Author: Editor TN Talks
அண்மையில் தவெக எம்.எல்.ஏவுடன் மோதல் போக்கில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியா மீது மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் திருவிக நகர் மண்டலத்தில் அமைந்துள்ள உருது நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா, திரு விக நகர் தவெக எம்.எல்.ஏ பல்லவி, மாநகராட்சி கல்வி இணை ஆணையாளர் கற்பகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது ரிப்பன் வெட்டும் நிகழ்வில் மேயருக்கு முன்னதாக எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்தார். பின்பு குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியின்போது மேயர் பிரியா விளக்கை ஏற்றினார். தொடந்து அடுத்ததாக விளக்கேற்ற வந்த எம்.எல்.ஏ பல்லவியிடம் மெழுகுவத்தியை கொடுக்காமல் கல்வி இணை ஆணையாளருக்கு கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடந்து பல்லவி அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். இதன்பின்னர் அதே மண்டலத்தில் நடைபெற்ற மற்றுமொரு பள்ளி நிகழ்ச்சியில் இருவரும் மீண்டும் கலந்து கொண்டனர். அப்போது…
கட்சியைக் காப்பாற்றவே கதறும் தீர்ந்து போன சக்தி, எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அத்தனையிலும் நீங்கள் மண்ணைக் கவ்வப் போவது நிச்சயம் என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது. தவெக ஐ.டி.விங் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- திரைப்படத்தில் தோன்றி, புகழ் பெற்றவராம், நம் வெற்றித் தலைவர். இல்லையென்று யார் சொன்னது? தலைவரே இதைத் தேர்தல் பிரசார இறுதிக் கூட்டத்தில் சொன்னாரே. ஆனால், இதுகூடத் தெரியாமல், தீர்ந்துபோன சக்தி, திரைப்படப் புகழ் என்று ஏளனம் பேசுவது ஏனோ? வலுவான மக்கள் இயக்கமாக அ.தி.மு.க.வைக் கட்டமைத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அதைக் கட்டிக் காத்த ஜெயலலிதா அம்மையாரும் திரைப்படங்களில் தோன்றிப் புகழ் பெற்றதைத்தான் இப்படிச் சொல்லி ஏளனம் செய்கிறாரா இந்தத் தீர்ந்துபோன சக்தி? அப்பழுக்கற்ற தொண்டர்கள் இயக்கத்தை அடகு வைத்து, கரைந்து காணாமல் போகச் செய்த இந்தத் தீர்ந்துபோன சக்தியை எம்.ஜி.ஆரின் ஆவியும் ஜெயலலிதா அம்மையாரின் ஆவியும் எப்படி மன்னிக்கும்? கோட் சூட், போட்டோஷூட் என்று…
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் பெ.சண்முகம் நேற்று செய்தியாளகளைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏதாவது ஒரு கட்சியை அழிக்க வேண்டும் என்னும் பாஜகவின் திட்டத்தில், அதிமுக பலியாகி இருப்பதாகக் கூறியதோடு, அடுத்த தேர்தலுக்கு அதிமுக இருக்குமா என்பது கேள்விக்குறிதான் என சந்தேகத்தைக் கிளப்பினார். திமுக கூட்டணி குறித்த கேள்வி, அப்படி ஒரு கூட்டணியே இல்லை என்றார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்பதைவிட அந்த கூட்டணியே தற்போது இல்லை எனக் கூறியவர், அதே நேரம் தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போராடுவோம் எனத் தெரிவித்தார். மேலும் தவெக அரசின் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியும் தற்போது இல்லை என்றார் பெ.சண்முகம். சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட…
தமிழக வக்ஃப் சொத்துகளுக்கு பேராபத்து எழுந்துள்ள நிலையில், உமீத் போர்ட்டலில் பதிவேற்றப்படாத 30,000 வக்ஃப் சொத்துகளையும் பதிவேற்ற அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டக் கெடுபிடிகளால் தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான வக்ஃப் சொத்துகள் பறிபோகும் பேராபத்து உருவாகியுள்ள நிலையிலும், தமிழக அரசும், வக்ஃப் வாரியமும் காட்டி வரும் மெத்தனப் போக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய அரசின் உமீத் போர்ட்டலில் பதிவேற்றப்படாத தமிழ்நாட்டில் உள்ள சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்க, வக்ஃப் தீர்ப்பாயம் மூலம் உடனடியாகக் கூடுதல் அவகாசம் பெற்று, அவற்றை பதிவேற்றம் செய்ய போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசும், வக்ஃப் வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்ஃப் சொத்துகள் என்பவை ஏழை, எளிய மக்களின் கல்வி, சமூக மேம்பாடு மற்றும் ஆன்மீக வழிபாட்டுத் தேவைகளுக்காக நம் முன்னோர்களால் இறைப்…
காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பதவி ஏற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பல்வேறு முன்னேற்றங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளன. புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள் தங்கள் துறையில் நல்ல துவக்கத்தை துவக்கி உள்ளனர் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இரண்டு அமைச்சருடன் சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ளது கட்சிக்குள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் புதிய ஆட்சிக்கு ஆறு மாத காலம் பொறுத்திருந்து பார்ப்போம் என கூறிவிட்டு ஐந்து வாரம் கூட ஆகாத நிலையில் தற்போதே கதற ஆரம்பித்துவிட்டனர். தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் இந்துத்துவா சக்தி தான் செந்தமிழன் சீமான். எந்த சித்தாந்தத்தையும் மையப்படுத்தாத சீமான், எங்கே பிரதிநிதித்துவம் கிடைக்கிறதோ அங்கே கூவுவார். இப்போ அவர் காங்கிரசை நோக்கி கூறுகிறார். அதற்கு பின்னால் இருந்து யாரோ காங்கிரசை எதிர்த்து கூவுங்கள் உங்களுக்கு வேண்டியதை…
முதலமைச்சரின் ஜோசப் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய், சிறுமிகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் ப்டை உருவாக்கப்படும் என்று அறிவித்ததோடு, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டதோடு, ஒரு எஸ்.பி., 2 டி.எஸ்.பி. 4 ஆய்வாளர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழக்கமான சீருடை இன்றி நேவி ப்ளூ நிற சட்ட – காக்கி பேன்ட் , கருப்பு தொப்பி என்கிற சிறப்பு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மே 29-ஆம் தேதி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பதாகக்கூறப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி தள்ளிப்போனது. இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்,…
5 மாநில தேர்தலுக்குப் பின்னர் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்பட 23க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டணியாக இது இருந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பின்னர் இக்கூட்டணிக்குள் கருத்துவேறுபாடுகள் நிலவியது. அண்மையில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுக்குப் பின்னர் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெறுகிறது. இந்தியா ஜன்பந்தன் என்னும் பெயரில் நடைபெறும் இக்கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சில கட்சிகள்…
ஆட்சி தவெக-வின் நாற்காலியின் 2 கால்கள் அக்கட்சியிடம் இல்லை என்றும் எந்த நேரத்திலும் நாற்காலி சாயும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலத்தில் அதிமுகவின் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெக-விடம் தற்போதுள்ள ஆதரவு மற்றும் அரசியல் கட்டமைப்பு ஒரு நாற்காலியின் நான்கு கால்களில் இரண்டை மட்டுமே கொண்டுள்ளதைப் போன்றது என்றார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாற்காலி சாயும் என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பான்மையான இடங்களில் தவெக வெற்றி பெறவில்லை என்றும் 8 மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட தவெக வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி அமைந்துள்ளதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அந்தக் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தவெக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். ஆட்சியை அதிகாரிகள் நடத்தினால் முதலமைச்சர் எதற்கு என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,…
18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டம் கவாசாகி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ஹாக்கி திடலில் நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் தட்டிச் சென்றது. இது இந்தியா வெல்லும் 3வது சாம்பியன் பட்டமாகும். தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியின் ஒவ்வொரு வீரருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா வீழ்த்தி இருந்த ஜப்பான் அணி, இந்த தொடரில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இருந்தது. அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானையும், ஜப்பான் அணி மலேசியாவையும் வீழ்த்தி இருந்தது.
அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கி உள்ளதை பலமுறை பிளாப் ஆன படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் எடுபடாது என்பது போன்றது என குறிப்பிட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என பேசியிருப்பது குறித்த கேள்விக்கு, அவர்கள் தொடர்ந்து இப்படி பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மக்கள் தீர்ப்பை மதிக்காமல், பாடம் கற்றுக் கொள்ளாமல் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் திமுக நன்றாக இருக்கும் என்றும் தொடர்ந்து அவர்கள் அப்படியே பேசட்டும் என பதில் அளித்தார். அண்ணாமலையின் புதிய இயக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அது ஜனநாயக உரிமை என்றார். ஆனால், எந்த கறை வேண்டுமானாலும் மக்கள் விட்டு விடுவார்கள், ஆனால் பாஜக கறை, படிந்த இயக்கமாக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும்…