Author: Editor TN Talks
தமிழக அரசின் பட்ஜெட் நல்ல விதமாக இருக்கும் எனக் கூறியுள்ள நிதி அமைச்சர் மரிய வில்சன், தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையினை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என உறுதி தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் மற்றும் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மரிய வில்சன் சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார் தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் மரிய வில்சனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற பணிமய மாதா பேராலயத்தில் அமைச்சர் மரிய வில்சன் வழிபாடு நடத்தினார் இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், உலக புகழ் பெற்ற பணிமயமாதா பேராலயத்திற்கு ஆண்டுதோறும் வருவேன். அந்த வகையில் தற்போது வந்துள்ளேன். மாதாவை தரிசனம் செய்துவிட்டு இங்கிருந்து துவங்குகிறேன். நெல்லை மாவட்டத்தில் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நெல்லை மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள்…
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 3 அதிநவீன ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அடுத்தடுத்து மூன்று ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது. நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பல அடுக்கு பாதுகாப்பு அமைப்பு மற்றும் நடுத்தர தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை (NASM-MR) ஆகியவற்றின் சோதனைகள் இதில் அடங்கும். இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து மூன்று ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி ஒரு புதிய வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. பலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு (Ballistic Missile Defence) மற்றும் கப்பல் எதிர்ப்புப் போர் (Anti-ship warfare) ஆகிய துறைகளில் இந்தியாவின் அதிநவீன தொழில்நுட்பத் திறனை இந்த சோதனைகள் நிரூபித்துள்ளன. ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் நடைபெற்ற சோதனையின் போது, பல்வேறு அடுக்கு பலிஸ்டிக்…
வியாழன்று இரவு ஈரான் மீது நடத்துவதாக உத்தேசிக்கப்பட்ட தாக்குதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சோஷியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜூன் 11ஆம் தேதி மாலையில் டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவதாக எச்சரித்திருந்தார். அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை (VERY HARD TONIGHT) நடத்தவுள்ளது. ஈரானின் கடற்படை, விமானப்படை, ரேடார், விமான எதிர்ப்பு பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும், அவற்றின் பெரும்பாலான தாக்குதல் திறன்களும் ஏற்கனவே முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன! அதிக தொலைவில் இல்லாத மிக அருகாமை எதிர்காலத்தில், நாம் ஈரானின் கார்க் தீவு (Kharg Island) மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களைக் கைப்பற்றுவோம். வெனிசுலா நாட்டில் நாம் செய்தது போன்றே, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் அமெரிக்கா தனது வசம் எடுத்துக்கொள்ளும். இந்த நடவடிக்கை வெனிசுலா மற்றும் அமெரிக்கா…
இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற நடனக் கலைஞராகவும், பல்துறை நடிகையாகவும் திகழ்ந்த மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினிக்கு இன்று 94-வது பிறந்தநாள். புகழ் பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களான பத்மினி, அவரது அக்கா லலிதா மற்றும் தங்கை ராகிணி ஆகிய மூவரும் இணைந்து ‘திருவாங்கூர் சகோதரிகள்’ என்று இந்திய திரையுலகால் புகழப்பட்டனர். தமிழ் சினிமாவின் மூவேந்தர்களாகக் கருதப்பட்ட எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய மூவருடனும் ஒரே காலகட்டத்தில் மாறி மாறி ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற ஒரே நடிகை பத்மினி மட்டுமே. வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் நடனப் போட்டியில் வைஜெயந்திமாலாவுடன் இணைந்து பத்மினி ஆடிய நாட்டியக் காட்சி இன்று வரை மறக்கமுடியாதது ஆகும். திருவனந்தபுரத்தை சொந்தஊராகக் கொண்ட பத்மினி தனது நான்கு வயதில் நாட்டியம் பயிலத் தொடங்கியவர், 10 வயதில் அறங்கேற்றம் செய்ததோடு, 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் நாட்டியப் பேரொளியாக வலம் வந்தார். 17 வயதில் இயக்குநர் உதயசங்கரால் கல்பனா…
2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி மெக்சிகோ சிட்டியில் பரபரப்பான தொடக்கத்தைக் கண்டுள்ளது. கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகமாகப் பதிவான இந்த விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. கடந்த 2010 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், ஜோகன்னஸ்பர்க் நகரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து, தற்போது மெக்சிகோவின் எஸ்டாடியோ அஸ்டெகா மைதானத்தில் நடந்த போட்டியில், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு ஜூலியன் குய்னோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமினெஸ் ஆகியோர் அடித்த கோல்களால் மெக்சிகோ 3 புள்ளிகளைப் பெற்றது. இருப்பினும், இந்த ஆட்டத்தின் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியது ஒழுங்குமுறை நடவடிக்கையாக வழங்கப்பட்ட 3 சிவப்பு அட்டைகள் தான். உலகக் கோப்பை வரலாற்றிலேயே தொடக்க ஆட்டம் ஒன்றில் 3 சிவப்பு அட்டைகள் காட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். மெக்சிகோவின் அதிரடித் தொடக்கம் ஆட்டம் தொடங்கிய…
10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இன்று இங்கிலாந்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் களம் காணுகின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மகளிர் டி 20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 9 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 6 முறை ஆஸ்திரேலிய அணி சாம்பியன் கோப்பையை வெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஜூன் 12 இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் 2 பிரிவுகளாக விளையாட உள்ளன. இங்கிலாந்தின் பெர்மிங்காமில் உள்ள எக்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய அணி…
உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 2-0 புள்ளிகளுடன் வென்று தனது வெற்றிக் கணக்கை மெக்சிகோ அணி தொடங்கியுள்ளது. கால்பந்தாட்ட ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டு பிரியர்களால் மிகவும் எதிர்பாக்கப்பட்ட பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கியது. கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய போட்டிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. மெக்சிகோ நகரில் பிரமாண்ட விழாவுடன் முதல் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 9வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஜுலியன் அண்ட்ரே குவானிஸ் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் மெக்சிகோ அணி வீரர் ரவுல் ஜெமிஸ் மற்றொரு கோல் அடித்தார். தென் ஆப்பிரிக்க வீரர்களின் கோலுக்கான முயற்சிகள் மெக்சிகோவிடம் பலிக்கவில்லை. இறுதிவரை ஆதிக்கம் செலுத்தி மெக்சிகோ அணி ஆட்டநேர முடிவில் 2-0…
புதுடெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், 11-வது ஆட்சிமன்றக் கூட்டத்தை கூட்டியமைக்காக பிரதமருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்பதாகவும், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளளதாகவும் தெரிவித்தார். வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில்,…
சூரி கதாநாயகனாக நடிக்கும் மண்டாடி திரைப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. திரைப்படங்களில் நடிக்கும் நோக்குடன் சென்னை வந்து பல்வேறு வேலைகளைச் செய்துவிட்டு, ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடைத்து வந்த நடிகர் சூரி, அதன்பின்னர் தொலைக்காட்சிகளிலும் காமெடிகளில் தலைகாட்டி வந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பரோட்டா சூரியாக அவதாரமெடுத்தவருக்கு அதன்பின்னர் தொடர்ந்து ஏறுமுகம்தான். போராளி, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ரஜினிமுருகன், இது நம்ம ஆளு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் எனபல்வேறு வேடங்களில் நகைச்சுவையிலும் துணைநாயகன் கதாபாத்திரலும் கலக்கியவரை இயக்குநர் வெற்றிமாறன் தனது விடுதலை-1 மற்றும் 2படத்தின் வழியே கதையின் நாயகனாக முன்னிலைப்படுத்தினார். இதன்பின்னர் கருடன், கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழு மலை, மாமன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த சூரி, தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்னும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து…
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- ‘வாக்கு திருட்டு’ (Vote Chori) மற்றும் ‘அரசு திருட்டு’ (Sarkar Chori) ஆகியவற்றைத் தொடர்ந்து, தற்போது ‘தொகுதி திருட்டு’ (Seat Chori) மூலமாக தேர்தல் போட்டியே தொடங்குவதற்கு முன்பே பாஜக-தேர்தல் ஆணையத்தின் (EC) இந்த `ஜுகல்பந்தி’ (கூட்டுச் செயல்பாடு) அதை முடித்துவிட்டது. சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் என்ன நடந்தது என்று பாருங்கள். காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார். அவர் மீது எந்த நிலுவை வழக்குகளும் இல்லை. ஆனால், பாஜக எழுப்பிய ஒரு சாதாரண ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்தது. ஆனால், பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் பரிமல் நத்வானி, வேட்புமனுவில் தனது பெயரையே தவறாகக் குறிப்பிட்டிருந்தார், மேலும் பல கட்டாயத் தகவல்களை அவர் தெரிவிக்கவே இல்லை. அவருக்கு அந்தத் தவறுகளைச் சரிசெய்ய தேர்தல் ஆணையம் கூடுதல் கால அவகாசம் வழங்கியது.…