Close Menu
    What's Hot

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூரைச் சேர்ந்த மூவர் ஹிமாச்சலில் உயிரிழப்பு-  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் உடலைப் பார்த்து உறவுகள் கதறல்
    தமிழ்நாடு

    திருப்பூரைச் சேர்ந்த மூவர் ஹிமாச்சலில் உயிரிழப்பு-  ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் உடலைப் பார்த்து உறவுகள் கதறல்

    Editor TN TalksBy Editor TN TalksJune 3, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    009 thirupur death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இமாச்சல் பள்ளத்தாக்கில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்து திருப்பூருக்கு கொண்டு வரப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இமாசலப்பிரதேசம் சம்பா மாவட்டம் பைர்கர்-சச்-பாஸ் கில்லர் கணவாய் சாலையில் கடந்த மாதம் 29ம் தேதி இரவு சுற்றுலா பயணிகளுடன் சென்ற ஜீப் ஒன்று, எதிர்பாராதவிதமாக 1,650 அடி ஆழ பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த ஜீப்பின் ஜி.பி.எஸ். கருவி காட்டிய இருப்பிடத்தை வைத்து 2 நாட்களுக்குப் பிறகு கடந்த 31ம் தேதி மீட்புக்குழுவினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜீப் டிரைவர் உட்பட உயிரிழந்த 8 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் வசித்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த கேட்டரிங் தொழிலதிபர் கார்த்திகேயன் (48), அவரது மனைவி மணிமாலா (42) மற்றும் 7-ம் வகுப்பு படித்து வந்த இவர்களது மகன் நந்தன் (13) ஆகிய மூவரும் அடங்குவர்.  உயிரிழந்த மணிமாலாவின் சொந்த ஊர் திருப்பூர் செங்குந்தாபுரம் ஆகும். அவர் பெங்களூருவில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மகன் நந்தன் ஒரு டேக்வாண்டோ வீரர் ஆவார்.

     இமாச்சலப்பிரதேசம் டல்ஹவுசி பகுதியில் கடந்த மாதம் 27 முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்பதற்காகவே கார்த்திகேயன் குடும்பத்தினர் அங்கு சென்றுள்ளனர். போட்டி முடிந்ததும் சச் கணவாய் பகுதிக்கு மலையேற்றம் செல்லவிருப்பதாக கடந்த 29ம் தேதி உறவினர்களிடம் போனில் பேசியுள்ளனர். அதன்பின்னர்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

    009 thirupur death a

    இதையடுத்து இமாசலபிரதேசத்துக்கு விரைந்த உறவினர்களிடம் பிரேத பரிசோதனைக்குப் பின் 3 பேரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட இவர்களது உடல்கள், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் செங்குத்தபுரம் பகுதியில் உள்ள மணிமாலாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டன.

     அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் உடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து, 3 பேரின் உடல்களும் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகனுக்கு TVK என பெயர் சூட்டல்..! தவெக எம்.எல்.ஏவின் விஸ்வாசம்..!
    Next Article தமிழக பாஜகவில் அண்ணாமலை புயல்: சமரசமா? தனிக்கட்சியா? டெல்லி உச்சமட்டப் பஞ்சாயத்து!
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    July 21, 2026

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    July 21, 2026

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.