதும், ஐந்துமுக குத்துவிளக்கினை…

Read More

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை தவறாகச் சித்தரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவருக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம் சமூக மக்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 3.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டை, அவர்களின் மக்கள்தொகை மற்றும் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் 7 விழுக்காடாக உயர்த்தித் தர வேண்டும் என்பது அச்சமூக மக்களின் நீண்டகால, நியாயமான கோரிக்கையாகும். எஸ்டிபிஐ கட்சியும் தொடர்ந்து தமிழக அரசிடம் இக்கோரிக்கையை வலியுறுத்துவதோடு, சமூக நீதியின் அடிப்படையில் எல்லா சமூக மக்களுக்கும் அவரவருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது.  இந்நிலையில், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை தற்போதைய தமிழ்நாடு அரசிடம் கொண்டு சென்று உரிய முறையில் பரிசீலிப்போம் என்று  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் உறுதியளித்திருந்ததை, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது…

Read More

தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன்  இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பில் இந்த வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டு விளக்கம் அளித்தார். ஒவ்வொரு சிலைடாக வெளியிட்ட அவர் குட்டிக் கதையைக் கூறி அவற்றை விளக்கினார். தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை என்பது வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகவும் கடந்த திமுக ஆட்சியில் மட்டுமே தமிழ்நாட்டின் கடன்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் 2021ல் ரூ.5லட்சம் கோடியாக இருந்த கடன் 2026ல் ரூ.10லட்சம் கோடியாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வரவைக் காட்டிலும் செலவே அதிகமாக உள்ளதாகவும், மேலும் 2021 – 2026 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் என்பது வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளதாகவும், ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுதாகவும் தெரிவித்தார். வருவாய் பற்றாக்குறை…

Read More

அரசியல் குறித்து யாருக்கு யார் பாடம் நடத்துவது என்பதுபோல் வெளியாகியுள்ள இரண்டு ஏ.ஐ. புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 17-வது சட்டப்பேரவையின் புதிய எம்.எல்.ஏக்களுக்கு  2 நாள் பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தொடங்கி வைத்துள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மீடியாக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பாடம் நடத்துவது போல் ஏ.ஐ.யில் உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்தப் புகைப்படத்தில்,   1. ஊடகங்களை மதியுங்கள் ; அவர்கள் பொதுமக்களின் கருத்தை வடிவமைக்கிறார்கள் என்பதை உணர்ந்து அவர்களுடன் கண்ணியமாகச் செயல்படுங்கள். 2. முதலில் கேளுங்கள், பிறகு பதிலளியுங்கள் ; அவர்கள் பேசுவதை முழுமையாகக் கவனியுங்கள். அவர்கள் பேசி முடிக்கும் வரை இடைமறிக்காதீர்கள். 3. நிதானமாகவும் கட்டுப்பாட்டுடனும் இருங்கள் : கோபத்தையோ அல்லது அகங்காரத்தையோ வெளிப்படுத்தாதீர்கள். எப்பொழுதும் அமைதியைக் கடைப்பிடியுங்கள். 4. முக்கியக் கருத்தைச் முதலில்…

Read More

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் குறு, சிறு விவசாயிகள் பெற்றுள்ள ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75,000-க்கு மேல் பெற்றுள்ள பயிர்க்கடனுக்கு ரூ.35,000 மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பது, தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணானதாகும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். முன்னதாக, RBI வழிகாட்டுதல்கள் மற்றும் அரசின் நிதிநிலையை காரணம் காட்டி ரூ.50,000 வரை மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களும், பல்வேறு அரசியல் கட்சிகள் எழுப்பிய வலுவான எதிர்ப்பின்  காரணமாகவே தற்போது அந்த வரம்பு ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இது பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமையாது எனக் கூறியுள்ளார். காலநிலை மாற்றம், எதிர்பாராத இயற்கை பாதிப்புகள், அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டுகள் உள்ளிட்ட காரணங்களால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தாங்கள் பெற்றுள்ள பயிர்க்கடன் ஒன்றரை லட்சம்…

Read More

விராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ, சி.விஜயபாஸ்கர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தவெக ஆட்சிக்கு சி.விஜயபாஸ்கர் ஆதரவளித்ததை தொடர்ந்து அவர் வகித்து வந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி அறிவித்தார். மேலும் கட்சி தாவல் சட்டப்படி தனக்கு எதிராக இருந்த அதிமுக எம்.எல்.ஏக்கல் மீது நடவடிக்கை எடுக்கவும் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருந்த எம்.எல்.ஏக்களில் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தங்கள். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடிக்கு எதிராக இருந்த வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தனர். இவர்களில் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சி.வி.சண்முகம், விராலிமலை…

Read More

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தோல்விக்கு திமுகதான் காரணம் என புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான வைத்திலிங்கம் எம்.பி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசு மாணவர் சமுதாயத்திலே பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. பல்வேறு குளறுபடிகளை செய்து சி.பி.எஸ் தேர்வு முறையை குழப்பி உள்ளனர். சிபிஎஸ்சி நிர்வாக முறையே தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது. இதன் மூலம் குளறுபடிகளை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நீட் தேர்வில் என்றும் பல்வேறு குளறுபடிகள் தொடர்கிறது. இந்த குளறுபடிகளை மாணவர்களே கண்டுபிடித்து வெளிப்படுத்தி உள்ளனர். பிரதமர் இதற்கான எந்த ஒரு காரணத்தையும் சொல்லவில்லை. இந்த நிர்வாக சீர்கேடுகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை அரசு பின்பற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர்நிலைப் பள்ளியில் மூன்றாவது  மொழியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.…

Read More