Close Menu
    What's Hot

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»Featured»உலக சாதனை படைத்த மானுவல் நோயர்! 60 வருட வரலாற்றை உடைத்த ஜெர்மன் சிங்கம்!
    Featured

    உலக சாதனை படைத்த மானுவல் நோயர்! 60 வருட வரலாற்றை உடைத்த ஜெர்மன் சிங்கம்!

    Editor web3By Editor web3June 15, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Manuel Neuer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காலங்கள் மாறலாம்… தலைமுறைகள் கடக்கலாம்… ஆனால், ஒரு சில பெயர்கள் மட்டும்தான் சரித்திரத்தின் பக்கங்களில் நிரந்தரமாக செதுக்கப்படும். 2024 யூரோ தொடரோடு சர்வதேச கால்பந்துக்கு விடை கொடுத்தார். ‘அவர் கதை முடிந்தது’ என்றார்கள் பலர். ஆனால், சிங்கம் எப்போதும் நிரந்தரமாக ஓய்வெடுப்பதில்லை! இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் ஜெர்மனி ஜெர்சியில் வலம் வந்து, உலகக் கோப்பை வரலாற்றையே மாற்றி எழுதியிருக்கிறார் மானுவல் நோயர்.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹூஸ்டனின் NRG மைதானத்தில் குராசாவ்  அணிக்கு எதிரான போட்டியில் , 40 வயதான நோயர், ஜெர்மனியின் தொடக்க லெவனில் களமிறங்கிய அந்த நிமிடம்… உலகமே எழுந்து நின்று கைதட்டியது. 2010, 2014, 2018, 2022… இப்போது 2026 என முழுமையாக ஐந்து வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் களம் கண்ட உலகின் இரண்டாவது கோல்கீப்பர் என்ற அசாத்திய சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் நோயர்.

    மெக்சிகோவின் ஆண்டோனியோ கபர்ஜாலுக்குப் பிறகு, சரியாக 60 ஆண்டுகள் கழித்து இந்த அரிய சாதனையை ஒரு கோல்கீப்பர் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்றால், இது சாதாரண சாதனை அல்ல, அசாத்திய சாதனையாக பார்க்கப்படுகிறது.

     பஃபன், காஸிலாஸ், ஒச்சோவா எனப் பல ஜாம்பவான்கள் உலகக் கோப்பை ஸ்குவாடில் இருந்திருக்கலாம். ஆனால், ஐந்து உலகக் கோப்பைகளிலும் மைதானத்திற்குள் இறங்கி, கோல் போஸ்ட்டை மிரட்டிய பெருமை, நோயருக்கு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.

    போட்டி தொடங்கிய 21-வது நிமிடத்தில், குராசாவ் அணி, திடீரென ஒரு கோல் அடித்து, நோயருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி கொடுத்தார்கள். ‘ஐயோ,  கிளீன் ஷீட், அதாவது எதிரணியை கோல் அடிக்கவிடாமல் நோயரால் தடுக்கமுடியவில்லையே என்று  ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

    ஆனா… நம்ம ஜெர்மனி டீம் சும்மா விடுமா என்ன? ‘எங்க அண்ணன் வரலாற்று சாதனை படைச்ச நாள் இன்னைக்கு… சும்மா விடமாட்டோம்’ அப்படின்னு வெறித்தனமா விளையாட ஆரம்பிச்சாங்க! அடுத்தடுத்து கோல் மழை பொழிஞ்சு, 7-க்கு 1 என்ற கணக்குல குராசாவ் அணியை துவம்சம் பண்ணிட்டாங்க. நோயரின் இந்த வரலாற்று சாதனையை, ஒரு மரண மாஸ் வெற்றியோட கொண்டாடி முடிச்சிருக்கு ஜெர்மன் படை.

    இவரின் சாதனை வேட்டை இதோட முடியல, உலகக்கோப்பை வரலாற்றிலேயே இதுவரைக்கும் 20 மேட்ச் விளையாடி, பிரான்ஸ் நாட்டோட முன்னாள் கேப்டன் ஹியூகோ லோரிஸ்-ஓட உலக சாதனையை, தற்போது நோயர் சமன் செய்து அசத்தியுள்ளார்.

    இன்னும் ஒரே ஒரு மேட்ச் விளையாடினா போதும்… உலகக்கோப்பையில் அதிக மேட்ச் விளையாடிய கோல்கீப்பர் என்ற உலக சாதனையை நோயர் தனியொருவனாக முறியடிப்பார். அதுமட்டும் இல்லாம, இன்னும் சில போட்டிகளில் கோல் எதுவும் வாங்காம ‘கிளீன் ஷீட்’ பண்ணிட்டா… ஃபேபியன் பார்தேஸ், பீட்டர் ஷில்டன் உள்ளிட்ட கால்பந்து உலகத்தோட பழைய சாதனைகள் எல்லாம் சுக்குநூறா உடைஞ்சுடும். மொத்த உலகக்கோப்பை வரலாற்றுலயே ‘தி கிரேட்டஸ்ட் கோல்கீப்பர்’ என்ற சாதனையை பெறுவார்.

     

    60 Years Achieve Astonishing Feat Creates History First Player First Player In The World Manuel Neuer
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவெளியானது அரவிந்த் ஆல்பம் ; புதிய அத்தியாயம் தொடங்கிய அனிருத்
    Next Article ‘ராயல்’ வார்த்தைக்கும் வாளுக்கும் தடை? இந்திய ராணுவ வீரர்களுக்கு புதிய Dress Code அறிமுகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    June 15, 2026

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    June 15, 2026

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    களம் இறங்கிய 18 வினாடிகளில் கோல்!. துனிசியாவை 5-1 என துவம்சம் செய்தது ஸ்வீடன்!

    சுந்தர் பிச்சைக்கு அதிர்ச்சி!. மேடையை விட்டு வெளியேறிய மாணவர்கள்!. அமெரிக்காவில் பரபரப்பு!

    பாக்கை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு  சச்சின், பிசிசிஐ செயலாளர் பாராட்டு

    திருச்சி : தவெக நிர்வாகி மனைவிக்கு கொலை மிரட்டல்..! தவெக நிர்வாகிகளின் அட்டூழியம்..!

    ஜார்கண்ட் டி20 கிரிக்கெட் லீக்: ஜாம்ஷெட்பூர் ஸ்டீலர்ஸ் வெற்றி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.