Author: Editor TN Talks

இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்காக, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது;- ‘என் இனிய தமிழ் மக்களே’… என்று தன் கரகரத்த குரலால் ரசிகர் பெருமக்களை கட்டிப்போட்ட அந்த தென்பாண்டி சிங்கமாம், தேனீ பக்கத்துல இருந்து வந்த தங்கமாம், தமிழ் திரை உலகத்தின் தலையாய அங்கமாம், இயக்குனர் இமயமாம் ஐயா பாரதிராஜா அவர்களுடைய மறைவு மனதை வாட்டுகின்றது. 16 வயதினிலே படத்திலே மயிலை படைத்தவர். கிழக்கே போகும் ரயிலில் ரயிலை குயிலாய் கூவி அழைத்தவர். புதிய வார்ப்புகளை வார்த்தவர். சிகப்பு ரோஜாக்களை விதைத்தவர். நிறம் மாறாத பூக்களாய் நிலைத்து நின்றவர். மண்வாசனையை பரப்பியவர்.  கிழக்கு சீமையிலே என்று கிளர்ந்தெழுந்து நின்றவர். முதல் மரியாதையை கண்டவர். தமிழ் திரை உலகத்தின் தலையாய மரியாதையை வென்றவர். அவருடைய மறைவு செய்தி மனதை ஈட்டி போல் தாக்குகின்றது. நெஞ்சம் தாங்கவில்லை. எப்படி தாங்குவது என்றே தெரியவில்லை. அவரை இழந்து…

Read More

இன்று ஜூன் 10ஆம் தேதி. கடந்த மே 10ஆம் தேதி, ச.ஜோசப் விஜய் என்னும் நான் என தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தலைவருமான விஜய் பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் ஆகிறது. திமுக, அதிமுக என்னும் இருபெரும் அரசியல் கட்சியையும், ஓரம் கட்டிய தமிழக மக்கள் விரும்பிய மாற்றத்தை தவெக கொண்டு வந்துள்ளதா என்றால் கேள்விக்குறிதான்! தவெக நிகழ்த்திய அரசியல் மாற்றம் என்பது தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாதது. கூட்டணி ஆட்சி என்னும் பெயரில் எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்றது, மற்றொரு எதிர்க்கட்சியான அதிமுகவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் நான்குபேரை ராஜினாமா செய்ய வைத்து தன் கட்சிக்கு இழுத்தது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் , மாவட்டச் செயலாளர்கள் என அதிமுக கூடாரத்தையே தன்பக்கம் இழுத்து காலி செய்து கொண்டிருக்கிறது. அரசியல் இப்படி என்றால் ஆட்சி நிர்வாகமோ என்னதான் செய்கிறார்…

Read More

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் தனது வாழ்நாளில் பெருமைமிகுந்த பத்மஸ்ரீ உள்பட எண்ணற்ற விருதுகளைக் குவித்திருக்கிறார். விருதுகளும் கௌரவிப்பும் 2004 – பத்மஸ்ரீ இந்திய அரசிடமிருந்து தேசிய திரைப்பட விருதுகள் 1982 – சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது- சீதாகொகா சிலுகா (இயக்குநர்) 1986 – தேசிய திரைப்பட சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது- முதல் மரியாதை (தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்) 1988 – பிற சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது- வேதம் புதிது (இயக்குநர்) 1995 – கருத்தம்மாவுக்கு (இயக்குநர்) குடும்ப நலன் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது 1996 – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது- அந்திமந்தாமரை (இயக்குநர்) 2001 – தேசிய சிறந்த திரைக்கதைக்கான திரைப்பட விருது- கடல் பூக்கள் (இயக்குநர் & எழுத்து பிலிம்பேர் விருதுகள் தெற்கு 1978 – சிறந்த தமிழ் இயக்குநர்- சிகப்பு ரோஜாக்கள் 1987 – சிறந்த தமிழ்த் திரைப்படம்- வேதம் புதிது 1987…

Read More

தமிழ் சினிமாவின் இயக்குநர் இமயம் பாரதி ராஜா தனது 84-வது வயதில் உடலநலக் குறைப்பாட்டால் காலமானார். தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் நடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர். கதாநாயகன் என்றால் அழகானவன் என்பதை மாற்றி நாயகனுக்கு கோவணம் கட்டி வெத்தலை சொத்தப்பும் சப்பாணியாக மாற்றிக் காட்டியவர். தமிழ் சினிமாவில் அவர் வருகைக்கு முன்…. அவர் வருகைக்கு பின் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாறு மிகப் பெரியது. திரையுலகில் அவரது பயணம் நீண்ட பயணம்…. அந்த மகாகலைஞனின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள் இதோ… பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தமாள். 1941 ஆம்…

Read More

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன். இவாறு கூறியுள்ளார்.

Read More

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி மற்றும் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி,  திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் மக்கள் இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து உள்ளனர். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக யாராக இருந்தாலும் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத்தான் தான் ஆட்சியில் அமர வேண்டும் என தீர்மானித்து விட்டார்கள் எனத் தெரிவித்த அவர், அரசியல் அராஜகத்தை திமுகவும் அதிமுகவும் தொடர்ச்சியாக செய்து வந்தார்கள் அதற்கு தற்பொழுது முடிவு கட்டப்பட்டுள்ளது என கூறினார். தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் எட்டு தலித் சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்து ஒரு அற்புதத்தை முதலமைச்சர் ஏற்படுத்தியுள்ளார் எனக் கூறிய பொன்னுசாமி, இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முறையாக பரப்பரை செய்யவில்லை. ஆனாலும்…

Read More

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசியதாவது:- மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சிதான் சிங்கப்பெண் சிறப்பு படையைத் தொடங்க்கி வைக்கும் நிகழ்வு. நம்ம பாட்டி, அக்கா, தங்கை, பெண் குழந்தைகள் இவங்க எல்லாத்துக்குமான பாதுகாப்பை உறுதி செய்வோம்னு சொன்னோம். அது எலெக்‌ஷனுக்கான வாக்குறுதி அல்ல. மனசுல இருந்து உணர்வுப்பூர்மா சொன்னோம். சொன்னதை எல்லாம் செய்யணும். படிப்படியா கொஞ்சம் கொஞ்சமாக செயல்ல கொண்டு வருவோம். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை மேற்கொள்வதற்கான முதல் ஸ்டெப் இதுதான். பெண்களுக்கு நடக்கும் கொடூரங்களப் பார்த்து மனசு பதறுது, கண்ணு கலங்குது. இதுக்கு காரணம் போதைப் பொருள்தான். அதனை வேரோடு பிடுங்கி எறியணும். இந்த போதைப் பொருள் புதுசா வந்துடல. பலவருடப் பிரச்சினை. கண்டுக்கிடாம விட்டதால வேர் ஊன்றிப் போயிருகு. யார் இத கண்டுக்கிடாம விட்டதுன்னு பேசி எந்தப் புரோஜனமும் இல்லை. போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு பிடுங்கணும். போதைப் பொருள், பெண்களுக்கு எதிரான கொடுமை,…

Read More

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வாக்குறுதி அளித்தபடி சிங்கப் பெண் அதிரடிப்படையினை தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கதில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை, தமிழக காவல்துறை தலைவர சந்தீப் ராய் ரத்தோர்,  சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து முதலமைச்சரும், டிஜிபியும் திறந்த வாகனத்தில் சென்றனர். அப்போது சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையினர் அளித்த மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. ஆயுதப்படை பெண் போலீசார் நீராருங்கடலுடுத்த பாடலை பாடினர். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை லட்சணையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வெளியிட ஐ.ஜி. பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை குறித்த டீசர் வெளியிடப்பட்டது. இதையடுத்து, சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையின் வாகனத்தை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அர்ப்பணித்து, அதனை இயக்கிப் பார்வையிட்டார். தொடர்ந்து  சிங்கப் பெண்…

Read More

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியில், லஞ்சம் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்த பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் முதலமைச்சரை சந்தித்து இந்த கோரிக்கையை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ்  கூறுகையில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் வேண்டும் என்பது தொடர்பாக தான் விளக்கியதை முதலமைச்சர் கவனமாகக் கேட்டுக் கொண்டதாகவும், முதலமைச்சரின் பேச்சு நம்பிக்கை அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளும்கட்சியாக இருந்த போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாத திமுக,  தற்போது ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது தொடர்பான கேள்விக்கு, ,ஸ்டாலினின் மனமாற்றத்தை வரவேற்பதாக அன்புமணி கூறினார். தமிழக பட்ஜெட்டில்…

Read More

கரூரில் லாரி மீது கார் மோதி விபத்த்தில், கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி ஆகியோர் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்துள்ளது. இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டுநர், இடதுபுறமாக காரைத் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கியது. இதில் காரில் பயணித்த அரவிந்த், அவரது கர்ப்பிணி மனைவி ஜனனி மற்றும் காரின்…

Read More