Author: Editor TN Talks

திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என மதிமுக எம்.பி  துரைவைகோ கூறியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் பயணிக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பக்ரீத் பண்டிகையன்று மாடு, கன்றுகள் பலியிடுவதற்கு நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி த.வெ.க அரசு தடுத்ததை மமக கண்டிப்பதாகத் தெரிவித்தார். அதிமுக எம்.எல்.ஏக்கள் மூவர் தவெகவுக்கு மாறியதைச் சுட்டிக்காட்டி, சென்னை தலைமை செயலகம் ஒரு அரசியல் கட்சியின் தலைமை செயலகம் போல் செயல்படுவதாக விமர்சித்தார். திமுக சின்னத்தில் போட்டியிடுவது, துரதிர்ஷ்டம் எனக் கூறிய துரைவைகோவின் கருத்து தொடர்பான கேள்விக்கு, மனித நேய மக்கள் கட்சி தனி சின்னத்தில் போட்டியிடவில்லை என்கிற வருத்தம் எங்களுக்கு இல்லை, வைகோவும், துரை வைகோவும் ஏன் இப்படி பேசுகிறார்கள் என தெரியவில்லை எனக் கூறினார்.…

Read More

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம் என்று தான் கூறியது தொண்டர்களின் மனக்குமுறலால்தான் என துரைவைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுகவின் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது துரதிர்ஷ்டம் எனக் கூறியது வாஸ்தவம்தான்.  கொடியும் சின்னமும் தான் ஒரு கட்சியின் அல்லது இயக்கத்தின் அடிப்படை அடையாளங்கள். மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடும்போது, தன்னுடைய தனித்துவத்தை அது இழக்கும். ஒரு கட்சியின் உறுப்பினர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன், தான் சார்ந்த கட்சியில் இருந்து அவர் ராஜினாமா செய்யவேண்டும். பின்னர் அவர் போட்டியிடும் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு அந்தசின்னத்தில் போட்டியிடவேண்டும். இதுதான் ஜனநாயகம். 10 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து வருவதாலும், உதயசூரியன் சின்ன விவகாரம் கடைசி நேரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தில் அதனால் நாங்கள் வெளியேறி அதனால் ஒரு சர்ச்சை ஏற்படக்கூடாது என்பதால்தான் நாங்கள் திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். கூட்டணி…

Read More

ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை மீண்டும் வேறு வடிவத்தில் தூத்துக்குடியில் நிர்மாணிக்க வேதாந்தா குழுமம் முயற்சிப்பதாகவும், தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- சுற்றுச் சூழலுக்கும், விவசாயத்திற்கும், மீனவர்களுக்கும் பெரும் தீங்கினைச் செய்த, கேடு விளைவித்த வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையை எதிர்த்து பல ஆண்டுகள் மக்களைத் திரட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், வணிகர் சங்கங்களும், தூத்துக்குடி சுற்றுவட்டார கிராம மக்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அன்றைய தமிழக அரசு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எடுபிடியாக மாறி, போராட்டக்காரர்களை நசுக்கும் நோக்கத்தில் காவல்துறை 13 பேரை சுட்டுக் கொன்றது. ஸ்டெர்லைட் வழக்கு உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் ஆண்டுக் கணக்கில் நடத்தப்பட்டு, இறுதியில் உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானமும், நீதியரசி பவானி சுப்புராயனும் கொண்ட அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக மூடும் தீர்ப்பை வழங்கியது. இந்தியாவில்…

Read More

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டப்பணிகளை  ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் N.ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து பின்னர், வீடுகள் வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், சாலைகள் மற்றும் பாலங்கள், சிறுபாசன ஏரிகள், CSR Funding, SFC Grant பணிகள், சுய உதவிக் குழுக்கள் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, கேளம்பாக்கம் ஊராட்சியில் தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு முக்கியத் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால்…

Read More

தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டிவருவது, பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி துவங்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டுவதோடு, சமூக வலைத்தளத்திலும் பதிந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரஜினி ரசிகர்களும் அண்ணாமலைக்கு ஆதரவாக களமிறங்கி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். அண்ணாமலையின் பிறந்தநாளான இன்று, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கழகங்கள் மறையட்டும் இனி நம்ம கொடி பறக்கட்டும்… welCoMe அண்ணாமலை என குறிப்பிட்டுள்ளதோடு நடிகர் ரஜினிகாந்தும் அண்ணாமலையும் சேர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கூடிய அந்த போஸ்டர்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

Read More

பாஜகவில் இருந்து விலகல் கடிதம் கொடுத்துள்ளதாக கூறப்படும் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை, தனது அடுத்த செயல்திட்டத்தை நாளை அறிவிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி செய்து கொண்டிருந்த அண்ணாமலை, கடந்த 2019ஆம் ஆண்டு தனது ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்து விட்டு, தனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டியில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டதோடு, இளைஞர்களின் முன்னேற்றத்துக்காக செயல்பட்டு வந்தார். தொடர்ந்து 2020-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவருக்கு மாநில துணைத்தலைவர் பதவியும், தொடர்ந்து 2021-இல் மாநிலத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போதைய ஆளும் திமுகவுக்கு எதிராக அண்ணாமலை நடத்திய போராட்டங்களும், அவர் மேற்கொண்ட என்மண் என் மக்கள் யாத்திரையையும் பாஜகவை தமிழக்கத்தின் குக்கிராமங்களில் கொண்டு சேர்த்ததோடு, பாஜகவில் உள்ள இளைஞர்களின் ஆதர்சன நாயகனாக அண்ணாமலை மாறியிருந்தார். 2021 சட்டமன்ற தேர்தல், 2024 நாடாளுமன்ற…

Read More

2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் திமுக தரப்பில் அப்பாவு மற்றும் அதிமுக தரப்பில் இன்பதுரை ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, அப்பாவு 69, 590 வாக்குகள் பெற்றிருந்தார். ஐ.எஸ்.இன்பதுரைக்கு 69,694வாக்குகள் கிடைத்திருந்தது. இதனால் 104 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இந்த வெற்றியை ஏற்றுக் கொள்ள மறுத்த அப்பாவு, தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை எனக் கூறி இன்பதுரை வெற்றிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுபோன்ற தேர்தல் வழக்குகளை 6 மாதத்தில் விசாரித்து தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால் இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கியுள்ளார். 104…

Read More

இமாச்சல் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்து திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இமாசலப்பிரதேசம் சம்பா மாவட்டம் பைர்கர்-சச்-பாஸ் கில்லர் கணவாய் சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி இரவு சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஜீப் ஒன்று, எதிர்பாராதவிதமாக 1,650 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த ஜீப்பின் ஜி.பி.எஸ். கருவி காட்டிய இருப்பிடத்தை வைத்து 2 நாட்களுக்குப் பிறகு கடந்த 31ம் தேதி மீட்புக்குழுவினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜீப் டிரைவர் உட்பட உயிரிழந்த 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த கேட்டரிங் தொழிலதிபர் கார்த்திகேயன் (48), அவரது மனைவி மணிமாலா (42) மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்த இவர்களது மகன் நந்தன் (13) ஆகிய மூவரும் அடங்குவர்.  உயிரிழந்த…

Read More

கடந்த 2022 ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி அதிமுக நிர்வாகி வைரமுத்து வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்து விட்டார். அந்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை மட்டும்  நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஜூன் 23 ம் தேதி நடந்த  பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்களை நிராகரித்ததுடன், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்தப்படும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது,  ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. 2022 ம்…

Read More

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் முத்துசாமி குற்றம்சாட்டியுள்ளார். கலைஞர்  பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில்  உள்ள கருணாநிதியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துசாமி, முத்தமிழறிஞர் கலைஞரின் வழியைப் பின்பற்றித்தான் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கான திட்டங்களை திமுக ஆட்சியில் செயல்படுத்தியதாகக் குறிப்பிட்டார் தொடர்ந்து தவெக ஆட்சி குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விகளுக்கு விடையளித்தார். அப்போது தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அறிவித்த வாக்குறுதியை விவசாயிகளுக்கு நிறைவேற்றாததால்தான், அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறினார். தேர்தல் வாக்குறுதிபடி விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடியை அளிக்க வேண்டும் எனக் கூறினார். இந்த ஆட்சிக்கு ஆறுமாதம் அவகாசத்தை முதலமைச்சர் கொடுத்திருப்பது என்பது அவசர பிரச்சனைக்கு அல்ல. தமிழகத்தில் தொடர்ந்து  சட்ட ஒழுங்கு பாலியல் குற்றச்சாட்டு நடைபெற்று வருகிறது என்பதை கூறி வருகிறோம். சட்டம் ஒழுங்கை சீர்…

Read More