Close Menu
    What's Hot

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»சினிமா»வெளியானது அரவிந்த் ஆல்பம் ; புதிய அத்தியாயம் தொடங்கிய அனிருத்
    சினிமா

    வெளியானது அரவிந்த் ஆல்பம் ; புதிய அத்தியாயம் தொடங்கிய அனிருத்

    Editor TN TalksBy Editor TN TalksJune 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 aniruth
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகியிருக்கிறார்.

    மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர், தனது அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ்  இசை நிறுவனம் மூலம் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து முதல் வெளியீடாக ’அரவிந்த்’என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், திரைப்பட இசையைத் தாண்டி பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை வழியே தனித்துவமான கதைகளைச் சொல்லும் புதிய முயற்சியை அனிருத் மேற்கொண்டிருப்பதையும் காட்டுகிறது.

    2012 ஆம் ஆண்டு வைரலான ’வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் அனிருத் நாடு முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ’ஜெயிலர்’, ’கூலி’, ’விக்ரம்’, ’லியோ’ மற்றும் ’தேவரா: பார்ட் 1’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரசிகர்களும் திரையுலகினரும் அவருடைய இசை திறமைக்கு ‘ராக்ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்து கொண்டாடினர்.

    வேகமாக மாறிவரும் இன்றைய டிஜிட்டல் இசை சூழலில் நிலைத்திருக்கப் போராடும் ஒரு சுயாதீனக் கலைஞரின் சவால்களை ‘அரவிந்த்’படைப்பின் மூலம் அனிருத் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

    014 aniruth A

    இப்பாடலின் நாயகனான அரவிந்த் இசையமைப்பாளர் அனிருத்தின் மற்றொரு வடிவம். பல சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் தனது வாழ்வையே இசைக்காக அர்ப்பணித்த ஒரு தீவிர இசைக்கலைஞர் அரவிந்த்.

    இந்தப் பாடல் குறித்து அனிருத் பகிர்ந்து கொண்டதாவது, “ஏதோவொரு விதத்தில் நம் அனைவரையும் பிரதிபலிக்கும் ஒருவன் தான் அரவிந்த். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘அரவிந்த்’ இருக்கிறார்.

    ஆனால் இந்தப் பாடல், தனது திறமையை உலகுக்கு நிரூபித்து வாய்ப்புக்காக ஏங்கும் ஒரு சுயாதீன இசைக் கலைஞரைப் பற்றி பேசுகிறது. இணையத்தில் எண்ணற்ற உள்ளடக்கங்கள் நிரம்பியுள்ள இந்தக் காலத்தில், ஒரு தனித்துவமான கலைஞர் வெற்றி பெற முயற்சிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை மற்றும் நையாண்டியுடன் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

    014 aniruth B

    இந்தப் பாடல் அனிருத்தின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. தனது சொந்த அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பாதையை இதில் பிரதிபலித்துள்ள அவர், இதே போன்ற பயணத்தில் இருக்கும் பல கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் இந்தப் பாடல் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும் என நம்புகிறார். அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம், வரும் மாதங்களில் பல்வேறு வகையான சுயாதீன இசைத் திட்டங்கள் மற்றும் புதிய கருத்தாக்க இசைப் படைப்புகளை உருவாக்கி வெளியிட அனிருத் திட்டமிட்டுள்ளார்.

    Anirudh Ravichander Aravind Album Music Album Tamil Music
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி
    Next Article உலக சாதனை படைத்த மானுவல் நோயர்! 60 வருட வரலாற்றை உடைத்த ஜெர்மன் சிங்கம்!
    Editor TN Talks

    Related Posts

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    June 15, 2026

    தமிழகத்தில் மூடப்பட்ட 717 மதுக் கடைகள் எவையெவை? டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை

    June 15, 2026

    சி.வி.சண்முகம் நாடாளுமன்ற உறுப்பினரானது எடப்பாடி பழனிசாமி போட்ட பிச்சை – அட்டாக் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.