Author: Editor TN Talks
ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக் 2026 தொடரின் ஐந்தாவது நாள் ஆட்டங்கள் ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ. சர்வதேச மைதான வளாகத்தில் நடைபெற்றன. முதலாவது போட்டியில், டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஞ்சி டைட்டன்ஸ் அணி தடுமாறிய ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவர்கள் முடிவில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜாம்ஷெட்பூர் அணியின் பந்துவீச்சில் பிரத்திக் ரஞ்சன் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷ் ராணா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 120 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் சுதாரித்தபடி, 17.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்காக குமார் தேவோப்ரத் 27 ரன்களும், ஆதர்ஷ் கிரி 27 ரன்களும் சேர்த்து முக்கிய பங்களிப்பு அளித்தனர். ரவி ஷர்மா 12 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தார். ராஞ்சி டைட்டன்ஸ் அணியின் சார்பில்…
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக பொறுப்பை ஏற்றுக் கொண்ட ச.ஜோசப் விஜய், தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் என கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் என 717 மதுக்கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடும்படி மே மாதம் 12ஆம் தேதி உத்தரவிட்டார். இதன்படி வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இருந்த 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இயங்கி வந்த 255 கடைகள் என மொத்தம் 717 கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்பட்டன. இந்தக் கடைகளில் பணியாற்றி வந்த மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட விற்பனையாளர்கள் வேறு கடைகளில் பணியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள மதுக்கடைகள் எண்ணிக்கை பற்றிய தகவலை வழங்கவும், மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலை கேட்டு, டாஸ்மாக் நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்ட ஒருவருக்கு, ஒருவர் ஜூன்…
அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகியிருக்கிறார். மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர், தனது அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் இசை நிறுவனம் மூலம் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து முதல் வெளியீடாக ’அரவிந்த்’என்ற பாடலை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், திரைப்பட இசையைத் தாண்டி பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை வழியே தனித்துவமான கதைகளைச் சொல்லும் புதிய முயற்சியை அனிருத் மேற்கொண்டிருப்பதையும் காட்டுகிறது. 2012 ஆம் ஆண்டு வைரலான ’வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் அனிருத் நாடு முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ’ஜெயிலர்’, ’கூலி’, ’விக்ரம்’, ’லியோ’ மற்றும் ’தேவரா: பார்ட் 1’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார்.…
அதிமுக வெற்றி பெற்றது பாமக போட்ட பிச்சை எனக் கூறிய சி.வி. சண்முகம், அமைச்சரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை என கலசப்பாக்கம் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கொறடாவுமான அக்ரி.கிருஷ்ணமூரத்தி பதிலடி கொடுத்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும், கொறடாவுமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;- சிவி.சண்முகம் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது அதிமுகவை பற்றியும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் தவறான கருத்துக்களை சொல்லி கழகத்தில் குழப்பத்தை விளைவிக்க முற்பட்டுள்ளார். அதிமுகவிலிருந்து சாரை சாரையாக தொண்டர்கள் மாற்றுக் கட்சிக்கு சீட்டு கட்டு சரிவது போல் செல்வதாக சொல்வது தவறு. அதிமுக இயக்கத்தின் உண்மையான தொண்டர்கள் எடப்பாடியார் தலைமையிலான தொண்டர்கள் யாரும் இயக்கத்தை விட்டு செல்லவில்லை. அதிமுக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம். திமுக தீய சக்தி கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இயக்கம். அதிமுக. ஜெயலலிதா எம்ஜிஆர் ஆகிய இரு பெரும் தலைவர்களுக்கு பின்னால் எடப்பாடி…
புதுச்சேரி விமான நிலையத்திற்கு நடப்பாண்டில் முதல் முறையாக ஒரு லட்சம் பயணிகள் வருகை தந்துள்ளதாக, விமான நிலைய இயக்குனர் ராஜசேகர ரெட்டி தெரிவித்துள்ளார். விமான நிலைய விரிவாக்கம் 2030க்குள் முடிவடையும் எனவும் அவர் கூறியுள்ளார். புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு பயணிகள் சேவை இன்று நடைபெற்றது. புதுச்சேரி விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் இன்று காலை விமான நிறுவன ஊழியர்கள், காவல்துறை மற்றும் பிற விமான நிலைய பணியாளர்கள் உள்ளிட்ட இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் இணைந்து “வந்தே மாதரம்” என்ற தேசியப் பாடலைப் பாடினார்கள். தொடர்ந்து விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு பாரம்பரிய திலகம் மற்றும் ரோஜா பூக்களை கொண்டு வரவேற்பு அளித்தனர். மேலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வைக்கப்பட்டுள்ள செல்ஃபி பாயின்டில் பயணிகளும் ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து விமான…
இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (15.6.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றிவரும் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம், டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு…
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் மதுபாட்டில் விலை மீது கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்வது குறித்து மதுப்பிரியர்கள் புகார் அளித்து வந்தனர். கடந்த ஆட்சியில் நடந்த இந்த கூடுதல் விலை விவகாரம் தவெக ஆட்சியிலும் தொடர்ந்தால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் அதிருப்தியையும் வீடியோக்களாகப் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில், பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கியதாக, கடந்த 20 நாட்களில் 200 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் உத்தரவை மீறி செயல்படும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டாஸ்மாக் எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது. 10 ரூபாய் முக்கியமா, வேலைமுக்கியமா என டாஸ்மாக் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி தொடருமா? எந்த அளவுக்குப் பலன் தரும் என்பதே மதுப்பிரியர்களின் எதிர்பார்ப்பாக…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறு வழக்கை வாபஸ் பெறக்கோரி, கல்லூரி மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வீடியோ எடுத்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்களையே போலீசார் மிரட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில், மாடுகளை மேய்த்து சேதப்படுத்தியது தொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு 3 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை நடத்துவதற்கு மாணவியின் தாத்தா உதவி செய்வதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி (புதன்கிழமை) மாலை சுமார் 7 மணியளவில், விவசாய நிலத்தில் இருந்த தாத்தாவை பார்ப்பதற்காக கல்லூரி மாணவியும் அவரது தாயாரும் சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த எதிர் தரப்பைச் சேர்ந்த பேர் கொண்ட கும்பல், வழக்கு விஷயமாக தாத்தாவிடம் வாக்குவாதத்தில்…
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் – வளர்ச்சி திட்டங்களுக்குக் கால அவகாசம் கேட்பது நியாயமாக இருக்கலாம்; ஆனால் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை அவசியம் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களும், அவருக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களும் எப்போது உணரப்போகிறார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் ஆயுதப்படை பெண் காவலர் சங்கரன்கோவில் அருகே 10 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 9 வயது மாணவி கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை என கடந்த இரு தினங்களில் பாலியல் ரீதியான தொந்தரவுக்கும், வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டவர்கள் பட்டியல் தொடர்கிறது. இதில் கும்மிடிப்பூண்டியில் பால் மனம் மாறா பச்சிளம் குழந்தை காம வெறியர்களால் சிதைக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் குழந்தையின் சடலம் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டதாக வரும் செய்தி மனதை உலுக்குவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.…
தொழிற் துறையில் தமிழக மகளிர் இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்து வருவதாக பெருமையடித்துக் கொள்ளும் நிலையில் நாள்தோறும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது. அதிலும் தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள இந்த 35 நாட்களில் நிகழ்ந்துள்ள சிறுமிகள் மற்றும் மகளிருக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், பாலியல் வன்கொடுமைகளும் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை, மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு தவெக நிர்வாகி பாலியல் தொல்லை, தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி, சேலம் எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு மின்வாரிய ஊழியர் சீரங்கன் என்பவர் பாலியல் தொல்லை சென்னை…