Author: Editor TN Talks
இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஜூன் 13-ஆம் தேதி சனிக்கிழமை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13ஆயிரத்து 860க்கும், சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கம் விலையில் மாற்றமின்றி தொடங்கியது. இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வைக் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.210 அதிகரித்து 1 கிராம் ரூ.14,070க்கும், சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ஒரு சவரனின் விலை ரூ.1,12,560க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் மூன்றுநாட்கள் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக மாநில பொதுச் செயலாளர் யுவராஜா தெரிவித்துள்ளார். ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று கூடியது. அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நட்புடனே வெளியேறுவதாகத் தெரிவித்தார். இதனால் ஜி.கே.வாசன் அடுத்ததாக தவெகவில் இணைவாரா என அரசியல் களத்தில் ஐயம் எழுந்தது. இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த 25 ஆண்டுகளாக நான் என் உழைப்பையும், நேரத்தையும் அர்ப்பணித்து பயணித்த அரசியலிலிருந்து விலகுவதற்கான முடிவை இன்று எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனது அரசியல் வாழ்க்கையிலும், பொதுவாழ்விலும் ஆரம்ப கட்டத்திலிருந்தே எனக்கு ஒரு நல்ல தலைவராகவும், வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்தவர் நீங்கள். எனது அனைத்து…
கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமை நிகழ்வினைச் சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் ஆட்சி என எதுவும் உள்ளதா என கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாக கவலை தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி, பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார். ‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என கனிமொழி எம்.பி ஆதங்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் நான்கு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் நிறுவனத்தின் முயற்சி கவலை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியின்போது, தமிழ் நாட்டு வேளாண் பெருங்குடி மக்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த வகையிலான ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டோம். ONGC நிறுவனம் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பிற்கான ஆய்வு மேற்கொள்ள விண்ணப்பித்த போதுகூட அந்த முயற்சியினைத் தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்திடும் வகையில் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ( State Environment Impact Assessment Authority- SEIAA) இத் திட்டத்திற்கான சுற்று சூழல் அனுமதியினை வழங்கக்கூடாதெனத் தக்கவகையில் அறிவுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்டம் , பரங்கிப்பேட்டை அருகே கடற்பகுதியில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும் புதிதாகப் பதவியேற்றிருக்கும் அரசு தனது உறுதியான…
ஓமன் கடற்கரைக்கு அருகே வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அமெரிக்காவின் கருத்துக்களுக்கு மத்திய அரசு மௌனம் காப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கடுமையாக விமர்சித்துள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, “அமெரிக்க தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த பிறகும் மோடி அரசின் மௌனம் வெட்கக்கேடானது. இந்த உயிரிழப்புக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக, அமெரிக்கா மிரட்டல் மற்றும் உத்தரவு மொழியைப் பயன்படுத்துகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், “இந்தியா ஒரு இறையாண்மை மிக்க சுதந்திர நாடு என்பதை அமெரிக்காவுக்கு உறுதியாக எடுத்துக்கூற வேண்டும். ஆனால் சமரசம் செய்துகொண்ட பிரதமர் மோடி, நாட்டின் குடிமக்களின் பாதுகாப்பையும், இந்தியாவின் இறையாண்மையையும் காக்கத் தவறிவிட்டார்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ்…
தவெகவை பொறுத்தவரை ஆள்பிடிக்கும் நிலை இல்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வேறு கட்சியில் இருந்து வந்த ஒரே ஒருவருக்காக பெரிய விழா எடுத்து பெரிய சாதனை சரித்திரம் படைத்தது போன்று செய்துள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை ஆள் பிடிக்கும் நிலை எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார். தமிழக வெற்றி கழக தலைவரை நாடி மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும், பல்வேறு இயக்கங்களில் இருந்து வருவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் கூறிய அவர் திமுக ஆட்சியில், ஆட்சி நடைபெறுகின்ற பொழுதே அனிதா ராதாகிருஷ்ணனை சேர்க்கவில்லையா என்று கேள்வி எழுப்பினார். திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சதித்திட்டம் தீட்டியவர் யார் என்று மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதுவரை தமிழக…
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கடற்படை, ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த ஆடியோ பதிவு ஒன்று பொது கடல்வழி வானொலி அலைவரிசையில் வெளியாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் இருந்த வணிகக் கப்பல் ஒன்றின் பணியாளர் வழங்கிய இந்த வானொலி ஒலிபரப்பில், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் இயங்கும் அனைத்துக் கப்பல்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், ஹார்முஸ் நீரிணை “முற்றிலும் மூடப்பட்டுள்ளது” என்றும், அந்தப் பாதையில் எந்தவொரு கப்பல் நடமாட்டமும் இருந்தால் அது “தீர்க்கமாக” கையாளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. “உங்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் பொருட்டு, மறு அறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் நீரிணையில் எவ்விதமான நகர்வுகளையும் தவிர்க்கவும்” என்று அந்த எச்சரிக்கை கூறுகிறது. இந்த ஆக்ரோஷமான நிலைப்பாட்டிற்கு மத்தியில், தூதரக ரீதியிலான முயற்சிகள் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அறிவிக்கையில், ஈரானுடனான…
உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முந்தைய திமுக அரசின் அரசாணையையே தவெக அரசும் பின்பற்றுவது அரசுப் பள்ளி மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளதாவது;- அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை முடக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் சுமார் 250 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என மாற்றுமாறு, முந்தைய திமுக அரசு பிறப்பித்த அதே அரசாணையை தற்போதைய தவெக அரசும் முன்மொழிவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. அதிகளவிலான கட்டணம் செலுத்தி தனியாரிடம் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் செல்ல முடியாத அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன்களைத் துல்லியமாகக் கணித்து, போட்டிகளில் அவர்களின் பங்கேற்றலை உறுதி செய்யும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அரசு குறைக்க நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை. தவெக அரசின் இந்த தவறான அணுகுமுறையால், 700…
திண்டிவனத்தில் அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேள்வி கேட்டதால்தான் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கியதாகவும், இன்றைய அதிமுகவில் கேள்வி கேட்பவர்களை வெளியேற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார். சர்வாதிகாரப் போக்கில் செயல்பட்டதால் அதிமுக இன்று மிகப்பெரிய இழப்பை சந்தித்திருப்பதாகவும், இத்தனை தோல்விக்கும் என்ன காரணம் என தொண்டர்கள் உணர்ந்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமி உணரவில்லை எனவும் கூறினார். தீய சக்தி திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட அதிமுக, இன்று அதே திமுகவோடு கூட்டணி போட்டு முதலமைச்சராக வேண்டும் என நினைத்தபோதே அதிமுகவின் சுயத்தை இழந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக நாடகம் போடுகிறார். இன்று கொத்துக் கொத்தாக அதிமுகவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சீட்டு கட்டு போல இந்த இயக்கம் சரிகிறது. ஆனால் இன்னும் எடப்பாடி பழனிசாமி தனது தவறை உணரவில்லை. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் 31-இல்…
சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஜூன் 17-ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடர்பாக இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.