சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் ஜூன் 17-ஆம் தேதி திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக சட்டமன்ற கொறடா எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 17ஆம் தேதி நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடர்பாக இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
