Close Menu
    What's Hot

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?
    Featured

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    editor5By editor5July 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 38 9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக) ஆட்சி அமைந்து சில மாதங்கள் ஆன நிலையில், அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யும் விவகாரம் இன்னும் தீர்வு காணாமல் நீண்டு வருகிறது. முதல்வர் என். ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்று விட்டாலும், துறை ஒதுக்கீடு தாமதமாகி வருவது அரசின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சட்டமன்றத் தேர்தலில் 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லோக் ஜனசக்தி கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த வெற்றியின் அடிப்படையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது. பதவியேற்பு விழாவில் மே 13-ம் தேதி முதல்வர் ரங்கசாமியுடன், நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். பின்னர், ஜூன் 17-ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ராஜவேல், சிவக்கொழுந்து மற்றும் பாஜக சார்பில் ராஜசேகர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இருப்பினும், இதுவரை எந்த அமைச்சருக்கும் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

    இலாகா ஒதுக்கீட்டில் முதல்வர் ரங்கசாமி முக்கிய துறைகளான உள்துறை உள்ளிட்டவற்றை பாஜகவுக்கு வழங்க தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆட்சியில் பாஜகவுக்கு வழங்கப்பட்ட அதே முக்கிய துறைகளையும், சபாநாயகர் பதவியையும் இம்முறையும் கோரி பாஜக நிலைப்பாட்டில் உள்ளது. எனினும், தொகுதி வெற்றி எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி என்.ஆர்.காங்கிரஸ் தரப்பு கூடுதல் பங்கு கோருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே அதிருப்தி அதிகரித்துள்ளது.

    மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ரூ.14,300 கோடி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஆகஸ்ட் இறுதிக்குள் சட்டசபையைக் கூட்டி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. துறைவாரியாக நிதி ஒதுக்கீடு செய்ய இலாகாக்கள் அவசியம் என்பதால், தாமதம் அரசு நிர்வாகத்தை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. கடந்த 20-ம் தேதி முதல்வர் ரங்கசாமி ஆளுநர் கைலாஷ்நாதனிடம் இலாகா ஒதுக்கீடு பட்டியலை சமர்ப்பித்தார்.

    வழக்கமாக சில மணி நேரங்களில் அரசாணை வெளியாகும் நிலையில், இன்னும் அறிவிப்பு வராதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மேலிடத்துக்கு புதுச்சேரி தலைவர்கள் புகார் அளித்ததாகவும், அதனாலேயே ஒப்புதல் தாமதமாகிறது எனவும் தகவல்கள் வெளியாகின்றன. அரசு விழாக்களில் பாஜக அமைச்சர்கள் பங்கேற்பதில்லை என்பதும் மோதலை உறுதிப்படுத்துவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

    இருப்பினும், இரு கட்சிகளும் கூட்டணி தொடரும் என்றும், விரைவில் மனஸ்தாபங்கள் தீரும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. பிடிவாதமான நிலைப்பாடுகளே தற்போதைய சிக்கலுக்கு முக்கிய காரணம் என்கின்றனர் அரசியல் வட்டாரத்தினர்.

    n rangasamy Puducherry
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!
    Next Article “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!
    editor5

    Related Posts

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    July 29, 2026

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    July 29, 2026

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    துணைவேந்தர் நியமனத்திற்கு அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்!

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.