Author: Editor TN Talks
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, திருமண தகராறு தொடர்பாக ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்து, இணையத்தில் இருவர் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், ரவி மோகனை பிரிவதாக கெனிஷா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து, மே 16ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது குழந்தைகளை பார்க்க விடுவதில்லை; தன்னை புரிந்து கொண்டு வந்த பெண்ணையும் துரத்திவிட்டனர்; தனது குழந்தைகளுக்காக அமைதி காக்கிறேன், என கூறியிருந்தார். விவாகரத்து வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என கடந்த…
வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ரேணிகுண்டா படத்தின் அடுத்த அத்தியாயமான ரேணிகுண்டா 2 படத்தின் பர்ஸ்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் மற்றும் யதார்த்தமான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்களில் ஒன்றாக 2009ம் ஆண்டு வெளியான “ரேனிகுண்டா” அமைந்தது. இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான இப்படம், அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ரேணிகுண்டா படத்தின் அடுத்த அத்தியாயமாக “ரேனிகுண்டா – 2” திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். தற்போது வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிங்ஸ் ஸ்டுடியோ, பன்னீர்செல்வம் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் உருவாகும் ரேனிகுண்டா 2 படத்தை இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார். மனு ரவிச்சந்திரன்…
எந்த காலகட்டத்திலும் மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் எனவும், முதலமைச்சர் இதனை சட்டசரீதியாக சந்திப்பார் என எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதலமைச்சரின் தலைமையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒவ்வொரு துறையின் சார்பாகவும் அடுத்த ஐந்தாண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அதற்கான புள்ளிவிவரங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இப்பணிகளை விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். ஈஷா யோகா மூலம் தமிழ்நாட்டில் இதுவரையிலும் 13 கோடியே 40 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மேலும் 1கோடியே 20 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக இப்பணிகள்…
சென்னையில் இருந்து கோவைக்கு சென்ற ரயிலில் பயணம் செய்த சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட காவலர் ஷேக் அப்துல்லாவை அரக்கோணம் ரயில்வே போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ஷேக் அப்துல்லா, கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் பணியை முடித்துவிட்டு கோவைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 20 வயது சட்டக் கல்லூரி மாணவியிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது செல்போனில் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததுடன், ரயில்வே போலீசாருக்கும் தகவல் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடைய காவலரை அடையாளம் கண்டனர். மாணவி அளித்த வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில், ஷேக் அப்துல்லா மீது பாலியல் தொல்லை…
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் தென்படாததாலும் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில், இன்றைய நிலவரப்படி வெறும் 41.60 டி.எம்.சி, அதாவது 79 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. எனவே நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படா விட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு…
கடும் பனி மலையில் மாயமான எவரெஸ்ட் சிகர வழிகாட்டி 6 நாட்களுக்குப் பின்னர் மரணத்தை வென்று மீட்கப்பட்டிருப்பது நம்பிக்கையின் உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறது. நேபாளத்தைச் சேர்ந்தவர் தவா ஷெர்பா (Dawa Sherp). எவரெஸ்ட் சிகரத்துக்கு மலையேற்றம் செல்பவர்களுக்கான வழிகாட்டியாக இருந்து வருகிறார். புகழ்பெற்ற மலையேற்ற வீரர் எட்மண்ட் ஹிலாரியின் நினைவாக இவரை ஹிலாரி தவா எனவும் மலையேற்றத்துக்கு வருபவர்கள் அழைப்பதுண்டு. கடந்த மே மாதம், எவரெஸ்ட் சிகரத்துக்கு சென்ற குழுவினருக்கு வழிகாட்டியாகச் சென்ற தவா ஷெர்பா, பின்னர் கீழே வரும்போது மாயமாகி இருக்கிறார். 7500 அடி உயரத்துக்கு மேல் கடும்பனியில் மாயமானவரைக் கண்டுபிடிக்க முடியாமல் உடன் சென்றவர்கள் இறங்கியுள்ளனர். கடும் குளிர், உறைபனி, குறைவான ஆக்ஸிஜன் உள்ள அந்தப் பகுதியில் மாயமான தவா ஷெர்பா நிச்சயம் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டுள்ளது. அவரின் மனைவியும் கூட காத்மண்டுவில், கணவருக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டார். ஆனால், எல்லோரின் எண்ணங்களையும் உடைத்துப்போட்டு 5 நாட்களாக…
தகாத உறவில் இருந்த மனைவியை வெட்டி விட்டதாகவும் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்வதாகவும் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ வெளியிட்ட கணவரைக் கைது செய்துள்ளனர். தனது மனைவி திருச்சியை சேர்ந்த ஜோஸ் என்பவருடன் தகாத உறவில் இருப்பதை கையும் களவுமாகக் கண்டுபிடித்ததோடு அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞர், அதன் பின்னர் தனது மகனைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய இருப்பதாக கண்ணீருடன் வீடியோ பதிவிட்டார். அந்த வீடியோவில் சிறுவன் எனக்கு பயமா இருக்குப்பா என்று அழுவது காண்போரை எல்லாம் பதைபதைக்க வைத்தது. இதன் தொடர்ச்சியாக, அந்தப் பெண்ணின் நடத்தை குறித்தும் இளைஞரின் சோகம் குறித்தும் அந்த இளைஞரின் நண்பர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டிருந்தார். இந்த வீடியோக்கள் பரபரப்பான நிலையில், அந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது, தந்தையும் மகனும் என்ன ஆனார்கள் எனப் பலரும் தவித்த நிலையில், இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் டீம்…
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81-வது கூட்டத்தொடரின் தலைவராக வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடத 1986-87இல் வங்கதேசத்தின் ஹுமாயுன் ரஷீத் சவுத்ரி முதன்முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது கலீலுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ள நிலையில், ஐநாவின் தலைமைப் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. 81-வது அமர்வுக்கான தலைவர் பதவி ஆசிய-பசிபிக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, ஜூன் 2ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் கல்லூர் ரஹ்மானும், சைப்ரஸ் நாட்டின் சிறப்புத் தூதுவர் ஆண்ட்ரியாச் எச். கக்கூரிசும் போட்டியிட்ட நிலையில், கலிலூர் ரஹ்மானுக்கு 99 வாக்குகளும், ஆண்ட்ரியாசுக்கு 91 வாக்குகளும் பதிவாகி 8 வாக்குகள் வித்தியாசத்தில் கலிலூர் ரஹ்மான் வெற்றி பெற்றார். செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி, ஓராண்டு காலத்திற்கு ரஹ்மான் இப்பதவியில் நீடிப்பார் என…
புதிதாக இயக்கம் தொடங்குவதாக அறிவித்துள்ள அண்ணாமலை மாரீச மான் வேடம் போடுவதாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிந்துரைத்துள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறியுள்ள அண்ணாமலை, புதிதாக இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கருத்துகள் கூறப்படும் நிலையில், தமிழகத்தில் பாஜகவின் புதிய உத்திதான் இந்த பெயர் மாற்றம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான் எனக் குறிப்பிட்டுள்ள பெ.சண்முகம், பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி – அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை எனவும், ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே எனத் தெரிவித்துள்ளார். அண்ணாமலை போடுவது போடுவது “மாரீச மான்…
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கனடா குடியுரிமை பெற்றவரை மீண்டும் நாடு திரும்ப அனுமதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்ததாக 25 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இதேபோல கைது செய்யப்பட்டு காவல் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட கனடா குடியுரிமை பெற்ற ஜிதேந்திரநாத் மீண்டும் கனடா திரும்பவதற்கு அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டபோது, பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்றதாகவும், அதன்பிறகு கனடா திரும்ப விமான நிலையம் சென்றபோது, நீதிமன்ற உத்தரவில் வெளிநாடு திரும்ப அனுமதி வழங்குவதாக குறிப்பிடவில்லை என கூறி, கனடா செல்ல விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக மனுவில் கூறியுள்ளார். தான் பணியாற்றும் நிறுவனத்தில் ஜூன்…