Close Menu
    What's Hot

    தவெக ஆள்பிடிக்கிறதா? – மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பளீச் பதில்

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மு.க.ஸ்டாலினைப் பின்பற்றும் ஜோசப் விஜய் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
    Featured

    மு.க.ஸ்டாலினைப் பின்பற்றும் ஜோசப் விஜய் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உடற்கல்வி ஆசிரியர் நியமனத்தில் முந்தைய திமுக அரசின் அரசாணையையே தவெக அரசும் பின்பற்றுவது அரசுப் பள்ளி மாணவர்களின் மீது ஏவப்படும் அடக்குமுறை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெவித்துள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளதாவது;-

    அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை முடக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் சுமார் 250 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என மாற்றுமாறு, முந்தைய திமுக அரசு பிறப்பித்த அதே அரசாணையை தற்போதைய தவெக அரசும் முன்மொழிவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

    அதிகளவிலான கட்டணம் செலுத்தி தனியாரிடம் ஸ்போர்ட்ஸ் கோச்சிங் செல்ல முடியாத அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறன்களைத் துல்லியமாகக் கணித்து, போட்டிகளில் அவர்களின் பங்கேற்றலை உறுதி செய்யும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அரசு குறைக்க நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை.

    தவெக அரசின் இந்த தவறான அணுகுமுறையால், 700 மாணவர்களுக்கு கீழ் இருக்கும் சில கிராமப்புற பள்ளிகளின் மீது உடற்கல்வி ஆசிரியரின் நிழல் கூட படாமல் போய்விடும் என்பது எவ்வளவு பெரிய உரிமை மீறல்? இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா?

     

    கல்விக் கூடங்களில் மாணவர்களின் ஒழுக்கத்தை கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அரசு சமரசம் செய்யக்கூடாது எனவும், பழைய நடைமுறையின் படியே உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம் தொடர வேண்டும் எனவும் முதலமைச்சரவை வலியுறுத்துகிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகனை பதவிக்கு கொண்டு வர எடப்பாடி நாடகமாடுகிறார் – சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு
    Next Article தூத்துக்குடி மாலுமியின் மர்ம மரணம்..!! நீதி கேட்கும் குடும்பம், சக ஊழியர்கள்..!!
    Editor TN Talks

    Related Posts

    தவெக ஆள்பிடிக்கிறதா? – மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பளீச் பதில்

    June 14, 2026

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    June 14, 2026

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக ஆள்பிடிக்கிறதா? – மு.க.ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் பளீச் பதில்

    ஈரான் புரட்சிகர காவலர் படை அதிரடி;  ஹார்முஸ் நீரிணையை மூடியது  

    தப்பு செஞ்சா.. தவெகவினரா இருந்தாலும் கடும் நடவடிக்கை பாயும்..!! அமைச்சர் அருண்ராஜ் உறுதி..!!

    சீசன் உச்சக்கட்டத்தில் குற்றால அருவிகள்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்..!!

    தூத்துக்குடி மீனவர்கள் உற்சாகம்..!! 61 நாள் தடைக்காலத்துக்குப் பின் நாளை அதிகாலை மீன்பிடி தொடக்கம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.