Close Menu
    What's Hot

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சிறப்புக் கட்டுரைகள்»வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?
    சிறப்புக் கட்டுரைகள்

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    Editor web2By Editor web2July 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    whatsapp 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகின் மிகப் பெரிய மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், பயனர்களின் மொபைல் எண்ணை வெளிப்படுத்தாமல் தொடர்புகொள்ளும் வகையில் “Username” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

    ஆனால், இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே, அதனைத் தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப்புக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், தனியுரிமை மற்றும் இணையப் பாதுகாப்பு குறித்த விவாதம் தீவிரமாகி உள்ளது.

    இதுவரை வாட்ஸ்அப்பில் ஒருவரை தொடர்புகொள்ள அவரது மொபைல் எண் கட்டாயமாக இருந்தது. ஆனால், புதிய வசதியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட Username ஒன்றை உருவாக்கி, அதன்மூலம் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள முடியும். இதனால் மொபைல் எண்ணை பகிர வேண்டிய அவசியம் இருக்காது.

    இருப்பினும், கணக்கை உருவாக்க மொபைல் எண் தொடர்ந்து அவசியமாகவே இருக்கும். ஆனால், மற்றவர்களுடன் உரையாடும்போது அந்த எண் மறைக்கப்படும்.

    இந்திய அரசின் கவலை என்ன?

    இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக “டிஜிட்டல் அரெஸ்ட்”, வங்கி மோசடி, போலி காவல்துறை அதிகாரி, போலி அரசு அதிகாரி என ஏமாற்றும் சைபர் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

    இந்த நிலையில், ”மொபைல் எண்ணுக்குப் பதிலாக Username வந்தால்,அரசு அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கலாம்.வங்கிகள், RBI, CBI, போலீஸ் போன்ற பெயர்களைப் போன்ற Username-களை பயன்படுத்தி ஏமாற்றலாம். மோசடி செய்பவர்களின் உண்மையான அடையாளத்தை கண்டறிவது சிக்கலாகும்” என்பதே மத்திய அரசின் முக்கிய அச்சமாக உள்ளது.

    வாட்ஸ்அப் என்ன சொல்கிறது?

    ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை வாட்ஸ்அப் மறுக்கிறது. அந்நிறுவனத்தின் விளக்கப்படி, Username-களை பொதுவாக தேட முடியாது. Public Directory இருக்காது. சரியான Username தெரிந்தால் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். Username Key என்ற கூடுதல் பாதுகாப்பு வசதியும் வழங்கப்படும்.

    whatsapp

    பிரபலங்கள், அரசு அமைப்புகள், வங்கிகள் போன்றவற்றின் பெயர்கள் முன்கூட்டியே பாதுகாக்கப்படும். புதிய கணக்கு, வெளிநாட்டு கணக்கு போன்ற எச்சரிக்கை தகவல்களும் முதல் செய்தியிலேயே காட்டப்படும்.எனவே இது சமூக வலைதள வசதி அல்ல; தனியுரிமையை பாதுகாக்கும் Privacy Feature என வாட்ஸ்அப் விளக்கமளிக்கிறது.

    நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

    சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்து இரண்டு வகையாக உள்ளது. ஒரு தரப்பு, மொபைல் எண் என்பது இந்தியாவில் அடையாளத்தின் முக்கிய சான்று என்பதால், அதை மறைப்பது மோசடிகளை அதிகரிக்கலாம் என எச்சரிக்கிறது. மற்றொரு தரப்பு, குறிப்பாக பெண்கள், மாணவர்கள், சமூக அமைப்புகளில் செயல்படுபவர்கள் போன்றோருக்கு தங்கள் மொபைல் எண்ணை பகிராமல் தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைப்பது முக்கியமான தனியுரிமை முன்னேற்றம் எனக் கருதுகிறது.

    மோசடிக்காரர்களுக்கு புதிய ஆயுதமா?

    உலகிலேயே அதிக வாட்ஸ்அப் பயனர்கள் உள்ள நாடு இந்தியா. 50 கோடிக்கும் மேற்பட்டோர் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். எனவே இந்திய அரசு எடுக்கும் முடிவு, இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகளாவிய வாட்ஸ்அப் கொள்கைகளையும் பாதிக்கக்கூடியதாக இருக்கும். இந்த நிலையில், வாட்ஸ்அப்பின் இந்த Username வசதி உண்மையில் பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் புதிய முயற்சியா அல்லது சைபர் மோசடிக்காரர்களுக்கு புதிய ஆயுதமாக மாறுமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.

    இதற்கான பதில், வாட்ஸ்அப் வழங்கும் பாதுகாப்பு அம்சங்கள் நடைமுறையில் எவ்வளவு திறம்பட செயல்படுகின்றன என்பதையும், இந்திய அரசு விதிக்கும் பாதுகாப்பு நிபந்தனைகள் என்ன என்பதையும் பொறுத்தே அமையும்.

    தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தனியுரிமையும் அவசியம். அதே நேரத்தில், சைபர் பாதுகாப்பும் அதே அளவு முக்கியம். இந்த இரண்டுக்கும் இடையே சமநிலையை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதே தற்போது இந்தியா மற்றும் வாட்ஸ்அப் முன் நிற்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    -பா. முகிலன்

    CyberSecurity DigitalFraud Privacy whatsapp
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!
    Next Article பெனால்டி சூட் அவுட்டில் திக் திக் நிமிடங்கள்!. ஆஸ்திரேலியாவை வெளியேற்றி எகிப்து அசத்தல் வெற்றி!
    Editor web2
    • Website

    Related Posts

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    July 19, 2026

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    July 19, 2026

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    July 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரசவ அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த பெண் … சடலத்தை விட்டுவிட்டு ஓடிய மருத்துவர்கள்

    முதலமைச்சர் விஜய்க்கு தெளிவான அரசியல் பார்வை வேண்டும்… சொல்கிறார் முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி

    திமுகவில் பெரும் தலைமை மாற்றம்.. உதயநிதியிடம் முழு அதிகாரம்? தேசிய அரசியலுக்கு நகரும் ஸ்டாலின்?

    தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு நன்மையே – வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கணிப்பு

    58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.