Close Menu
    What's Hot

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!
    Featured

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 china ship
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இமர்ஷன் டீப் அல்ட்ரா வயலெட் (Immersion DUV) லித்தோகிராபி இயந்திரங்களை பெருமளவில் உற்பத்தி செய்ய சீனா தொடங்கியுள்ளது. இது மேம்பட்ட செமிகண்டக்டர் (சிப்) உற்பத்திக்கு மிகவும் முக்கியமான தொழில்நுட்பமாகும்.

    ஷாங்காய் ஐஷெங்னா எலக்ட்ரானிக் டெக்னாலஜி குழுமம்  என்ற அரசு ஆதரவு நிறுவனமே இந்த உற்பத்தியை முன்னெடுத்து வருவதாகவும், சீனாவின் முன்னணி லித்தோகிராபி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தொழில்நுட்பக் குழுக்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்த முன்னேற்றம், அதிபர் ஷி ஜின்பிங் முன்னெடுத்து வரும் செமிகண்டக்டர் தன்னிறைவு திட்டத்திற்கு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இருப்பினும், உலகின் முன்னணி லித்தோகிராபி இயந்திர உற்பத்தியாளரான நெதர்லாந்தின் ASML நிறுவனத்திற்கு உடனடி வர்த்தக அச்சுறுத்தலாக இது அமையாது என்றும் கூறப்படுகிறது.

    தொழில்நுட்ப செய்தி வெளியீடான The Information வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டில் சுமார் 5 DUV இயந்திரங்களும், 2027ஆம் ஆண்டில் 20 இயந்திரங்களையும் சீனா தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சீனாவில் தயாரிக்கப்படும் இந்த DUV இயந்திரங்கள், இந்த ஆண்டிலேயே SMIC (Semiconductor Manufacturing International Corp), Hua Hong Semiconductor மற்றும் ChangXin Memory Technologies (CXMT) உள்ளிட்ட முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இமர்ஷன் DUV தொழில்நுட்பத்தில், லென்ஸ் மற்றும் சிலிகான் வேஃபர் இடையே நீர் அடுக்கு பயன்படுத்தப்படுவதால், வழக்கமான DUV முறையை விட சிறிய அளவிலான சுற்றுகள் (Circuit Patterns) உருவாக்க முடியும். பலமுறை வெளிப்படுத்தும் (Multiple Patterning) முறையின் மூலம் மேலும் மேம்பட்ட சிப்களையும் தயாரிக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுகிறது.

    சீனாவின் DUV இயந்திரம் இன்னும் பல கட்ட சோதனைகளை கடக்க வேண்டியுள்ளது. செயல்திறன், துல்லியம், உற்பத்தி வேகம் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை போன்ற அம்சங்களில் ASML நிறுவனத்தின் இயந்திரங்களுக்கு இணையாக இது இன்னும் வரவில்லை என்று தகவல் தெரிவிக்கிறது.

    அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் காரணமாக, உலகின் மிகவும் மேம்பட்ட EUV (Extreme Ultraviolet) லித்தோகிராபி இயந்திரங்களை சீனா வாங்க முடியாத நிலை உள்ளது. மேலும், நெதர்லாந்து விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சில மேம்பட்ட DUV இயந்திரங்களையும் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், உள்நாட்டிலேயே DUV இயந்திரங்களை உருவாக்கும் முயற்சி, எதிர்காலத்தில் மேற்கத்திய நாடுகள் மேலும் கட்டுப்பாடுகளை விதித்தாலும், சீன சிப் உற்பத்தியாளர்களுக்கு மாற்று தொழில்நுட்ப ஆதாரமாக அமையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

    ஆனால், “சில DUV இயந்திரங்களை தயாரிப்பது வேறு; ஆயிரக்கணக்கான வேஃபர்களை உயர்தரத்தில் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் திறனை அடைவது வேறு” என்று JP Morgan Chase நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, குறுகிய காலத்தில் ASML நிறுவனத்தின் சந்தை நிலைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

    china Chip Manufacturing DUV Lithography Semiconductor Industry Technology News
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு
    Next Article 9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?
    Editor TN Talks

    Related Posts

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    July 29, 2026

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    July 29, 2026

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காமராஜர் காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பா..? – தமிழக அரசு விளக்கம்

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.