இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஜூன் 13-ஆம் தேதி சனிக்கிழமை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13ஆயிரத்து 860க்கும், சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையானது.
ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கம் விலையில் மாற்றமின்றி தொடங்கியது.
இந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வைக் கண்டுள்ளது.
கிராமுக்கு ரூ.210 அதிகரித்து 1 கிராம் ரூ.14,070க்கும், சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ஒரு சவரனின் விலை ரூ.1,12,560க்கும் விற்பனையாகிறது.
கடந்த வாரத்தில் மூன்றுநாட்கள் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
