Close Menu
    What's Hot

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!
    Featured

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    Editor web2By Editor web2July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    lok sabha rahul
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் நடத்திய போராட்டம் குறித்து பேசியபோது, ஆளுங்கட்சி பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராகுல் காந்தி தனது பேச்சின்போது, “மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறை அல்லது வெறுப்பின் வெளிப்பாடு அல்ல. அது நாட்டின் இளைஞர்களின் உணர்வுகள், எதிர்காலம் குறித்த அச்சம் மற்றும் எதிர்பார்ப்புகளின் ஜனநாயகபூர்வமான வெளிப்பாடு. இந்த போராட்டத்தை எந்த அரசியல் கட்சியும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. ஆளும் பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் மாணவர்களின் ஜனநாயக உரிமையை மதிக்க வேண்டும்” என்றார்.

    மேலும், “பாஜக தலைவர்கள் தங்களது சொந்த குழந்தைகளிடம் இந்த மாணவர் போராட்டம் குறித்து கேட்டுப் பாருங்கள். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் பக்கமே அவர்களது குழந்தைகளின் ஆதரவு இருப்பதை உணர்வார்கள். இந்த போராட்டத்தில் எந்தத் தவறும் இல்லை. மாறாக, ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் பார்க்க வேண்டிய நிகழ்வு இது. இளைஞர்களின் கருத்தை கேட்காதவர்கள் முட்டாள்கள்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

    இந்தக் கருத்துக்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, விவாதப் பொருளுக்கு தொடர்புடைய விஷயங்களை மட்டும் பேசுமாறு ராகுல் காந்தியை அறிவுறுத்தினார்.

    அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நான் மாணவர்களின் மனநிலையைப் பற்றித்தான் பேசுகிறேன். யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை,” என்று விளக்கம் அளித்தார். இருப்பினும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

    loksabha Parliament rahulgandhi StudentProtests
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?
    Next Article காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்
    Editor web2
    • Website

    Related Posts

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    July 29, 2026

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    July 29, 2026

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் : முகத்தை மறைத்துக் கொண்டு வாகனத்தை திருடும் நபர்கள்..! சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி..!

    “மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்:” முதலமைச்சரிடம் கோவை தொழில் அமைப்புகள் வலியுறுத்தல்

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.