Author: Editor TN Talks

திமுக ஆட்சி காலத்தில், நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ரம் முக்கிய உத்தரவிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி அதிமுக எம்.பி. ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யாததை எதிர்த்து இன்பதுரை தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த …

Read More

பாமகவின் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு திமுக ஆதரவு கொடுத்திருப்பதை அன்புமணி ராமதாஸ் வரவேற்றுள்ளார். தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்துவதன் தேவை குறித்து அனைத்துக் கட்சிகள் & சமுதாயத் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து கட்சியை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் நோக்கத்தில் பாமக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர் . குழுவாக இணைந்து முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் எனக் கூறினார். இந்தியாவில் கர்நாடகா,பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கணக்கெடுப்பு…

Read More

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் காவேரி கூக்குரல் சார்பில் 1.20 கோடி மரக்கன்றுகள் நடும் பணியினை சென்னையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயார் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டார். சத்குருவின் ‘காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலம் இந்தாண்டு (2026-27)  1கோடியே 20 இலட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா, தமிழ்நாடு முழுவதும் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இதுவரை 13கோடியே 40 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சைதை எம்எல்ஏ அருள் பிரகாசம், முதலமைச்சரின் தாயாரும் இசைக்கலைஞருமான ஷோபா சந்திரசேகர், நடிகை சுஹாசினி மணிரத்னம் மற்றும் லேன்ஷன் குழும தலைவர் லங்கா லிங்கம்…

Read More

தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட வாக்குறுதிகளுடன் சேர்த்து மக்களுக்கு 436 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட் கூட்டத்தொடர், மக்களுக்கான திட்டங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டம் முடிவுற்றபின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார், தங்களுடைய தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதை சேர்த்து மொத்தம் 436 திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். ஒவ்வொரு துறை வாரியாக 10 திட்டங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்,  அந்த திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என முழு அளவில் திட்டவடிவத்துக்கு கொண்டு வந்து பின்னர் முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று அவை செயல்படுத்தப்படும்  என்றார். டாஸ்மாக்கில் 717 கடைகள் முடப்பட்டுள்ளதாகவும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் தீவிர நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர் நிர்மல்குமார், கடந்த திமுக ஆட்சியில்தால் கஞ்சா தொடங்கி…

Read More

இந்தியாவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த நிலையில், அந்த இடத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான தவெக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக, தனக்கு ஆட்சி அமைக்க ஆதரவளித்த காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை வழங்கி தவெக இன்ப அதிர்ச்சி கொடுத்தது. தற்போது காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சியில் தமிழ்நாடு வேட்பாளராக பிரவீன் சக்கரவரத்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் கர்நாடகாவில் மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலிகான் ஆகியோரும், மத்தியப் பிரதேசத்தில் மீனாட்சி நடராஜன், ராஜஸ்தானில் நீரஜ் டாங்கி, ஜார்க்கண்டில் பிரணவ் ஜா ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Read More

டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது. “இந்தியா” கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக…

Read More

தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியின் பினாமியாகச் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பகீர் குற்றாச்சாட்டைக் கூறியுள்ளார். நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் உலகின் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தின் தலைவராக நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். பல நாடுகளுக்கு சென்று இந்தியாவிற்கு தேவையானவற்றை பெற்றுக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். போர் சூழலிலும் குண்டு மழை பொழிந்து வரும் நிலையிலும் இந்தியாவிற்கு தேவையான பொருட்கள் தங்கு தடை இன்றி கிடைத்து வருகிறது என்றார். அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்து அவரும் யாரிடமும் சொல்லவில்லை. நாங்களும் அவரிடம் பேசவில்லை. அவர் ராஜினாமா செய்வதற்கான எந்த கடிதமும் இருக்கவில்லை. எங்களிடமும் கிடைக்கவில்லை. எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றார். தொடர்ந்து பேசியவர்,  முதல்வர் சிறுபான்மை அரசு என தொடர்ந்து சொல்லி வருகிறார். சிறுபான்மையினருக்கான அரசா சிறுபான்மையினர்…

Read More

மீன்பிடி துறைமுகங்களை சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், மீனவர்களின் சுதந்திரத்தையும், மாநில உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என எஸ்.டி.பி.ஐ கட்சியின்மாநிலத் தலைவர் முகமது முபாரக் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் கடற்கரைப் பாதுகாப்பு என்ற பெயரில், நாடு முழுவதும் உள்ள 1,200 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) கீழ் கொண்டு வர ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசின் இத்திட்டத்தால் தமிழகத்தில் உள்ள சென்னை – காசிமேடு தொடங்கி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களும், நூற்றுக்கணக்கான மீன்பிடி இறங்கு தளங்களும் மத்திய பாதுகாப்புப் படையின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் செல்லும் நிலை உருவாகும். விமான நிலையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பொதுத்துறை பெருநிறுவனங்களுக்குரிய கடுமையான பாதுகாப்பு…

Read More

திருச்சியில் சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள பாமக தலைவர் அன்புமணி,  குற்றச் செயல்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். திருச்சி  காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.  பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகவும் கவலையளிப்பதாக அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும்,  சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் மாரியப்பன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,  மீதமுள்ளவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அச்சிறுமியின்  உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  திமுக ஆட்சியில் தான்  பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பற்ற அவல நிலை நிலவுகிறது. அதனால் தான்  ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. அதன் பிறகும் அதே நிலை தொடரக் கூடாது. பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்த  சிங்கப்பெண் சிறப்புப் படை…

Read More

தமிழகத்தில் தினந்தோறும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நிகழும் நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தைத் தொடங்கிவைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி டினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண் குழந்தைகளையும், மகளிரையும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என தேர்தலுக்கு முன்பு முழங்கிய ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு தன் ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்? தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் புரையோடிக் கிடக்கும் போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து தான் தடுக்க வேண்டும் என்றால், அது வரை பெண்கள் யாரும் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்று சொல்ல வருகிறாரா முதலமைச்சர் ஜோசப்…

Read More