Close Menu
    What's Hot

    சி.ஐ.எஸ்.எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் –  மாநில அரசை உஷார் படுத்தும் முகமது முபாரக்

    கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!. பேக்கரிக்குள் புகுந்ததால் பரபரப்பு!.  

    அசிங்கப்படுத்திய மேயர் பிரியா..! நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தவெக எம்.எல்.ஏ..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»நாள்தோறும் தொடரும் பாலியல் குற்றங்கள்; சிங்கப் பெண் சிறப்பு படை எங்கே? – டிடிவி தினகரன் சாடல்
    அரசியல்

    நாள்தோறும் தொடரும் பாலியல் குற்றங்கள்; சிங்கப் பெண் சிறப்பு படை எங்கே? – டிடிவி தினகரன் சாடல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2026Updated:June 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் தினந்தோறும் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நிகழும் நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தைத் தொடங்கிவைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி டினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பெண் குழந்தைகளையும், மகளிரையும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என தேர்தலுக்கு முன்பு முழங்கிய ஜோசப் விஜய் அவர்கள், முதலமைச்சரான பின்பு தன் ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் குறித்து வாய் திறக்க மறுப்பது ஏன்?

    தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் புரையோடிக் கிடக்கும் போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு இளைய சமுதாயம் அடிமையாகிக் கொண்டிருக்கும் வேளையில், மறுபுறம் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை சிங்கப்பெண் அதிரடிப்படை வந்து தான் தடுக்க வேண்டும் என்றால், அது வரை பெண்கள் யாரும் வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என்று சொல்ல வருகிறாரா முதலமைச்சர் ஜோசப் விஜய் எனச் சாடியுள்ளார்.

    தட்டுத் தடுமாறி அல்லு சில்லுகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெக அரசில், நாள்தோறும் நடைபெறும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

    இதற்குப் போட்டி, பொறாமை, பதற்றம் என புதுப்புது அர்த்தத்தைப் புகுத்தி, விமர்சனங்களை எதிர்கொள்ளத் திராணியில்லாமலும், அவற்றை சரி செய்ய முனைப்புக் காட்டாமலும், எதற்கு கால அவகாசம் கேட்க வேண்டும் என்பது புரியாமலும் போர்க்கால அடிப்படையில் (Emergency Issues) தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கும், கால அவகாசம் கோருவது எந்த விதத்தில் நியாயம் என்பதே எங்களின் கேள்வி எனக் கூறியுள்ளார்.

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைக் கூட தொடங்கி வைக்கக் காலம் நேரம் பார்க்கும் நிலையில் தான் தற்போதைய தவெக அரசு உள்ளது என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு.

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை பார்த்துவிட்டு மெல்ல மெல்ல வெளியே வரும் சமூக விரோதிகள், இம்முறை புதிய ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சுதந்திரமாக செயல்படுவதும், குற்றச் செயல்களில் துணிச்சலுடன் ஈடுபடுவதும் தவெக அரசின் மீது அவர்களுக்கு துளியளவும் அச்சமில்லை என்பதையே தெளிவுபடுத்துகிறது.

    எனவே, பெண்களின் பாதுகாப்பில் எந்த வித சமரசமுமின்றி செயலாற்ற வேண்டியது முதலமைச்சரின் முதல் கடமை என்பதை உணர்ந்து, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்திடுவதோடு கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களின் புழக்கத்தை அடியோடு கட்டுப்படுத்த வேண்டும் என முதலமைச்சரை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!
    Next Article மருத்துவ இடங்கள் பறிபோகிறதா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கடிதம்!
    Editor TN Talks

    Related Posts

    சி.ஐ.எஸ்.எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் –  மாநில அரசை உஷார் படுத்தும் முகமது முபாரக்

    June 4, 2026

    கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!. பேக்கரிக்குள் புகுந்ததால் பரபரப்பு!.  

    June 4, 2026

    அசிங்கப்படுத்திய மேயர் பிரியா..! நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தவெக எம்.எல்.ஏ..!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சி.ஐ.எஸ்.எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் –  மாநில அரசை உஷார் படுத்தும் முகமது முபாரக்

    கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!. பேக்கரிக்குள் புகுந்ததால் பரபரப்பு!.  

    அசிங்கப்படுத்திய மேயர் பிரியா..! நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தவெக எம்.எல்.ஏ..!

    திமுக ஆட்சியின் அவலம் தவெக ஆட்சியிலும் தொடர்வதா? – விஜய் அரசுக்கு அன்புமணி கேள்வி

    ”மின்வாரியத்தில் ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா?”… நயினார் நாகேந்திரன் கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.