Author: Editor TN Talks

பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப் பெண்கள்” சிறப்பு அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மே 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய் அறிவித்த திட்டங்களில் ஒன்று  ‘’சிங்கப் பெண்’’ அதிரடிப் படை. குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காக ‘’சிங்கப் பெண்’’ சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும் என்ற ஆணையில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.  இதைத்தொடர்ந்து இந்த அதிரடிப்படையின் முதல் பெண் ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். ஒரு காவல் கண்காணிக்காணிப்பாளர், 2 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவலர் உடையில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக ‘’சிங்கப் பெண்’’ அதிரடிப் படைக்கு என சிறப்பு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அதிரடிப் படையை கடந்த மே மாதம் 29ம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைப்பதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக இந்த திட்டம்…

Read More

சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்றும் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் தேசிய கூட்டணியான இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 8) தலைநகர் டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற முடிந்தது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மதிமுக, விசிக, ஐ.யூ.எம்.எல், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இந்தநிலையில் கூட்டத்தின் முடிவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் 23 அரசியல் காட்சிகள் பங்கேற்றதாகவும், காங்கிரஸ் தலைமையில் எந்தவிதமான சிறு கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் வைகோ தெரிவித்தார். 2 மாதங்களுக்கு ஒரு முறை இந்தக் கூட்டத்தை கூட்டி உள்ளதாக ஆலோசிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின்…

Read More

ஜெர்மனியில் ஸ்ரீ கணேசன் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெர்லின் நகரில் உள்ள புகழ்பெற்ற ஹேசன்ஹெய்ட் பூங்கா அருகில், புதிய ஸ்ரீ கணேசர் கோயில் கட்டப்பட்டது. கோயில் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில், கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலின் மிக முக்கிய சிறப்பம்சமாக அதன் 17 மீட்டர் உயரமான கோபுரம் திகழ்கிறது. நூற்றுக்கணக்கான சிற்பங்கள் மற்றும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கோயில் கோபுரம், தொலைவில் இருந்தும் பார்ப்பவர்களைக் கவரும் வகையில் பாரம்பரிய கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. ஐரோப்பிய மண்ணில் இந்து கலாச்சாரத்தின் அடையாளமாகவும், ஆன்மிக மையமாகவும் ஸ்ரீ கணேசன் ஆலயம் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தவெக ஆட்சி 3 மாதங்கள் தான் இருக்கும் என்று பல பொறுப்புகளில் இருந்த மு.க.ஸ்டாலின் பேசியிருக்கக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சியின் அண்ணாநகர், சுல்தான் பேட்டை, ஜீவா நகர், விருப்பாச்சி நகர் உள்ளிட்ட இடங்களில் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி 2 தலைமுறைகளாக வசித்து வரும்நிலையில், தற்போது வீடுகளை அப்புறப்படுத்தி நோட்டீஸ் வழங்கிய இந்து அறநிலையத்துறை, வருவாய்த் துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய அளவில் இந்திய கூட்டணியில் உள்ளதாகவும், தேச நலனுக்காக இந்திய கூட்டணி வலிமை பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில்…

Read More

கட்டுமானப் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், வீடு கட்டுபவர்கள், கட்டுமான தொழிலை நம்பி உள்ளவர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த கல்குவாரிகளில் தற்போது சில குவாரிகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளநிலையில், குறிப்பிட்ட குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. கனிமவளத்துறை மற்றும் தமிழக அரசின் பல்வேறு கட்டுப்பாடுகள், மாநிலத்தின் பல பகுதிகளில் குவாரிகள் மூடப்பட்டுள்ள நிலை உள்ளிட்ட காரணங்களால் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன்படி டன் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்ட ¾ இன்ச் ஜல்லி ரூ.150 உயர்ந்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் எம்.சாண்ட் டன்னுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.800-ஐ எட்டியுள்ளது. பூச்சு வேலைகளுக்குப் பயன்படும் பி.சாண்ட் ரூ.900 வரை உயர்ந்துள்ளதுடன், மூலப்பொருட்களின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.600 வரையும், ஒரு லோடுக்கு ரூ.2,000 வரையும் அதிகரித்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் திடீர் விலை உயர்வால் வீடு கட்டுவோர்…

Read More

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தவும், சில திமுக மாவட்டச் செயலாளர்களை நீக்கவும் திமுக தலைமை திட்டமிட்டு இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழு மேற்கொண்ட நேரடி விசாரணையின்போது, திமுக மாவட்ட செயலாளர்கள் மீது பலரும் கடும் புகார் அளித்துள்ளதாகவும், அதன் எதிரொலியாகவே அவர்கள் மீது தலைமை உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது திமுக மாவட்ட செயலாளர்கள்ன் கீழ் 2 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதனை 2 முதல் 4 தொகுதிகளாக குறைக்க தலைமை ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில மாவட்ட செயலாளர் செயல்பாடுகள் மீது திருப்தி இல்லாத நிலை…

Read More

தன்னை கொலை செய்வதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்துள்ளதாக யூடியூபர் சவுகு சங்கர் பகீர் புகார் தெரிவித்துள்ளார்.   லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் அருண் ஐபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்ககோரி பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார் . பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக உள்ள அருண், என்னைக் கொலை செய்வதற்காக மும்பையில் இருந்து கூலிப்படையை நியமித்துள்ளார். எனக்கு டெல்லியில் இருந்து உளவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக நான் சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளேன் எனத் தெரிவித்தார். கடந்த செப்டம்பர் 2025-ஆம் ஆண்டும், தன்னைக் கொலை செய்வதற்காக தென்தமிழகத்தில் இருந்து ஒரு கூலிப்படையை அருண்,  செல்வநாதரத்தினம் ஐபிஎஸ் மற்றும் வருண்குமார் ஆகியோர் மூலம் பணம் கொடுத்து நியமித்திருந்ததாகவும் அப்போதும் டெல்லியில் இருந்து…

Read More

திமுக தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்து வரும் குழுவினர், வரும் 10 ஆம்  தேதி கள ஆய்வு செய்த அறிக்கை திமுக தலைமையிடம் நேரில் வழங்க இருக்கின்றனர். சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து கண்டறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக் குழுவை அமைத்தார். தன்மீது குறைபாடுகள் இருந்தாலும் அதனையும் குழுவினரிடம் தெரியப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 36 பேர் கொண்ட இந்த கள ஆய்வுக் குழுவினர் தொகுதிக்கு இருவராகப் பிரிந்து சென்று திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் என பலரையும் அணுகி கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்துள்ளனர். தோல்விக்கான காரணங்கள், வரும் தேர்தலில் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். தொண்டர்களிடம் கள ஆய்வு செய்ததில் பல்வேறு தகவல்களை அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். குழுவினரிடம் தனித்தனியாக கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர் தொகுதி நிர்வாகிகள் இனி வரும்…

Read More

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பெறுவதற்கான பொது கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது* தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 ( ஷிப்ட் 1 – 101022 மற்றும் 2 – 25937) இடங்கள் உள்ளன. இப்படிப்புகளில் மாணவர்கள் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2026-2027ஆம் கல்வியாண்டில் இப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, 29-ம் தேதி வரை பெறப்பட்டது. தொடர்ந்து, இந்த கால அவகாசத்தில்  விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக மீண்டும் ஜூன் 1 முதல் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தாங்கள் விரும்பப்படும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து விண்ணப்பித்தனர். அதன்படி, இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த…

Read More

இந்தியாவில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் அதிமுகவைச் சேர்ந்த சி.வி.சண்முகம் ராஜினா செய்த உறுப்பினர் பதவி உள்பட 3 உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 18ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறும் நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 1ஆம் தேதியே தொடங்கியது. தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருர் பதவியை தவெக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளராக பிரவின் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டு அவர் முதலமைச்சர் முன்னிலையில் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார். இதுவரை பிரவீன் சக்கரவர்த்தி உள்பட 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுத்தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.  தேர்தலில் போட்டியிட விரும்பி வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

Read More