Close Menu
    What's Hot

    இண்டியா கூட்டணி கூட்டம்!. ராகுலுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!. டெல்லியில் பரபரப்பு!

    உத்தண்டி-திருவான்மியூர் உயர்மட்ட பாலத் திட்டத்தில் மாற்றம்? மறுபரிசீலனைக்கு நகரும் நெடுஞ்சாலைத்துறை..!!

    சூர்யகுமார் யாதவ் – MI இடையே விரிசல்? இன்ஸ்டா ‘அன்ஃபாலோ’வால் பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»திமுக கூட்டணியே இல்லை – ஒரே போடாய் போட்ட பெ.சண்முகம்
    Featured

    திமுக கூட்டணியே இல்லை – ஒரே போடாய் போட்ட பெ.சண்முகம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    005 CPM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    புதுக்​கோட்​டை​யில் பெ.சண்முகம் நேற்று செய்​தி​யாளகளைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  ஏதாவது ஒரு கட்​சியை அழிக்க வேண்​டும் என்னும் பாஜகவின் திட்டத்தில், அதி​முக பலி​யாகி இருப்பதாகக் கூறியதோடு, அடுத்த தேர்​தலுக்கு அதி​முக இருக்​குமா என்​பது கேள்விக்​குறி​தான் என சந்தேகத்தைக் கிளப்பினார்.

    திமுக கூட்டணி குறித்த கேள்வி, அப்படி ஒரு கூட்டணியே இல்லை என்றார். திமுக தலைமையிலான மதச்​சார்​பற்ற முற்​போக்கு கூட்​ட​ணி​யில் நாங்​கள் இருக்​கிறோ​மா, இல்​லையா என்​ப​தை​விட அந்த கூட்​ட​ணியே தற்​போது இல்லை எனக் கூறியவர், அதே நேரம் தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்​சினைகளில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன்  இணைந்து போராடு​வோம் எனத் தெரிவித்தார்.

    மேலும் தவெக அரசின் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யும் தற்​போது இல்லை என்றார் பெ.சண்முகம்.

    சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அதி​முக எம்​எல்​ஏக்​கள் 4 பேர் ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​ததை நாங்கள் கடுமையாக எதிர்த்ததால்தான், அது தொடரவில்லை.

    புதிய தவெக அரசு, 3 மாதம்​கூட தாங்​காது என திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின், அதி​முக பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனி​சாமி போன்றவர்கல் கூறுவது தவறு என ஆவேசம் காட்டியவர், தமிழகத்​தில் பாஜக எடு​ப​டாத​தால் மோடி, அமித்ஷா ஆசி​யுடன் ஆர்​எஸ்​எஸ்​-ன் இன்​னொரு அமைப்பை அண்​ணா​மலை தொடங்​கி​யுள்​ளார். அதில் பல லட்​சம் பேர் இணைந்​ததாக ஒரு பிம்​பத்தை கிளப்​பி​விட்​டுள்​ளார்​ எனத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவக்ஃப் சொத்துக்களை பதிவேற்றம் செய்ய போர்க்கால நடவடிக்கை – அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    Next Article சிலுவம்பாளையமே சிரிக்கிறது ; ஓரம்போங்க மிஸ்டர் தீ.போ.ச – கலாய்க்கும் தவெக
    Editor TN Talks

    Related Posts

    இண்டியா கூட்டணி கூட்டம்!. ராகுலுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!. டெல்லியில் பரபரப்பு!

    June 8, 2026

    உத்தண்டி-திருவான்மியூர் உயர்மட்ட பாலத் திட்டத்தில் மாற்றம்? மறுபரிசீலனைக்கு நகரும் நெடுஞ்சாலைத்துறை..!!

    June 8, 2026

    சூர்யகுமார் யாதவ் – MI இடையே விரிசல்? இன்ஸ்டா ‘அன்ஃபாலோ’வால் பரபரப்பு!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இண்டியா கூட்டணி கூட்டம்!. ராகுலுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!. டெல்லியில் பரபரப்பு!

    உத்தண்டி-திருவான்மியூர் உயர்மட்ட பாலத் திட்டத்தில் மாற்றம்? மறுபரிசீலனைக்கு நகரும் நெடுஞ்சாலைத்துறை..!!

    சூர்யகுமார் யாதவ் – MI இடையே விரிசல்? இன்ஸ்டா ‘அன்ஃபாலோ’வால் பரபரப்பு!

    கோயில்களில் இடைத்தரகர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்..!! அமைச்சர் ரமேஷ் அதிரடி..!!

    மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் – இன்றே கடைசி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.