Close Menu
    What's Hot

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»தமிழ் சினிமாவை வெட்டவெளிகளில் சிறகடிக்க வைத்தவர் இயக்குநர் இமயம் – தமுஎகச அஞ்சலி
    சினிமா

    தமிழ் சினிமாவை வெட்டவெளிகளில் சிறகடிக்க வைத்தவர் இயக்குநர் இமயம் – தமுஎகச அஞ்சலி

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 tmesw
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமுஎகசவுடன் கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல உறவோடு இருந்தவர் பாரதிராஜா என அவ்வமைப்பின் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் செலுத்தியுள்ளனர்.

    இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    50ஆண்டுகளுக்கு முன்பு தனது திரை மொழியால் தமிழ்த் திரையுலகிற்கு புதிய வழித்தடம் அமைத்துக் கொடுத்தவர், படப்பிடிப்பு அரங்கிற்குள் சுருங்கிக்கிடந்த தமிழ்த் திரைப்படங்களை, வெட்ட வெளிகளுக்குள்ளும், பொட்டல் காட்டிற்குள்ளும் பரவவிட்டவர், சினிமாவை கிராமங்களுக்கு கொண்டு செல்லவே படாதபாடுபட்ட காலத்தில், அசல் கிராமத்து மனிதர்களையே சினிமாவிற்குள் அழைத்து வந்தவர் என்று  தமிழ்ச் சினிமாவின் முகமாக இருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது தமிழ்த்திரையுலகிற்குப் பெரும் இழப்பாகும். அவருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.

    இளம் வயது முதலே இடதுசாரி இயக்கங்களோடும், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளோடும் தன்னை அடையாளப்படுத்தி வந்த பாரதிராஜா அவர்கள், 38 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நுட்பமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். தனது திரைப்படங்களில் அசல் கிராத்து மனிதர்களை, ஒப்பனை ஏதும் இல்லாமல் உணர்வுப்பூர்வமாக காட்சிப் படுத்துவதோடு, சமூகத்தில் நிலவும் மூடப்பழக்கவழக்கங்களை, கூர் தீட்டப்பட்டிருந்த சாதிய வேறுபாடுகளை, அதன் வன்மம் மிகுந்த செயல்பாடுகளை தனது படைப்பின் ஊடாக தொடர்ந்து அம்பலப்படுத்தியவர். தனது படைப்புகளுக்காக 6 தேசிய விருது, 4 மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அதோடு தனது தொடர் திரைப் பங்களிப்பிற்காக 2004ஆம் ஆண்டு இந்திய அரசின் உயர் விருதான ‘பத்மஸ்ரீ’ வருதும் பெற்றவர்.

    16வயதினிலே, கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, முதல் மரியாதை என்று கிராமத்துப் படங்கள் மட்டுமல்லாமல், என் உயிர் தோழன், நிழல்கள் உள்ளிட்ட மாநகரங்களின் துயர்மிகு வாழ்வையும் படம்பிடித்துக் காட்டியவர்.

    தனது கடைசி காலங்களில், நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் நல்ல திரைக்கலைஞராகவும் வலம் வந்தார்.

    தமுஎகசவை பொறுத்த அளவில் கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல உறவோடு இருந்து வந்துள்ளார்.

    1996  ஜனவரி 5,6,7 மூன்று நாள்கள் தமுஎச மாநிலக்குழு திண்டுக்கல் நகரில் நடத்திய இயக்குநர் பாரதிராஜாவின் படைப்புகளை குறித்த மூன்று நாள் ஆய்வரங்கு நிகழ்வில், தான் அறிமுகப்படுத்திய பிரபல திரைக் கலைஞர்களோடு கலந்து கொண்ட பாரதிராஜா, அவர் படைப்புகள் குறித்த நமது தோழர்களின் பாரட்டுக்களையும்,கூர்மையான விமர்சனங்களையும் ஒரே மாதிரியான உவகையோடு ஏற்றுக்கொண்டார். வாய்ப்புள்ள இடங்களில் தொடந்து நம் மேடைகளில்  பங்கேற்றும் வந்தார்.

    2005ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் நடைபெற்ற தமுஎச 10ஆவது மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு,

    நம் அமைப்பு மேடைகளில் கலந்துகொள்வதை மதிப்பு வாய்ந்த ஒன்றாகத் தான் கருதுவதாகவும் கூறினார்.

    *இயக்குநர் பாரதிராஜாவின் இழப்பு தமிழ்த் திரை உலகிற்கு மட்டுமல்ல, தமிழ்க் கலை இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்* அவரை இழந்து வாடும் ரசிகர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

    Bharathiraja Tribute Tamil Cinema தமுஎகச அஞ்சலி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகத் தலைவர்களின் வாழ்த்து மழையில் பிரதமர் மோடி!.
    Next Article பிரதமர் மோடியின் சாதனை..!! தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபட்ட தேசம்..!! அமித்ஷா புகழாரம்..!!
    Editor TN Talks

    Related Posts

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    June 13, 2026

    ரஜினியின் பெயர், படங்களை அரசியலில் பயன்படுத்தக்கூடாது..!! ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை..!!

    June 13, 2026

    இரவில் மின்வெட்டுக்கு காரணமே இதுதான்..!! ராதாகிருஷ்ணன் பரபரப்பு தகவல்..!!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    மண்ணுக்குள் உறங்கும் இயக்குநர் பாரதிராஜா..!! குடும்பத்திற்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி..!!

    அசாம்: விமான விபத்தில் உயிரிழந்த வீரர்கள் யார் யார்..?? வெளியான விவரங்கள்..!!

    பாக்.-ல் பொருளாதார நெருக்கடி..!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்ற அவலம்..!!

    இந்திய ராணுவத்தின் புதிய கமாண்டராக தீரஜ் சேத் நியமனம்..!! மத்திய அரசு அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.