முதலமைச்சரின் ஜோசப் விஜய் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக மே 10ஆம் தேதி பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ச.ஜோசப் விஜய், சிறுமிகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் ப்டை உருவாக்கப்படும் என்று அறிவித்ததோடு, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படைக்கு ஐஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டதோடு, ஒரு எஸ்.பி., 2 டி.எஸ்.பி. 4 ஆய்வாளர்கள் உள்பட 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு வழக்கமான சீருடை இன்றி நேவி ப்ளூ நிற சட்ட – காக்கி பேன்ட் , கருப்பு தொப்பி என்கிற சிறப்பு சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மே 29-ஆம் தேதி இந்தத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைப்பதாகக்கூறப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் நிகழ்ச்சி தள்ளிப்போனது.
இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், அடுத்த வாரம் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைக்கபடும் எனத் தெரிவித்தார்.
அந்த அடிப்படையில் நாளை மாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்.
