Close Menu
    What's Hot

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!
    தமிழ்நாடு

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    Editor web2By Editor web2July 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    013 court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப, தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள பட்டியலில் இருந்து ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

    மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அதுதொடர்பான வழக்கை மீண்டும் விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேலும், வழக்கில் இறுதி முடிவு வரும் வரை புதிய துணைவேந்தர் நியமனங்கள் செய்யப்படமாட்டாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்திருந்தது.

    இந்த நிலையில், அந்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கும், பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கக் கோரிய மற்றொரு வழக்கும் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் 15 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் இல்லாததால் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

    இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உத்தரவாதம் காரணமாக துணைவேந்தர் நியமனங்கள் தாமதமாகியுள்ளதாகவும், இந்த நிலைக்கு தீர்வு காண தேடுதல் குழு பரிந்துரைத்துள்ள மூன்று பேரில் ஒருவரைத் தேர்வு செய்து நியமிக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    மேலும், துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கிய சட்டத்தின் மீதான தடை ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளதால், அந்தச் சட்டம் தற்போது அமலில் இருப்பதாகவே கருதப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கோரிக்கை வைத்தது.

    இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகள் தொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    HighCourt HigherEducation tamilnadu ViceChancellor
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்
    Next Article “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்
    Editor web2
    • Website

    Related Posts

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    July 29, 2026

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    July 29, 2026

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சன் நெட்வொர்க்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்… ஏன் தெரியுமா?

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.