Close Menu
    What's Hot

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்
    Featured

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Breakfast Scheme
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காமராஜர் காலை உணவுத் திட்டப் பணிகள் தற்போது புதிதாக தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு நகர்ப்புறப் பகுதிகளில் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்ட சேவை வழங்குநர்கள் (Service Providers) மூலமாகவே உணவு தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதும் அதே நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதாகவும், புதிதாக எந்த தனியார் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்றும் நகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    இதனால், காமராஜர் காலை உணவுத் திட்டம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும், பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்களை நம்பவோ, பகிரவோ வேண்டாம் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    மேலும், தவறான தகவல்களை பரப்புவது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. Fact Check, TN Fact Check மற்றும் TNFCU ஆகிய அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே பொதுமக்கள் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    FactCheck KamarajarBreakfastScheme tamilnadu TNFactCheck
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!
    Next Article துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!
    Editor web2
    • Website

    Related Posts

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    July 29, 2026

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    July 29, 2026

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவுடன் இணைந்து போராட தயார் – பச்சைக் கொடி காட்டும் செங்கொடி!

    களப்போராளிகளை கொண்டாடுவதை விட ரீல்ஸ் போராளிகளைத்தான் கொண்டாடுகின்றனர் – உதயநிதி ஸ்டாலின் வேதனை

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.