Close Menu
    What's Hot

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    “திமுகவை யாராலும் முடக்க முடியாது; முதல்வர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்”!. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?
    Featured

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    editor5By editor5August 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 44
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான சுமார் 1.4 ஏக்கர் நிலம், ரூ.100 கோடி மதிப்புடையதாக இருந்தபோதிலும், கடந்த ஜூலை 6ஆம் தேதி வெறும் ரூ.2 கோடிக்கு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நில மோசடி வழக்கில் சிக்கிய சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவரது முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ததை அடுத்து தலைமறைவானார்.

    நேற்று கொடைக்கானலில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் திடீரென உடல்நலக்குறைவு அடைந்தார். மூச்சுத் திணறல், அதிகரித்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பாக்கியராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட பிறகு, ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அவரது உடல்நிலை மேம்படும் வரை மருத்துவமனையிலேயே நீதிமன்றக் காவலில் இருப்பார்.

    இதே வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் (65), நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். சிபிசிஐடி விசாரணைக்குப் பிறகு சிறைக்குத் திரும்பிய அவர், அதிகாலை சுமார் 12.30 மணியளவில் மரணமடைந்தார். உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மரணம் வழக்கில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, இடைத்தரகராகச் செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், தலைமறைவில் இருந்த நிலையில், தனது வீட்டில் சிபிசிஐடி சோதனை நடந்து வரும் வேளையில், நேற்று திண்டுக்கல் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேரடியாகச் சரணடைந்தார். அவரது மனைவி செண்பகமதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. எஸ்பி ஷாஜிதா ஜிதா, டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார். ஜூலை 15ஆம் தேதி தமிழக அரசு உத்தரவின்படி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில், மட வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தீவிரமாகத் தொடர்கிறது.

    land scam palani murugan temple
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!
    editor5

    Related Posts

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    August 8, 2026

    “திமுகவை யாராலும் முடக்க முடியாது; முதல்வர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்”!. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ!

    August 8, 2026

    தவெக அரசின் மடைமாற்று அரசியல் நாடகத்துக்கு துணைபோக மாட்டோம்!. அதிமுக!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பழனி நில மோசடி வழக்கில் பரபரப்பு: ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் மருத்துவமனையில்… ஜெயபிரகாஷ் எங்கே?

    சாய் சுதர்சனுக்கு காயம்.. இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு புதிய சிக்கல்!

    “திமுகவை யாராலும் முடக்க முடியாது; முதல்வர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்”!. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ!

    தவெக அரசின் மடைமாற்று அரசியல் நாடகத்துக்கு துணைபோக மாட்டோம்!. அதிமுக!

    “தொகுதி மறுசீரமைப்பு என்றால் என்னவென்றே தெரியாதவங்க மீட்டிங் போடுறாங்க!” தவெக கூட்டத்தை கிண்டலடித்த ஆ.ராசா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.