Author: Editor TN Talks

ஓமன் கடற்கரையோரத்தில் இந்திய எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அமெரிக்காவின் தூதரகப் பொறுப்பாளர் அதிகாரியை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தால் இலக்காகக் குறிவைக்கப்பட்ட அந்த கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 இந்தியர்கள் இன்னும் மாயமாக உள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Read More

அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளருமான பெஞ்சமின், திமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் கடந்த 1988ஆம் ஆண்டு இணைந்த பெஞ்சமின், 15 ஆண்டுகள் வில்லிவாக்கம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி உள்ளார். சென்னை 145-வது வார்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டு, மாநகராட்சி துணை மேயராகவும் இருந்துள்ளார். ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டங்களை முன்னின்று நடத்துவதில் தீவிர அக்கறையும் ஆர்வமும் காட்டி வந்த பெஞ்சமினுக்கு  கடந்த 2016-இல் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார். அதில் வெற்றி பெற்ற பெஞ்சமின் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் கடந்த 2021 மற்றும் 2026 தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டும் ஜெஞ்சமினால் வெற்றி பெற முடியவில்லை. தற்போதைய தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் இரண்டு அணிகளாகப் பிரிந்து மீண்டும் இணைந்துள்ளனர். இந்தச் சூழலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலரது…

Read More

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கோபி காலனி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கிராப்பட்டியில் உள்ள தனியார் மேநிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். ஜூன் 10ஆம் தேதி காலை மாணவி பள்ளிக்கு வழக்கம்போல புறப்பட்டுச் சென்ற நிலையில் அவர், பள்ளிக்கு வரவில்லை என பள்ளியில் இருந்து பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், கண்ட்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சில மணி நேரம் கழித்து எடமாலைப்பட்டி புதூர் அடுத்துள்ள செட்டிப்பட்டி பாலம் அருகில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த இடத்திற்குச் சென்ற பெற்றோர் அவளை அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் நடைபெற்ற ஒரு திருவிழாவின்போது, புதுக்கோட்டை மாவட்டம்,…

Read More

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புது டெல்லியில் நாளை ஜூன் 11ஆம் தேதி நிதி ஆயோக்கின் 11வது கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும்  ஆளுநர்கள், மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தனி விமானத்தில் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக காலையில் அவர், மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர் டெல்லி புறப்பட்டு வந்த முதலமைச்சரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அதிகாரிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு அளிக்கப்பட்ட காவல்துறையினர் மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். அங்கு சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் முதலமைச்சர் ஜோசப் விஜய் முதன்முறையாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டவர்,…

Read More

புகை ஓவியக் கலை மூலம் பிரபலங்களுக்கும் சமூக நிகழ்வுகளுக்கும் அஞ்சலி மற்றும் விழிப்புணர்வு படைப்புகளை உருவாக்கி வரும் கோவை கலைஞர் யூ.எம்.டி. ராஜா, மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு வித்தியாசமான முறையில் தீபாஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் கிராமிய மணத்தை உலகறியச் செய்த முன்னணி இயக்குநர் பாரதிராஜா மறைவுக்கு நாடு முழுவதும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர்  யூ.எம்.டி. ராஜா தனது தனித்துவமான கலை வடிவத்தின் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார். மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை செலுத்திய அவர், அதன் கரும்புகையை பயன்படுத்தி எந்தவித தூரிகை அல்லது பென்சிலும் இன்றி, சிறிய குச்சியின் உதவியுடன் இயக்குநர் பாரதிராஜாவின் உருவப்படத்தை வரைந்தார். மேலும், “இமயம் இருண்டது… இமயம் சரிந்தது…” என்ற உருக்கமான வாசகத்தையும் தனது படைப்பில் இடம்பெறச் செய்தார். சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளை மையமாகக் கொண்டு  ஓவியங்களை உருவாக்கி வரும் யூ.எம்.டி. ராஜா, கடந்த காலங்களிலும்…

Read More

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்! பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக…

Read More

குற்ற வழக்குகளில் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ நிலுவையில் இருக்கும்போது, சம்பந்தப்பட்ட கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தனது விசாரணையை துவங்கியுள்ளது. குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் சார்பில், பல்வேறு காரணங்களுக்காக பரோல் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. தண்டனையை எதிர்த்து இவர்கள் மேல்முறையீட்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு, மேல்முறையீடு வழக்குகள் நிலுவையில் உள்ளபோது பரோல் வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள் வெவ்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, இதுதொடர்பாக, முடிவெடுக்கும் வகையில் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து 2025ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், தலைமை நீதிபதி…

Read More

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை மெக்ஸிகோவில் தொடங்குகிறது. 3 நாடுகளில் நடைபெறும் இந்தப் போட்டியில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. கால்பந்து ரசிகர்களின் திருவிழா எனக் கொண்டாடப்படுகிறது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி. அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா ஆகிய 3 நாடுகளும் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி ஜூன் 11 ஆம்தேதி (நாளை) தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்த ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் போட்டி மெக்ஸிகோவில் உள்ள மெக்ஸிகோ சிட்டி ஸ்டேடியத்திலும், இறுதிப் போட்டி நியூயார்க்கில் உள்ள நியூ யார்க்/நியூ ஜெர்ஸி ஸ்டேடியத்திலும் நடைபெற உள்ளது. அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா நாடுகளைச் சேர்ந்த 16 நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. அமெரிக்காவி 11, மெக்ஸிகோவில் 3, கனடாவில் 2 நகரங்களில்  போட்டிகள் நடக்க உள்ளன. கனடாவில் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை.…

Read More

தமுஎகசவுடன் கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல உறவோடு இருந்தவர் பாரதிராஜா என அவ்வமைப்பின் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் செலுத்தியுள்ளனர். இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- 50ஆண்டுகளுக்கு முன்பு தனது திரை மொழியால் தமிழ்த் திரையுலகிற்கு புதிய வழித்தடம் அமைத்துக் கொடுத்தவர், படப்பிடிப்பு அரங்கிற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ்த் திரைப்படங்களை, வெட்ட வெளிகளுக்குள்ளும், பொட்டல் காட்டிற்குள்ளும் பரவவிட்டவர், சினிமாவை கிராமங்களுக்கு கொண்டு செல்லவே படாதபாடுபட்ட காலத்தில், அசல் கிராமத்து மனிதர்களையே சினிமாவிற்குள் அழைத்து வந்தவர் என்று  தமிழ்ச் சினிமாவின் முகமாக இருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது தமிழ்த்திரையுலகிற்குப் பெரும் இழப்பாகும். அவருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது. இளம் வயது முதலே இடதுசாரி இயக்கங்களோடும், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளோடும் தன்னை அடையாளப்படுத்தி வந்த பாரதிராஜா அவர்கள், 38 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 25க்கும் மேற்பட்ட…

Read More

தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரை இழந்துவிட்டதாக நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார். விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;- ​மாபெரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கு வீரவணக்கம்! ​’இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சார் இன்று காலை நம்மையெல்லாம் விட்டுப்பிரிந்து காலமானார் என்ற அதிர்ச்சியான மற்றும் சோகமான செய்தியைக் கேட்டு மனமுடைந்தேன். ​தமிழ் சினிமாவின் போக்கையே என்றென்றும் மாற்றியமைத்த ஒரு தொலைநோக்கு சிந்தனையாளர் அவர். நம் கிராமங்களின் ஆன்மா, நம் மக்கள் மற்றும் அவர்களின் உணர்ச்சிகளை வேறு யாராலும் முடியாத வகையில் வெள்ளித்திரைக்குக் கொண்டு வந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, பல தசாப்தங்களைக் கடந்தும் பார்வையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் படியான கதாபாத்திரங்களையும், மறக்க முடியாத பாத்திரப்படைப்புகளையும் உருவாக்கியவர். ​அவரது திரைப்படங்கள் தலைமுறை தலைமுறையாக இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளன. அவர் உருவாக்கிய ஒவ்வொரு காட்சியின் மூலமும் அவரது மரபு தொடர்ந்து வாழ்ந்துகொண்டே இருக்கும். படைப்பாளியாக முத்திரை பதிக்க…

Read More