ஐபிஎல் 18-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய 10 அணிகள் இந்த முறை களமிறங்கின. நாட்டின் 13 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதுவரை நடந்து முடிந்த தொடர்களில் மும்பை, சென்னை ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தின. இந்தமுறை எப்படியும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பெங்களுர், குஜராத், டெல்லி ஆகிய அணிகள் களத்தில் தங்கள் பலத்தை நிரூபித்து வந்தன. அதற்கு ஏற்றார்போல் புள்ளிப்பட்டியலில் இந்த மூன்று அணிகள் தான் முதலிடத்தில் இருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஏப்ரல் 22-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம்…
Read More