Close Menu
    What's Hot

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மகனை பதவிக்கு கொண்டு வர எடப்பாடி நாடகமாடுகிறார் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
    Featured

    மகனை பதவிக்கு கொண்டு வர எடப்பாடி நாடகமாடுகிறார் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 cvs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டிவனத்தில் அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  கேள்வி கேட்டதால்தான் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டு அதிமுகவை தொடங்கியதாகவும், இன்றைய அதிமுகவில் கேள்வி கேட்பவர்களை வெளியேற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

    சர்வாதிகாரப் போக்கில் செயல்பட்டதால் அதிமுக இன்று மிகப்பெரிய இழப்பை சந்தித்திருப்பதாகவும், இத்தனை தோல்விக்கும் என்ன காரணம் என தொண்டர்கள் உணர்ந்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமி உணரவில்லை எனவும் கூறினார்.

    தீய சக்தி திமுக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட அதிமுக, இன்று அதே திமுகவோடு கூட்டணி போட்டு முதலமைச்சராக வேண்டும் என நினைத்தபோதே அதிமுகவின் சுயத்தை இழந்து விட்டது.

    எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக நாடகம் போடுகிறார்.

    இன்று கொத்துக் கொத்தாக அதிமுகவில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். சீட்டு கட்டு போல இந்த இயக்கம் சரிகிறது. ஆனால் இன்னும் எடப்பாடி பழனிசாமி தனது தவறை உணரவில்லை.

    இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் 31-இல் வெற்றி பெற்றோம் என்றால் அது பாமக போட்ட பிச்சை. கூட்டணியில் பாமக இல்லையென்றால் வடமாவட்டங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்காது.

    பாமக இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியே தட்டுத் தடுமாறிதான் ஜெயித்திருப்பார்.

    அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று கூறிவருகிறேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிமுக செயற்குழுவையாவது எடப்பாடி பழனிசாமி கூட்டவேண்டும். ஆண்டுக்கு 2 முறை கூட்டவேண்டிய கூட்டத்தை கூட்டாமல் உள்ளார்.

    கடந்த 8 ஆண்டுகளாக எடப்பாடியின் பேச்சைக் கேட்ட பாவத்திற்குத்தான் தற்போது அன்பவித்து வருகிறோம்.

    அதிமுக காப்பாற்றப்படவேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாஸ் ரெக்கார்டு!. 92 வருசமா தோல்வியே சந்திக்காத பிரேசில்!. 
    Next Article மு.க.ஸ்டாலினைப் பின்பற்றும் ஜோசப் விஜய் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    July 14, 2026

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    July 14, 2026

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சொல்றது ஒண்ணு.. செய்யுறது ஒண்ணு..!! மாணவிகள் மீது லத்தி சார்ஜ் சம்பவம்..!! விஜய்யை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    இந்தாங்க.. என் ‘ஹார்ட்’ உங்களுக்குத்தான்..!! மேடையில் CM விஜய் செய்த செயல்..!!

    கடல், வான் ஆயுதங்கள் அழிவு: கற்கால நிலைக்கு தள்ளப்பட்டது ஈரான்..!! டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!

    மேட்டூர்; 2 குழந்தைகளைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை; குடும்பத் தகராறில் மாமியார் வீட்டில் நிகழ்ந்த துயரம்!

    தவெக எம்.எல்.ஏ-க்கள் பேரம் வழக்கு: களமிறங்கியது அமலாக்கத்துறை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.