Close Menu
    What's Hot

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மாஸ் ரெக்கார்டு!. 92 வருசமா தோல்வியே சந்திக்காத பிரேசில்!. 
    Featured

    மாஸ் ரெக்கார்டு!. 92 வருசமா தோல்வியே சந்திக்காத பிரேசில்!. 

    Editor web3By Editor web3June 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    brazil 92 years record
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    FIFA உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் தனது தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி மொராக்கோவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. நட்சத்திர வீரர் நெய்மர் உடல் தகுதி குறைவு காரணமாக இந்த ஆட்டத்தில் பங்கேற்காத நிலையில், ஐந்து முறை உலகக் கோப்பை வென்ற பிரேசில் அணியைப் பார்க்க சுமார் 80,663 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

    ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இஸ்மாயில் சபாயிரி, முதல் கோலை அடித்து தன் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், இந்த மகிழ்ச்சி 11 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 32-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினி ஜூனியர் , கோல் அடித்து அணியைச் சமநிலைக்குக் கொண்டு வந்தார். முதல் பாதியின் முடிவில் 1-1 என இரு அணிகளும் சமமாக இருந்தன. இரண்டாம் பாதியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாகப் போராடியும், கோல் எதுவும் விழாததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம் குரூப் சி  பிரிவில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. உலகக் கோப்பை வரலாற்றில் பிரேசில் அணிக்கு எதிராக மொராக்கோ கோல் அடித்தது இதுவே முதல் முறையாகும்.

    இந்த டிரா முடிவின் மூலம், கடந்த 92 ஆண்டுகளாகத் தொடரும் ஒரு வரலாற்றுச் சாதனையை பிரேசில் அணி தக்கவைத்துள்ளது. அதாவது, 1934-ம் ஆண்டு உலகக் கோப்பை முதல், இன்று வரை தனது தொடக்க ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வியைச் சந்தித்ததே இல்லை. இதற்கு முன்னதாக 1930-ம் ஆண்டு நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் யூகோஸ்லாவியாவிடம் 2-1 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியடைந்ததே அந்த அணியின் கடைசித் தொடக்க ஆட்டத் தோல்வியாகும்.

    தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் பிரேசில் அணி, தனது அடுத்த குரூப் ஆட்டத்தில் வரும் ஜூன் 19-ம் தேதி ஹைட்டி அணியை எதிர்கொள்கிறது. அதைத்தொடர்ந்து ஜூன் 24-ம் தேதி ஸ்காட்லாந்து அணியுடன் மோத உள்ளது. 2002-ம் ஆண்டு ஜெர்மனியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்ற பிரேசில், இந்த முறையும் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூன் 17-இல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
    Next Article மகனை பதவிக்கு கொண்டு வர எடப்பாடி நாடகமாடுகிறார் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
    Editor web3
    • Website

    Related Posts

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    June 14, 2026

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    June 14, 2026

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    தூத்துக்குடி மீனவர்கள் உற்சாகம்..!! 61 நாள் தடைக்காலத்துக்குப் பின் நாளை அதிகாலை மீன்பிடி தொடக்கம்..!!

    தவெகவினர் தற்குறி அல்ல, அவர்கள் குறிவைத்து தாக்கும் அம்புக்குறி..!! ராகவா லாரன்ஸ் அதிரடி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.