திமுக தேர்தல் தோல்வி குறித்து கள ஆய்வு செய்து வரும் குழுவினர், வரும் 10 ஆம் தேதி கள ஆய்வு செய்த அறிக்கை திமுக தலைமையிடம் நேரில் வழங்க இருக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து கண்டறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வுக் குழுவை அமைத்தார்.
தன்மீது குறைபாடுகள் இருந்தாலும் அதனையும் குழுவினரிடம் தெரியப்படுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
36 பேர் கொண்ட இந்த கள ஆய்வுக் குழுவினர் தொகுதிக்கு இருவராகப் பிரிந்து சென்று திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் என பலரையும் அணுகி கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்துள்ளனர்.
தோல்விக்கான காரணங்கள், வரும் தேர்தலில் கூட்டணி வைக்கலாமா என்பது குறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தொண்டர்களிடம் கள ஆய்வு செய்ததில் பல்வேறு தகவல்களை அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
குழுவினரிடம் தனித்தனியாக கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர் தொகுதி நிர்வாகிகள் இனி வரும் காலத்தில் தனித்து போட்டியிட வேண்டும். தேர்தல் நேரத்தில் உட் கட்சி பிரச்சனை சரி செய்யவில்லை. கூட்டணி கட்சியினரின் தேர்தல் பணிகள் பெரும் சுணக்கம் இருந்ததாகவும் தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இப்படி தொண்டர்கள் அளித்த கருத்துக்களை ஆவணப்படுத்தியுள்ள கள ஆய்வுக் குழுவினர் அவற்றை முறைப்படுத்தி நாளை மறுநாள் ஜூன் 10-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்குகின்றனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு கட்சி கட்டமைப்பில் இருந்து, வரக்கூடிய தேர்தல்களில் போட்டியிடுவது வரை பல்வேறு மாற்றங்களை மு.க.ஸ்டாலின் செய்வார் என நம்பப்படுகிறது.
